வாரிசு இல்லாத பிராமணர் சொத்துக்களை அரசு எடுத்து கொள்ள (escheat rights ) முடியுமா?
1)
இந்து வாரிசுச் சட்டம் 1956 – பிரிவு 29 (Section 29) படி ஒரு சொத்துக்கு
முதல் நிலை வாரிசு, இரண்டாம் நிலை வாரிசு இல்லாமல் உயில் இல்லாமல், தானம்
இல்லாமல் Trust / dedication இன்றி இறந்தால் அவரின் சொத்து அரசை போய்
சேரும். இதனை Escheat என்ற சட்ட வார்த்தையில் சொல்லலாம்“Law does not
recognise ownerless property.”அதாவது சட்டம் உரிமையாளர் இல்லாத சொத்தை
அனுமதிக்காது மேலும் Private owner இல்லையெனில் → State தான் Owner இதுவே
Escheat Doctrine. ஆகும். மேலும்“Where there is a total failure of heirs,
the property vests in the State by escheat.”அதாவது வாரிசுகள் முற்றிலும்
இல்லை என்றால்அரசு தான் ultimate owner என்று உச்சநீதிமன்றம் பல
தீர்ப்புகளில் தெளிவாகச் சொல்கிறது.
2) மேலும் இந்திய அரசியலமைப்பு (Constitution) என்ன சொல்கிறது?என்றால்
Article 296 – Constitution of India “Any property in the territory of
India which, if this Constitution had not come into operation, would
have accrued to His Majesty or the Ruler of an Indian State by escheat
or lapse, shall vest in the Union of India or the State, as the case may
be.”அதாவது இந்தியாவில் உள்ள எந்த சொத்தும் வாரிசு இல்லாததால்
(escheat)அரசுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டால் அது மத்திய அரசு அல்லது
மாநில அரசுக்கு சொந்தமாகும்.அதனால் இன்று வரை வாரிசுகள் உரிமை கோராத
சொத்துக்கள் அரசின் வசமாகும்.வருவாய் துறையில் இந்த சொத்துக்களை பதிவு
செய்து வைக்க G பதிவேடு என்ற பதிவேடு பராமரித்து வந்தார்கள்.
3)
இப்பொழுது நமக்கு எப்படி கான்ஸ்டடியூஷன் இருக்கிறதோ அதுபோல் பிரிட்டிஷ்
அரசாங்கமும் அவர்கள் ஆட்சிக்கான கான்ஸ்டடியூஷன் வைத்து இருந்தார்கள்.
அவர்கள் கான்ஸ்டடிஷனும் அரசுக்குதான் escheat உரிமை என்று நிலை நாட்டியது.
அதேபோல் இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சியிலும், இந்திய அரசர்கள்(Native
Kings) ஆட்சியிலும் இந்த escheat உரிமை அரசுக்கு இருந்தது. ஆனல்
பிராமணர்கள் சொத்தை இன்னொரு பிரமாணருக்குதான் சொந்தமாக்க வேண்டும். அரசு
அந்த நிலத்தை எடுத்து பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர கூடாது என்று
இருந்தது. அதனை மனுஸ்மிருதி என்ற அந்த கால கான்ஸ்டடியூஷன் சொல்லியது.
4)
இப்பொழுது யாரவது தப்பு செய்தால் சட்ட ஆர்வலர்கள் கான்ஸ்டடியூஷன் படி தவறு
என்று சொல்லி எழுதுகிறார்கள் பேசுகிறார்கள். கான்ஸ்டடியூஷன் காப்பாற்றப்
பட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் போராடுகிறார்கள். அதன் மீது உறுதி
எடுக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்கிறீர்கள். அதுபோல் பழைய
கான்ஸ்டடியூஷன் ஆக மனுஸ்மிறுதி இருந்து இருக்கிறது. அந்த காலத்து native
அரசர்கள் முகலாயஅரசர்கள்( பிரமாணர்கள், சூத்திரர்களை பொறுத்து )அதன்படி
தான் நிர்வாகம் செய்து இருக்கிறார்கள்.
5)
இப்பொழுது எப்படி கான்ஸ்டடியூஷன் போற்றிக்கொண்டு இருக்கிறோமோ அது போல
அக்காலத்தில் படித்த அனைவரும் மனு தர்மத்தை போற்றி கொண்டு இருந்தார்கள்.
பிரிட்டிஷ் இந்தியாவில் கூட மனு தர்மம் செல்வாக்கு செலுத்தியது அதன்படி
பிராமணர்களின் சொத்துக்களை அரசு எடுக்கக் கூடாது அது வேறு பிராமணர்கள் இடம்
போய் சேர வேண்டும் என்று நடந்த வழக்கினை பற்றி இந்த கட்டுரையில்
பார்க்கலாம்.
6)
தாவா சொத்து அன்றைய சென்னை ராஜதானியில் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ள
மசூலிப்பட்டினம் என்ற மாவட்டத்தில் இருந்திருக்கிறது. ஒரு பிராமணருக்கு
ஜமீன்தாரால் இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர் ஆண்டு அனுபவித்து வாரிசு
எதுவும் இல்லாமல் இறந்து விட்டார்.அவருக்குப் பிறகு அவரது விதவை மனைவியும்
அதனை அனுபவித்து எந்த வித உயிலும் இல்லாமல் ஜீவ திசை அடைந்து விட்டார்.
இந்த நிலையில் மசூலிப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அந்த சொத்தினை அரசு சொத்தாக
(Escheat)1840 ம் ஆண்டுகளில் மாற்றுவதற்கான வருவாய் நிலையாணையின்
நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
7)
அந்த நேரத்தில் கவளி வெங்கட நாராயணப்பா என்ற பிராமணர் கலெக்டரின்
நடவடிக்கைகளுக்கு எதிராக சென்னையில் உள்ள அன்றைய உயர்நீதிமன்றம் என்று
வைத்துக் கொள்ளலாம் (Sudder Dewanny Adawlut )சர்தார் திவானி அதாலத்
கோர்ட்டுக்கு சென்று முறையிடுகிறார். மனுதர்மப்படி பிராமணர்களின் சொத்து
அரசு எடுக்க கூடாது அது இன்னொரு பிராமணருக்கு தான் சென்று சேர வேண்டும்
என்று வழக்கிடுகிறார். சென்னை நீதிமன்றமும் மனுதர்மப்படி பிராமணரின்
சொத்தை அரசன் எடுக்க முடியாது மசூலிப்பட்டினம் கலெக்டர் அவர்கள் escheat
நடவடிக்கை எடுக்க கூடாது என்று சொல்லிவிட்டது. அதற்குப் பிறகுதான் அரசு
(Collector of Masulipatam) லண்டன் British Privy Council-க்கு
மேல்முறையீடு செய்தது. அதற்கு Privy Council (30.07.1860) கீழ்க்கண்டவாறு
தீர்ப்பிணை அளித்தது.
8. பிரிவி கவுன்சில் வழக்கை கூர்மையாக ஆராய்ந்து மனு தர்ம உரைகளை முழுமையாக வாசித்தது .குறிப்பாக மனு மிதாக்ஷரா,
நாரத ஸ்மிருதி ஆகியவற்றை மேற்கோள் காட்டியது.
அ) Manusmriti – Chapter IX, Verse 189
(மனு 9.189 ) சமஸ்கிருதம் (மூல வாசகம்)
अप्रजस्य ब्राह्मणस्य धनं राज्ञा न ग्रहीतम् ।
ब्राह्मणेभ्यः प्रदातव्यं राजा चेत् पापमाप्नुयात् ॥
ஆங்கிலம் (Literal English Translation)
The property of a Brahmin who dies without issue (heirs)shall not be taken by the King.It should be given to Brahmins;
if the King takes it for himself, he incurs sin.”
ஆ) அதேபோல் மனசு மிருதியைப் போல இன்னொரு ஸ்மிருதியான நாரத ஸ்மிருதி யில் இருந்தும்
சமஸ்கிருதம் (moola வாசகம்)
ब्राह्मणस्याप्रजस्यार्थे
राजा गृह्णाति चेत् स्वयम् ।
ब्राह्मणेभ्यः प्रदातव्यं
अन्यथा पापभाग्भवेत् ॥
ஆங்கிலம் (Court-used sense)
“If there be no heir to a Brahmin’s property,the King may take it;
but he must give it to Brahmins,otherwise he is tainted with sin.”
இ)
பிராமணரின் சொத்தை அரசன் எடுத்தால்அதை தகுதியுள்ள பிராமணர்களுக்குக்
கொடுக்க வேண்டும். இல்லையெனில் அரசன் பாவம் அடைவான். என்று மனு சொல்கிறது.
இதன் மூலம் மனு எந்தவித சட்ட உரிமையை (legal right) உருவாக்கவில்லை.அது
அதிகபட்சம் ஒரு ஒழுக்க/மத கடமையை (moral or religious duty) தான்
சொல்கிறது.“பாவம்” = ஆன்மீக கருத்து அது சட்டத்தடை அல்ல அது அரசின் Escheat
உரிமையை ரத்து செய்யாது என்று முடிவெடுத்தனர்.
ஈ
) மேலும் Privy Council did consider Manu Dharma,but clearly
held that it creates only a moral obligationand not a legallyen
forceable baragainst the sovereign right of escheat.”
அதாவது
மனு தர்மம் அரசன் முதலில் சொத்தை எடுப்பதை மறுக்கவில்லை.ஆனால் அரசன் அதை
எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து மட்டுமே பேசுகிறது என்று
தீர்ப்பில் சொன்னது.
9)
இப்பொழுது escheat உரிமை அரசு அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே
தான் தனிப்பட்ட நபர்கள் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டு உயில்கள் எழுதி
விடுகிறார்கள். வாரிசுகள் இல்லாமல் இருக்கின்ற குடும்பங்களில் அந்தந்த
ஆன்மீக ஜாதி மடங்கள் உள் நுழைந்து சொத்துக்களை தங்கள் சாதி ஆன்மீகமட
சொத்துக்களாகவே உயில் மூலம் மாற்றி வைத்து கொள்கின்றார்கள்.
(Collector of Masulipatam v. Cavaly Vencata Narainapah,
30 July 1860, Privy Council)
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு+91 86100 63410

No comments:
Post a Comment