இன்று ராஷ்டிரபதி பவனில் ஒரு வரலாற்று காட்சியைக் கண்டு மகிழ்ந்தேன். பிரிட்டிஷ் காலத்தின் சின்னமாக நிற்கும் இந்த அலங்கார குதிரை வண்டி ஒருகாலத்தில் மகாராணி விக்டோரியா, இந்தியாவின் பேரரசி (Empress of India), பயன்படுத்தியதாகும். 1876-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி தனது அரசியல் திறமையால் Royal Titles Act எனும் சட்டத்தை நிறைவேற்றினார். அந்தச் சட்டத்தின் மூலம், விக்டோரியா அதிகாரப்பூர்வமாக “Empress of India” பட்டம் பெற்றார்..மகாராணி விக்டோரியா – பிரிட்டிஷ் பேரரசின் உச்சம், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் அடையாளம். இன்று நான் நிற்கும் இந்த வண்டி, அந்தக் கால வரலாற்றின் சின்னமாகவும் சாட்சியாகவும் நின்றுகொண்டிருக்கிறது. இப்பொழுது அந்த குதிரை வண்டி பார்த்தாலும் ராஜ தோரணை குறையவே இல்லை இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை


No comments:
Post a Comment