Wednesday, 28 January 2026

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

 

 


அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.
பதிவு – 8(2)
நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!
16. திட்டமிடல் மற்றும் நகர அபிவிருத்தித் துறையின் கீழ் செயல்படும் DTCP/ LPA/ CMDA/ CORPORATION/ MUNICIPALITY/ TOWN PANCHAYAT அங்கீகார அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 38 அதிகாரிகள், விண்ணப்பக் கோப்புகளை பரிசீலிக்கும் போது, விதிகள்-துறையினரின் விருப்பப்படி INTERPRETATION செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரே சட்ட விதி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறையில் விளக்கப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் குழப்பம், பிளானர்கள்/ பொறியாளர்கள் மீது தேவையற்ற அழுத்தம், கோப்புகள் பரிசீலனையில் தேவையற்ற தாமதம், தொழில்சீரழிவு மற்றும் முதலீட்டு தடங்கல் ஆகியவை உருவாகின்றன. எனவே, விதிகள் தெளிவாக, ஒரே மாதிரியாக, அறிகின்ற, அமல்படுத்துகின்ற வகையில் STANDARD OPERATING GUIDELINE (SOG) வடிவில் வெளியிடப்பட வேண்டும். குறிப்பாக ACCESS ROAD WIDTH, APPROACH ROAD OWNERSHIP, REVENUE APPROACH VS LAYOUT INTERNAL ROADS, NATHAM / GRAMA NATHAM / PATTA ROADS, PRIVATE LAYOUT ROAD USAGE போன்ற முக்கிய அம்சங்களில், அனைத்து அதிகாரிகளும் ஒரே விளக்கக் கையேட்டின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். அதிகாரியின் தனிப்பட்ட கருத்து/ விருப்ப நடைமுறையை நிறுத்துவதற்கு வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகின்றோம்.
17. ADVOCATE LEGAL OPINION-ஐ DTCP அதிகாரிகள் மறுஆய்வு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். தற்போது,விண்ணப்பதாரர்கள் SENIOR ADVOCATE, GOVERNMENT PLEADER, PANEL LAWYERS மூலம் பெறும் LEGAL OPINION-ஐ DTCP அதிகாரிகள் மீண்டும் மறுஆய்வு செய்து சட்டப் பிரிவுகளை கேள்வி கேட்டு கோப்புகளை நிலுவையில் வைப்பதற்பகாகவே காரணம் தேடுகின்றனர். இந்த நடைமுறை,தொழில் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. தொழில்நுட்பஅதிகாரியின் தலையீடு ஏற்படுத்துகிறது. அங்கீகார செயல்முறையை தேவையற்ற முறையில் சிக்கலாக்குகிறது. எனவே, LEGAL OPINION வழங்குவது – சட்ட வல்லுநர்களின் கடமை அதனை மதித்து செயல்முறை முன்னேற்றம் செய்ய வேண்டும். இது போன்ற நேர்வுகளில் DTCP/ CMDA அதிகாரிகள் சட்ட விளக்க மறுஆய்வு செய்யக் கூடாது. சந்தேகத்திற்குரிய வழக்குகளில் —தனி சட்ட ரெஃபரன்ஸ் கோர வேண்டும். இவ்வாறான வழக்குகளில், சட்டப் பிரச்சினை எழுந்தால் கோப்பை LAW DEPARTMENT/ GOVERNMENT LEGAL CELL/ HR&CE/ REGISTRATION/ REVENUE LEGAL CELL க்கு அனுப்ப வேண்டும். அங்கீகார அதிகாரி தனிச்சையாக சட்ட விளக்கம் அளிக்கக் கூடாது. சொத்தில் வழக்கறிஞர் கருத்துரை கொடுத்ததும் வில்லங்கம் இருக்கிறது என்று உணர்ந்ததால் தகுதி வாய்ந்த சட்ட அதிகாரிகளிடம் முன் அனுப்ப வேண்டும். ADVOCATE OPINION-ஐ 39 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் எதிர்த்து முடிவு எடுக்கக் கூடாது என்பதற்கு ஒரு வழி வகையினை உருவாக்க FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
18. நகர்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்கு மனைப்பிரிவு மற்றும் கட்டிடத்திட்ட அனுமதி வழங்கும் அதிகார வரம்பை உயர்த்தி வழங்குவதற்கு செயல்முறை உத்தரவுகளை (தற்பொழுது சென்னை மாநகராட்சிக்கு 5ஏக்கர் வரை வீட்டுமனைப்பிரிவு வழங்கும் அதிகாரம் உள்ளது. இதனை போன்று நகராட்சிக்கு 2.5 ஏக்கர் வரைக்கும், பேரூராட்சிக்கு 1.5 ஏக்கர் வரைக்கும், ஊராட்சிக்கு 1-ஏக்கர் வரைக்கும் மனைப்பிரிவு அனுமதி வழங்கும் அதிகாரத்தையும், இதில் அனுமதிக்கப்படும் தளப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில் கட்டிடத்திட்ட அனுமதியை வழங்கும் அதிகார வரம்பையும்) மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்.
19. மனைப்பிரிவு அனுமதி, கட்டடத்திட்ட அனுமதி, நிலவகைப்பாடு மாற்றம் மற்றும் உட்பிரிவு அனுமதி பெற விண்ணப்பிக்கும், விண்ணப்பத்தின் மீது ஒவ்வொரு முறையும் இரண்டு மூன்று நிலைகளை கடந்து, அதாவது உதவித் திட்டமிடுபவர், துணைத் திட்டமிடுபவர், மூத்தத் திட்டமிடுபவர், தலைமைத் திட்டமிடுபவர், தலைமை நிர்வாக அதிகாரி, உறுப்பினர் செயலர் என்று மூன்று நான்கு முறை மேற்கண்ட அதிகாரிகளின் நிலையை கடந்து சென்று அவர்களிடம் அனுமதி பெற்று திட்டம் தயாரிக்க வேண்டிய சூழல் தற்பொழுது நடைமுறையில் இருக்கிறது. இதனால் காலதாமதம் நேரம் காலம் உள்ளிட்ட வீண் விரயம் அதிகம் ஏற்படுகிறது. இதனை மாற்றி அமைத்து ஒரே ஒரு முறை மாத்திரம் அனுமதி பெற்று திட்டம் தயாரித்து அனுமதி வழங்கும் வகையில், வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டுகிறோம்.
20. மனைப்பிரிவு, கட்டிடத்திட்ட அனுமதி நிலவகைப்பாடு மாற்றம் உட்பிரிவு போன்ற அனுமதி பெறும் இடங்களில், டி.டி.சி.பி மற்றும் சி.எம்.டி.ஏ-வால் கொள்கை ஓப்புதல், திட்ட அனுமதி, தொழில்நுட்ப அனுமதி ஆகியவை மட்டுமே வழங்கப்படுகிறது. இறுதி ஒப்புதல் வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.மேற்கண்ட பிரதிநிதிகள் யாரும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இல்லை. மேலும், எண்ணற்ற பிரதிநிதிகள் போதிய, சட்டதிட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்களும் இல்லை. மேற்கண்ட உள்ளாட்சிக்குச் செலுத்த வேண்டிய அனுமதிக் கட்டணங்களை முறையாக அரசு கஜானாவில் அவர்கள் சேர்ப்பதும் இல்லை. குறிப்பாக படப்பை, சிட்லபாக்கம் உட்பட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 40 சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான உள்ளாட்சி அலுவலகங்கள் மேற்கண்ட கட்டணங்களை பெருமளவில் அரசு கஜானாவில் சேர்க்காமல், போலி இரசீது மூலம் அரசினை ஏமாற்றி வருகின்றனர். ஆகவே, உள்ளாட்சிக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்களை ஒற்றை சாளரமுறையில் இணையதளம் வாயிலாகவே செலுத்தும் வகையில் வழிவகை செய்யவேண்டும். மேலும், நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் இறுதி ஒப்புதலையும் ஒற்றைச் சாளர முறையிலேயே இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்து, ஒரு வார காலத்திற்குள் அனுமதி பெறும் வகையில் வழிவகை செய்யவும் வேண்டுகிறோம்.
21. EWS-மனைகளில் ஆழ்குழாய் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டிக்கு இடையே உள்ள தூரம் தேசிய கட்டிட குறியீடு 2016-க்கு உட்பட்டு அமைய முடியாது. குறைந்த இடைவெளியில் இவற்றை ஒவ்வொரு வீட்டிற்கு அமைக்கும் போது சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் EWS மனைகளுக்கு மட்டும் பொது உபயோக பகுதியில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளாட்சியின் செலவிலோ அல்லது அபிவிருத்தியாளரின் செலவிலோ அமைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
.
22. மனை மற்றும் கட்டிடத் திட்ட அனுமதி பெறும்போது திறந்த வெளி நிலம் 10% கொடுத்த பிறகும் மின்துறைக்கும் உள்ளூர் பஞ்சாயத்து வளர்ச்சிக்கும் மேலும் ஒரு சதவீதம் நிலம் கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது (இந்த ஒரு சதவீதத்தை திறந்தவெளி நிலம் 10-இல் இருந்து எடுத்துக் கொள்ளும் வகையில்) இதனை ரத்து செய்ய வேண்டுகிறோம்.
23. 3. 20’(6.10m), 30’(9.14m), 40’(12.19), 50’(15.24), 60’(18.30), 80’(24.38),100 (30.50) என்ற பிரிட்டிஷ் அளவுகளுக்கு இணையான மெட்ரிக் அளவுகளை Building and Road width approval -களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
24. 20’ அடிகள் அகலம் மற்றும் 16’( அடிகள் ) அகலம் கொண்ட Public Roadகளில் இருந்தும் இணைப்பு ஆகும். மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கிட வேண்டியதக்க ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம்.
25. முதல் 3000 சதுர மீட்டருக்கு OSR இல்லை (CMDA வுக்கு 5.8.1975), பிறகு 3000 சமீ-லிருந்து 10,000 சதுர மீட்டருக்கு RATIO படி OSR போடும் CMDA நடைமுறையை அனைத்து லோக்கல்பாடிகளிலும் ( உள்ளூர் அமைப்புகளில்) நடைமுறைப்படுத்தவேண்டுகிறோம். 41மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள்.
26. பஞ்சாயத்து யூனியங்களில் அனுமதி வழங்கப்படும் கட்டிடத்தின் கடைசியில் கிராம பஞ்சாயத்துத் தலைவர்களிடம் சென்று வாங்கிட வேண்டிய நடைமுறையை மாற்றி அமைத்து ஆன்லைன் மூலமே நகர்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சியில் இறுதி ஒப்புதலை நடைமுறைப்படுத்த வேண்டும்.
27. மனை வரன்முறை சட்டத்தின் கீழ் தனிமனைக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் வீண் விரயத்தை தவிர்த்து எளிய வகையில் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
28. சென்னை மாநகராட்சியைப் போன்று பிற நகர்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஒரு ஏக்கர் வரைக்கும் உள்ள இடங்களை 30 அலகுகள் வரை உட்பிரிவு அங்கீகாரம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
29. ஒரு ஹெக்டேர்க்குள் அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாக சலுகை பெறும் வகையில், ஒரே விண்ணப்பதாரர், தமது பெயரில் தொடர்ந்து மீண்டும் விண்ணப்பிக்க நேரிடும் இடங்களில், இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கிற கால அவகாசத்தை நிர்ணயம் செய்ய வேண்டுகிறோம்.
30. நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் அபிவிருத்தி மற்றும் கட்டுப்பாடு விதிகளின்படி தமிழக முழுவதும் DTCP அனுமதி பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் உள்ள சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர் இதனை குடியிருப்பு மனையாக தற்போது மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது DTCP புதிய விதிகளின்படி திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். அப்படி திறந்தவெளி நிலம் ஒதுக்கவில்லை எனில் அப்பாவி பொதுமக்களின் மனுவினை நிராகரிக்கின்றனர் அரசு இதனை கவனத்தில் கொண்டு பழைய விதிகளின்படி அனுமதி பெற்ற மேற்படி ஒதுக்கீடுகளை, புதிய விதிகளின்படி திறந்தவெளியில் நிலத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தாமல் நிலப் பயன்பாட்டினை மட்டும் மாற்றம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்.
31.அஞ்சு சென்ட் பத்து சென்ட் பட்டா நிலங்களாகவும் வாங்கிவிட்டு மனையாகவும் வாங்கிவிட்டு அதனை அங்கீகாரம் வாங்க முடியாமல் பத்திர பதிவு செய்ய முடியாமல், வீடு கட்ட முடியாமல் எந்தவித அபிவிருத்தியும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இடம் மனைகளின் அங்கீகாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம். அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு.
32. விரிவாக்கப்பட்ட மாநகராட்சியில் நிறைய கிராமங்கள் நகரத்தோடு இணைக்கப்பட்டு இருக்கும். அந்த பகுதிகளில் திட்ட அனுமதிக்குச் செல்லும் பொழுது உள்ளாட்சி நிர்வாகம் எப்பொழுது மாநகராட்சி ஆனதோ அதில் இருந்து நிலவரி கேட்காமல் பின்னோக்கி 15 ஆண்டுகளுக்கு எப்பொழுது நகரம் உருவாக்கப்பட்டதோ அதில் இருந்து நகர்புற வரி கட்ட வேண்டும் என்று வலியுறு த்துவது தவறான ஒன்றாகும். மேற்படி திட்டப் பகுதி கிராமமாக இருந்த பொழுது அப்போதைய வரிகளை முழுமையாக கட்டி விட்ட பிறகும் நகர்புறத்தில் இணைத்து விட்டதால் பின்னோக்கிய காலத்துக்கு நகர்புற வரி கட்டச் சொல்லக் கூடாது என்று தெரிவித்து கொள்கிறோம்.
33. இன்றைய சூழ்நிலையில் சாதாரண சாமானிய மக்களும், தங்களின் இல்ல கனவுகளை நினைவாக்கிக் கொள்ளும் வகையில், சிறிய அளவிலான வீட்டு மனைகள் வீட்டு வசதித் துறையில் உள்ளது போன்று, பொருளாதார நலிந்த பிரிவினர் (Economically Weaker Section) 440 சதுர அடி, 600 சதுர அடி,, 800 சதுர அடி என்ற அளவில் வீட்டுமனைப் பிரிவை டிடிசிபி அதிகாரக் குழுவின் ஒப்புதல் இன்றி, துணை அதிகார குழுக்களுக்கு உள்ள அதிகாரத்தின் படி 100% முழுவதுமாக ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
34. பெரிய மனைப்பிரிவுகளில் பூங்கா அமைப்பதற்கான குறைந்தபட்ச அகலம் 10 மீட்டர் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் மேலும் பூங்காவை சுற்றி அனைத்து பக்கங்களிலும் ரோடு அமையும் பட்சத்தில் மேலும் பூங்கா முக்கோணமாக அனுமதிக்க வேண்டுகிறோம்.
35. OSR நிலம் விளையாட்டு இடமாக அல்லது பூங்காவாக பயன்படுத்தப்படும் பொழுது அதில் ஓரத்தில் சிறிய மேடை அமைக்க அனுமதிக்கலாம் அதற்கு மின் இணைப்பு பெறவும் அனுமதிக்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
அடுத்த பதிவில் தொடரும்.....................

பதிவுபதிவு – 8(1) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்! –

 


 

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.
பதிவு – 8(1)
நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!
1. பத்தாயிரம் சதுர மீட்டருக்குள் மேம்படுத்தப்படும் புதிய வீட்டுமனைப் பிரிவுகளில் திறந்த வெளி நிலம் ஒதுக்குவதில் இருந்து விலக்கு அளித்து அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி அங்கீகாரம் வழங்குவதற்கு வழிவகை செய்யுமாறு FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகின்றோம்.
2. தமிழகத்தில் உள்ள அந்தந்த நகரங்களில் வசிக்கும் பொதுமக்களின் வீட்டுமனை கனவுகள் நினைவாகும் வகையில் ஊராட்சியை போன்று நகர்ப்புறங்களிலும் அணுகு சாலையின் அளவு குறைந்தபட்சம் 6.0 மீட்டர் என தளர்வளித்து,மேற்கண்ட அரசாணையில் (G.O.NO.58/2024) திருத்தம் கொண்டு வந்து,(புதிதாக ஏற்படுத்தும் வீட்டுமனை பிரிவுக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளின்படி அனுமதித்து) நடைமுறைப்படுத்த வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
3. அதே போன்று தமிழகம் முழுவதும் அரசாணை எண் 78-ல் குறிப்பிட்டுள்ளபடி மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெறப்பட்டுள்ள வீட்டு மனைப்பிரிவின் 12அடி,15அடி,16அடி,18அடி மற்றும் 20 அடி உள்ள சாலைகளின் வழியாக சென்று, பின்புறம் அமைந்துள்ள பெரும் நிலங்களையும், அதேபோன்று நகர்ப்புறங்களில் காலம் காலமாக பயன்பாட்டில் அமைந்துள்ள 16 அடி,18 அடி மற்றும் 20 அடி சாலைகள் வழியாகவும் சென்று, பின்புறம் அமைந்துள்ள பெரும் நிலங்களையும், புதிய விதிகளின்படி அபிவிருத்தி செய்ய வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகின்றோம்.
4. புதிய வீட்டுமனைப்பிரிவுகளை அமைப்பதற்கான திறந்தவெளி நிலம் (OSR) சம்பந்தமான, நகர் ஊரமைப்பு இயக்குனர் அவர்களின் வழிகாட்டு சுற்றறிக்கை எண் NO.4367/2019/TCP2 நாள்: 14.08.2021 படி வீட்டுமனை பிரிவுக்கான (OSR) திறந்தவெளி நிலத்திற்கு ஈடாக சாலைகள் நீங்கலாக விற்பனைக்குரிய நிலத்திற்கு, நிலமாகவோ அல்லது அதற்குண்டான சந்தை மதிப்பில் 10% சதவீதம் கட்டணமாகவோ செலுத்தும் வகையில் வழிவகை செய்து தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் அதே விண்ணப்பதாரர் அவர் பெயரில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 30 உள்ள மேற்கண்ட வீட்டுமனை பிரிவிற்கு அருகிலுள்ள மிகை நிலத்தில் மேற்கண்ட OSR பயனை அடையும் வகையில் கூடுதலாக வீட்டுமனை பிரிவை ஏற்படுத்த எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்கின்ற தெளிவுரை இதில் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்த விண்ணப்பதாரரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அருகில் உள்ள நிலத்திற்கு மேற்கண்ட வகையில் (OSR) நிலம் சம்பந்தமான பலனை அடையும் வகையில் வீட்டுமனை பிரிவு அமைக்க கால அவகாசமும் இதில் குறிப்பிடப்படவில்லை. ஒரு ஹெக்டேருக்குள் மேற்கண்ட வகையில் அருகருகே அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பதாரர் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இடங்களில் இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கின்ற கால அவகாசத்தையும் அதே விண்ணப்பதாரர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இடங்களில் ஓராண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கும் வகையிலும், கால அவகாசத்தை நிர்ணயிக்க வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகின்றோம்.
5. தமிழகத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் வீட்டுமனை பிரிவுகளுக்கு DTCP அனுமதி வழங்கி வருகிறது. இதன் விதிகளின்படி தமிழகம் முழுவதும் DTCP அனுமதி பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் விண்ணப்பதாரர்களால் விற்பனை செய்யும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை, அது குறித்த தன்மை அறியாமல், சந்தை மதிப்பை விட குறைவான விலைக்கு கிடைக்கிறது என்கிற அடிப்படையில், மேற்கண்ட வீட்டுமனை அபிவிருத்தியாளர்களிடமிருந்து, அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர். இதனை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் தற்போது குடியிருப்பு மனையாக நில வகைப்பாடு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது, தற்போதுள்ள (DTCP) நகர் ஊரமைப்புச் சட்டத்தின் புதிய விதிகளின்படி, ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள திறந்தவெளி நிலம் போக, தற்பொழுது உள்ள புதிய விதிகளின் படி தேவையான அளவிற்கு திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துவதோடு, அப்படி தேவையான திறந்தவெளி நிலம் ஒதுக்கவில்லை எனில், அப்பாவி பொதுமக்களின் நில வகைப்பாடு மாற்றம் கோரிய விண்ணப்பத்தினை நகர் ஊரமைப்பு துறையினர் நிராகரிக்கின்றனர். மேற்படி ஒதுக்கீடுகளுக்கு DTCP புதிய விதிகளின்படி தேவையான திறந்தவெளி நிலத்தை ஒதுக்க வேண்டும் எனில், அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள மொத்த நிலத்தையும் 31 மாநாட்டில்–நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் உள்ளாட்சிக்கு எழுதிக் கொடுத்து, இழக்க நேரிடும். ஆகவே, DTCP பழைய விதிகளின்படி அனுமதி பெற்ற மேற்படி ஒதுக்கீடுகளை, நில வகைப்பாடு மாற்றம் செய்து தரக்கோரி விண்ணப்பித்தால், தற்போதுள்ள DTCP புதிய விதிகளின்படி திறந்தவெளி நிலத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தாமல், ஏற்கனவே உள்ளதை உள்ளபடியே பாவித்து நில வகைப்பாட்டினை மட்டும் மாற்றம் செய்வதற்கு தேவையான கட்டணத்தை பெற்றுக் கொண்டு, நில பயன்பாடு வகைப்பாட்டினை மாற்றம் செய்து கொள்ளும் வகையில் வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
6. தமிழகத்தில் மனைப்பிரிவு அனுமதிகளை (LAYOUT APPROVAL) CMDA மற்றும் DTCP துறைகளால் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தால் இறுதி அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு மனைப்பிரிவு (LAYOUTAPPROVAL) இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்போது, உள்ளாட்சிகளின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு குடிநீர் விநியோகம், பூங்கா, பொது பயன்பாடு மற்றும் மின்சாரம் பயன்பாடு போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே CMDA மற்றும் DTCP துறையால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்ட அந்த மனைப்பிரிவுக்கு (LAYOUT APPROVAL) உள்ளாட்சிகள் இறுதி ஒப்புதல் வழங்குவது வழக்கம். தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசாணை எண்:181/2020 இன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் (மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில்) அபிவிருத்தி செய்யப்படும் திட்டங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளுக்கான செலவீட்டுத் தொகையை நகராட்சி நிர்வாகம் கணக்கீடு செய்து விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் அதற்குரிய கட்டணத்தை நேரடியாக சம்பந்தப்பட்ட நகர்ப்புற நிர்வாகத்திற்கு செலுத்தக்கூடிய வகையில் இருந்தது. இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதின் அடிப்படையில் FAIRA கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையானது, இதனை கவனத்தில் கொண்டு, சில நிபந்தனைகளை மாற்றியமைத்து அரசாணை எண்:141 நாள்: 16.07.2022 ஆக வெளியிட்டு இருந்தது. இந்த அரசாணையில் மனைப்பிரிவுகளில் அடிப்படை கட்டமைப்பு திட்டப் பணிகளை உள்ளாட்சி நிர்வாகம் (மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியோ) சம்பந்தப்பட்ட அபிவிருத்தியாளார்களிடமிருந்து உரிய கட்டணத்தை பெற்றுக் கொண்டு கட்டமைப்பு பணி மேற்கொள்ளலாம் அல்லது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 32 அபிவிருத்தியாளர்களே மனைப் பிரிவிற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சியில் மனைப் பிரிவுகளை மேம்படுத்துவது குறித்து இந்த அரசாணையில் ஷரத்துகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படை கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் இனங்களுக்கான கட்டணங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் சுற்றறிக்கை ந.க. எண் 4870/2024, நாள் 10.01.2025, இல் மேற்கண்ட அரசாணை எண்:181/2020 இல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி மனைப் பிரிவை மேம்படுத்திட தேவையான அடிப்படை கட்டமைப்புகளுக்கான தார்சாலை அமைத்திட அலகுத்தொகையாக சதுர மீட்டருக்கு ரூ.1600/- எனவும், மழைநீர் வடிகால் இரு புறங்களுக்குமான வசதிக்கு அலகுத்தொகையாக மீட்டருக்கு ரூ.23,000/- எனவும், தெருவிளக்கு வசதிக்கான அலகுத்தொகையாக ரூ.15,000/- எனவும், குடிநீர் வசதிக்கான அலகுத்தொகையாக ரூ.30 லட்சம் எனவும், சிறு பாலங்களுக்கான (1.5மீ இடைவெளி) அலகுத்தொகையாக ரூ.7லட்சம் எனவும் நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் தொகை சந்தை மதிப்பை விட மூன்று மடங்கு வரை உயர்வாக இருக்கின்றது. இதன் அடிப்படையில் கிராமப்புறங்களில் வீட்டு மனைகளை அபிவிருத்தி செய்து விற்பனை செய்ய இயலாத சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் ஊராட்சி நிர்வாகமும் மேற்கண்ட அரசாணை எண்:141 இல் தெரிவித்துள்ள ஷரத்துகளின்படி ஊராட்சி பகுதிகளில் அபிவிருத்தி செய்யக்கூடிய மனைப்பிரிவு திட்டங்களுக்கு விண்ணப்பதாரர் ஊராட்சி நிர்வாகத்திற்கு உரிய அடிப்படை கட்டமைப்பிற்கான கட்டணத்தை நேரடியாக செலுத்தும் வகையிலோ, அல்லது வீட்டுமனைப் பிரிவிற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை அபிவிருத்தியாளர்களே மேற்கொள்ளும் வகையிலோ உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு, தாங்கள் வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
7. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் அபிவிருத்தி செய்யப்படும் மனைப் பிரிவுகளுக்கு அணுகு சாலையானது குறைந்தபட்சம் 7.0 மீட்டர் இருக்க வேண்டும் அரசாணை எண் 58/2024) என்பதனை 6.0 மீட்டர் என மாற்றி அமைக்க உரிய வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
8. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் அரசாணை எண். 79/2017 இல் பாரா 9 இல்“நகர் ஊரமைப்பு இயக்குநரிடமிருந்து செய்யக் கருதியுள்ள33மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் மேம்பாடு குறித்து முன் அனுமதி பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, நிலப்பயன் மாற்ற கட்டணமாக 1899 ஆம் ஆண்டு இந்திய முத்திரைச்சட்டம், (மத்திய சட்டம் 2/1899) பிரிவு 47- உட்கூறு AA இன் கீழ், சந்தை மதிப்பில் 3 விழுக்காடு நிர்ணயம் செய்து, அதனை வசூலித்து, அரசுக் கணக்குத் தலைப்பின் கீழ் வரவு வைத்து செய்யக் கருதியுள்ள மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ள உரிய அனுமதி அளிக்க வேண்டும்”. எனக் குறிப்பிட்டுள்ளது. இதில் மேற்கண்ட நிலப் பயன் மாற்றக் கட்டணம் என்பது நகர் ஊரமைப்பு இயக்குனரிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ள வரைபடத்தில் விற்பனைக்குரிய பகுதிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது பொது பயன்பாடு, சாலைகள், மின்இணைப்பு, திறந்தவெளி நிலம் பூங்கா உள்ளிட்ட அனைத்திற்கும் கட்ட வேண்டுமா என்கிற சரியான தெளிவுரையை வழங்க FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
9. அதேபோன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்கிட 79/2017 -ல் விதி (3)-ல் குறிப்பிட்டுள்ள படி மனை ஒன்றுக்கு கூராய்வு கட்டணம் ரூபாய்.1000/- என்பதை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும் என FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
10.DTCP/ CMDA சம்பந்தப்பட்ட அரசாணை அரசிதழில் வெளிவந்தவுடன் இணையத்தில் செயல்பாட்டிற்கு வரும் வகையில் உடனடியாக பதிவேற்றம் செய்து நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
11. தமிழகத்தில் மனைப்பிரிவு அனுமதிகளை (LAYOUT APPROVAL) CMDA மற்றும் DTCP துறைகளால் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தால் இறுதி அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு மனைப்பிரிவு (LAYOUT APPROVAL) இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்போது, உள்ளாட்சிகளின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு குடிநீர் விநியோகம், பூங்கா, மின்சாரம், பொது பயன்பாடு போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே CMDA மற்றும் DTCP துறையால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்ட அந்த மனைப்பிரிவுக்கு (LAYOUT APPROVAL) உள்ளாட்சிகளினால் இறுதி ஒப்புதல் வழங்குவது வழக்கம். இந்த அடிப்படை கட்டட அமைப்புகளில் மழைநீர் வடிகால், மேல் தேக்க குடிநீர் தொட்டியும் உடனடியாக வீடுகட்டி குடியேறும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 34 வகையில் நகர்ப்புறங்களில் ஏற்படுத்தக்கூடிய வீட்டுமனை பிரிவுகளில் ஏற்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கிராமப்புறங்களில் ஏற்படுத்தும் வீட்டுமனை பிரிவுகளுக்கும் குடிநீர் வசதியும் மழைநீர் வடிகாலும் உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்பது ஏற்புடையதாகவோ, மக்களுக்கு பயனுள்ளதாகவோ அமையாது. குடிநீர் மேல் தேக்கத் தொட்டி ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு கூடுதல் பரப்பளவுடன் அமைக்கப்படுகின்ற வீட்டுமனைப் பிரிவுகளில் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதைவிடுத்து அரை ஏக்கரில் ஏற்படுத்தக்கூடிய சிறிய வீட்டுமனை பிரிவுகளுக்கும் மேல் தேக்க குடிநீர்த்தொட்டியை ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வீட்டுமனை பிரிவுகளுக்கும் அதே கொள்ளவுகளில் தொட்டி ஏற்படுத்துவது அபிவிருத்தியாளர்களுக்கு பெரும் செலவினங்களை கொடுக்கும். இப்படிப்பட்ட சிறிய மனைப் பிரிவுகளில் மனைகளை வாங்குகின்ற போது பொதுமக்களின் தலையில் தான் இந்த செலவினங்களையும் கட்ட வேண்டியதாக இருக்கும், பொது மக்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தும். ஆகவே இப்படி சிறிய அளவில் வீட்டுமனை பிரிவுகளை ஏற்படுத்துகின்றவர்களுக்கு மேல் தேக்க குடிநீர் த தொட்டி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கவும், அல்லது இதற்குண்டான கட்டணத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சியில் குறைந்த அளவில் கட்டும் வகையிலும், அல்லது சிறிய அளவில் மேம்படுத்துகிற மனை பிரிவுகளுக்கு பிளாஸ்டிக் சின்டெக்ஸ் த தொட்டி அமைக்கும் வகையிலும் வழிவகை செய்யவும் அரசு பரிசீலிக்கலாம். சிறிய வீட்டுமனை பிரிவுகளில் மழைநீர் வடிகால் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துவதில் இருந்து விலக்களிப்பதற்கு தாங்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு, உரிய வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
12. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகம் மூலம் துணை அதிகார குழுக்களான நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்கு கட்டிட திட்ட அனுமதி வணிக வளாகங்கள் மற்றும் மனைப்பிரிவு அனுமதி உள்ளிட்ட அனுமதிகளை வழங்குவதற்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி 24 சென்ட்க்கு கீழ் அமைந்துள்ள நிலங்களில் எட்டு அலகு வரை மனைப் பிரிவினை உட்பிரிவு அனுமதியாக வழங்குவதற்கு மேற்கண்ட உள்ளாட்சிகளுக்கு அனுமதி உள்ளதாக தெரிவித்து, மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சித் துறைகள் மனை உட்பிரிவு அனுமதி வழங்கி வருகிறார்கள். இந்த உட்பிரிவு மனைப்பிரிவு அனுமதியின் அடிப்படையில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமும் பதிவு 35 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் பதிவு அலுவலகங்கள் மூலம் பதிவு பணியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபகாலமாக பதிவுத்துறையில் மேற்கண்ட உட்பிரிவு அனுமதிகளை பதிவு செய்ய இயலாது என தெரிவித்து பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை திருப்பி அனுப்புவதோடு மட்டுமில்லாமல் பதிவு செய்வதை நிராகரிக்கின்றனர். ஆகவே தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்: 78, நாள்: 04.05.2017 இல் சட்டப்பிரிவு 2(2), மனை உட்பிரிவு வழங்குவதற்கு தகுதி வாய்ந்த அதிகாரி மாநகராட்சிகளில் ஆணையாளர், நகராட்சிகளில் ஆணையாளர், பேரூராட்சிகளில் செயல் அலுவலர் மற்றும் ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சி) என குறிப்பிட்டுள்ளது. மேலும் சட்டப்பிரிவு 8இல் சென்னை பெருநகர திட்டப்பகுதியில் எட்டு பிரிவுகளுக்கு மேல் மனைகளாக பிரித்தால் தான் மனைப்பிரிவாக கருத முடியும் எனவும், சட்டப்பிரிவு (16) இல் மனை உட்பிரிவு என்பது சென்னை பெருநகர திட்டப்பகுதியில் 8 உட்பிரிவு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், சென்னை பெருநகர திட்டமில்லாத பிற பகுதியில் புதிய சாலைகள் மற்றும் தெருக்கள் உருவாக்காமல் அமைக்கும் மனைப்பிரிவு எனவும் உள்ளது. மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலரின் செயல்முறை ஆணை எண். Proce.No.RT/15631/2009, இன் மூலம் மேற்கண்ட 24 சென்ட்க்குள் எட்டு அலகுகள் வரை அமையும் மனை பிரிவிற்கு அனுமதி வழங்கும் அதிகார வரம்பு சம்பந்தப்பட்ட துணை அதிகாரக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் அனுமதி தரும் மனை உட்பிரிவு அனுமதிகளை தற்போது பதிவுத்துறை பதிவு செய்ய மறுக்கிறது. ஆகவே மேற்கண்ட மனை உட்பிரிவு அனுமதி வழங்கும் அதிகார வரம்பு சம்பந்தமாக சரியான வழிகாட்டி நெறிமுறையை அரசாணையாகவோ, அல்லது சட்ட திருத்தமாகவோ, அல்லது சுற்றறிக்கையாகவோ வெளியிட்டு விரைவில் சரியான நடவடிக்கையை மேற்கொண்டு தகுந்த தீர்வினை தாங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், மேலும் தற்போது வரை மனை உட்பிரிவு அனுமதி பெற்ற மனைகளை எல்லாம் பதிவு செய்வதற்கு தாங்கள் உரிய வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
13. அனுமதியற்ற மனைப்பிரிவில் விற்கப்பட்ட மனைகளுக்கெல்லாம் பட்டா மாற்றம் செய்துவிட்டு விற்கப்படாத மனைகளுக்கு மாத்திரம் தற்போதைய உரிமையாளர் பெயரில் பட்டா மாற்றம் செய்து சமர்ப்பித்தால் தான் கொள்கை அளவிலான ஒப்புதல் வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் வழங்கப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 36 என்பது ஏற்புடையதாக அல்ல, மேலும் அது நடைமுறைக்கு சாத்தியமும் அல்ல. ஆகவே இது போன்ற நேர்வுக்கு, கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்குவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வழி வகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
14. தமிழகம் முழுவதும் உரிய அனுமதி பெறாமல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை தடுத்து ஒழுங்குப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் முறையான அனுமதி பெறாமலும் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாமலும் கட்டிடங்கள் கட்டும் பணிகள் த தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே இதனை தடுக்கும் பொருட்டு கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்க கிராம ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கிடும் வகையில் பொதுமக்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் வழங்காமல் அதிரடியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள (ந.க.எண்4870/2024 நாள்: 08.07.2025) அறிவிப்பானது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதிச் சான்றினை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற மக்கள் தங்களுக்கான இல்லங்களை உருவாக்கும் பொழுது இல்லம் கட்டுவதற்கான பட்ஜெட் மற்றும் அதற்குரிய முறையான அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தங்களது இல்லங்களை கட்டிக் கொள்கின்றனர். அதே சமயம் தமிழகத்தில் 11,791 கிராம ஊராட்சி கிராமங்களில் வசிக்கும் மக்கள் அரசு சம்பந்தப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும் மற்றும் பொருளாதார ரீதியாகயும்நலிவடைந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் வாழும் கிராம மக்கள் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கட்டிடப் பணிகளை மேற்கொள்வது என்பது இயலாத காரியம் என்பதனை தமிழக அரசுக்கும் நன்றாக தெரியும். மேலும் கிராம மக்கள் தங்களுக்கான சொந்த இல்லம் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் போது அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கட்டுவதில்லை. காரணம் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் தினக்கூலித்தொழில்செய்து அதில் கிடைக்கும் சொற்ப பணத்தைக் சிறுக சிறுக சேமித்து தங்களது கட்டிடப் பணிகளை ஆரம்பிக்கின்றனர். பிறகு படிப்படியாக தங்களுக்கு 37மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் கிடைக்கும் பணத்தினை கொண்டு மீதி பணிகளை நிறைவு செய்து தங்களது சொந்த இல்லக் கனவுகளை நினைவாக்கி மகிழ்கின்றனர். இந்நிலையில் மேற்கண்ட வகையில் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பானது கிராம மக்களின் சொந்த இல்லக் கனவுகளை தகர்க்கும். அது மட்டுமல்லாமல் ஒரு சில கிராம ஊராட்சி அலுவலர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள இந்த அதிகாரத்தை தவறான வழியில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களுக்கான அனுமதியினை பெற்றுக் கொள்ளும் வகையில் ஒரு வாய்ப்பினை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென FAIRA கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.
15 .புதிய கோவை முழுமை திட்டம் 2041 இன் வரைவு பொது மக்களின் பார்வைக்கும் -கருத்துக்கும் ஆலோசனைக்கும் வேண்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2023 இல் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டபோது அங்கு கோவை மாவட்ட விவசாய அமைப்பினரால் ஆட்சேபனையும் மற்றும் முற்றுகை போராட்டமும் நடத்தப்பட்டு பல்வேறு வாக்குவாதங்களுடன் அந்தக் கூட்டம் முழுமை பெறாமல் நிறுத்தம் செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் இது சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என காத்திருந்த பொதுமக்களுக்கு அதற்கான சூழலும் அமையவில்லை, போதிய வாய்ப்பு வழங்கவில்லை என அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் மனக்குமுறல்கள் எமது FAIRA கூட்டமைப்பிற்கு தெரிய வருகிறது. இணையதளம் சம்பந்தமான போதிய விழிப்புணர்வு இல்லாத சமானிய மக்கள் கோவை புதிய முழுமை திட்டம் வரைவு சம்பந்தமாக தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய இயலவில்லை ஆகவே பொதுமக்களின் மனக்குமுறல்களுக்கும் எதிர்ப்பார்பிற்கும் மதிப்பளித்து மீண்டும் ஒரு முறை இது சம்பந்தமாக கோவை முழுமை திட்டம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மட்டும் வாய்ப்பளித்து அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று, தற்போதைய முழுமை திட்டத்தில் உள்ள நில வகைபாடுகளை அப்பகுதி மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் கோவை முழுமை திட்டம் 2041 உடன் இணைத்து ஒரு துணை திட்டம் தயாரித்து வெளியிட வழி வகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
.
அடுத்த பதிவில் தொடரும்.....................

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!

 


 

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!
 
1. சாமானிய மக்கள் இனாம் நிலங்களில் வாழ்ந்து கொண்டு இனாம் நிலமாக இது ஒரு காலத்தில் இருந்தது என்று தெரியாமலேயே இப்பொழுது வரை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு அரசும் ஒரு வகையில் காரணம் 1985-ஆம் ஆண்டு யூடிஆர்-க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் ஒரே வகையான ரயத்துவாரி நில நிர்வாக முறை தான் இருக்கிறது. இன்றைய கிராம கணக்கிலும் ரயத்துவாரி கணக்கே அமலில் இருந்து வருகிறது.
2. அதன்படி சாமானியர்கள் அனைவரும் தங்களது பெயர் யூடிஆர், அ-பதிவேட்டில் பெயர் தாக்கல் ஆகி அதன் பிறகு பட்டா மாற்றி, பத்திரங்கள் பதிந்து, அங்கீகாரம் வாங்கி, சர்வ சுகந்திரமாக ஆண்டு அனுபவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வக்புபோர்டு ஒழிக்கப்பட்டு விட்ட இனாம் நில நிர்வாக முறையை மேற்படி எங்கள் ஆளுகையில் இருந்தது என்றும் அதனுடைய டைட்டில் உரிமை வக்பு உடையது என்று கூறுகிறது.
3. இதனைத்தான் இந்து சமய அறநிலையத் துறையும் செய்யும் ஆனால் waqfboard போல மொத்தமாக தடை சொல்லாது. அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற செயல் அலுவலர்கள் உதவி ஆணையர்கள் மூலம் பத்திர பதிவு தடை ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளை செய்வார்கள். நான் waqfboard மட்டும் சென்னையில் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தை வைத்துக்கொண்டு அதற்கு தனியாக ஒரு சிஇஓ நியமித்து தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற 586 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கிறோம் என்று ஒரே மொத்தமாக அனுப்பி வைப்பார்கள்.
4. அந்த கடிதத்தில் தற்போதைய சர்வே நம்பர் இருக்கும் பழைய சர்வே நம்பருக்கும் கோ-ரிலேஷன் இருக்காது. Waqfboard எந்த ஆவணத்தின் அடிப்படையில் உரிமை கொண்டாடுகின்றோம் என்ற விவரம் இருக்காது. சாமானியர்களை அழைத்து அவர்களுக்கு காரணம் காட்டும் show cause நோட்டீஸ் கொடுத்து சாமானியர்கள் தரப்பு ஆவணங்களை பரிசீலித்து சம வாய்ப்பளித்து அதன் பிறகு இது வக்புநிலம் பதிவு செய்ய தடை என்று முடிவு எடுக்காது.
5. பதிவுத்துறையில் உள்ள 586 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் waqfboard சிஇஓ நேரடியாக ஆட்சேபனை மனு கொடுப்பது என்பது மிகவும் தவறான சட்ட நடைமுறை ஆகும். பதிவுத்துறை ஒரு சட்ட அதிகார அமைப்பு waqfboard ஒரு சட்ட அதிகார அமைப்ப ஒரு சட்டஅதிகார அமைப்பு இன்னொரு சட்ட அதிகார அமைப்பான பதிவு துறைக்கு தடை மனு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் பதிவுத்துறை தலைவர் அவர்களுக்குத்தான் ஆட்சேபனை மனு தகவல்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதன் பிறகு பதிவுத்துறை தலைவர் தான் 586 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அல்லது கார்ப்பரேட் அலுவலகத்தில் மொத்தமாக தயாரித்து விட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள waqf இன்ஸ்பெக்டர்களுக்கு விவரங்களை அனுப்பி அவர்கள் சம்மன் வைத்து சாமானியர்களின் ஆவணங்களை பரிசீலித்து விட்டு அதன் பிறகு தடை மனு கொடுப்பது என்ற நடைமுறையை பின்பற்றி இருக்க வேண்டும்.
6. ஆனால் அப்படி செய்யாமல் பதிவு துறை தலைவரை மதிக்காமல் நேரடியாக பதிவுத்துறை தலைவருக்கு கீழே இருக்கின்ற அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் waqf CEO கடிதம் அனுப்பிவிட்டார். அதாவது தனது நண்பர் தனது வீட்டில் தன்னுடைய மனைவி மக்களுக்கு உத்தரவுகளை போடலாம். ஆனால் பக்கத்து வீட்டு மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உத்தரவுகளை போட வேண்டும் என்றால் பக்கத்து வீட்டு குடும்ப தலைவரிடம் தகவல்களை சொல்லி அதன் பிறகு தான் போட வேண்டும். அந்த சட்ட நடைமுறை எதுவும் கடந்த ஐந்து ஆண்டுகால வக்போடு சி.இ.ஓ ஒரே நேரத்தில் தமிழகம் முழுக்க உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தடை மனுவை அனுப்பியவுடன் அதனை வாங்கிய சார்பதிவாளர் இதுவரை நமக்கு உத்தரவு தெளிவுரை அனைத்தும் மாவட்ட பதிவாளர் மாநில பதிவு துறைத்தலைவர் பதிவுத்துறைத்தலைவர் அவர்கள் தான் கொடுப்பார்கள் தற்பொழுது சிஇஓ கொடுத்திருக்கிறார். இதற்கு என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பதிய வருகின்ற பத்திரப் பதிவுகளை எல்லாம் தள்ளிப் போட்டுவிட்டார்.
7. சாமானியர்களின் சொத்து வாங்குதல் சொத்து விற்றல், புதிய வீடு குடி போகுதல், மகள் திருமணம், மகள், மகன் உயர்கல்வி என்று அனைத்திலும் தேக்கத்தை இந்த waqfboard கொண்டு வந்தது. ஏன் வக்புபோர்டை மட்டும் சொல்கிறீர்கள் இந்து சமய அறநிலையத்துறை இப்படி செய்யவில்லையா என்றால் அதுவும் செய்தது ஆனால் அது தனித்தனியாக விசாரணை நடத்தி செய்ததால் சாமானியர்கள் அந்த விசாரணை நடக்கும் பொழுது தங்களுடைய மகள் திருமணம், வீடு குடிபோகுதல், உயர்கல்வி போன்ற தேவைகளுக்கு மனரீதியாக வேறு வேறு ஏற்பாடுகளை செய்ய தயாராகி இருப்பார்கள். ஆனால் மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் எந்தவித show cause நோட்டீஸும் சாமானியர்களுக்கு கொடுக்காமல் பதிவுத்துறை தலைவருக்கு அறிவிக்காமல் நேரடியாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி திடீரென்று பத்திரப்பதிவை நிறுத்தியது இந்த வக்புபோர்டு இப்லீஸ் மகான்கள்.
8. வக்புபோர்டு நிர்வாகம் வக்பு சட்டம் 1995 என்ற சட்டத்தையும் பத்திரப்பதிவு சட்டம் 1908 பிரிவு 22A எந்த சட்டத்தையும் பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1971) என்ற மூன்று சட்டங்களை பயன்படுத்தி சாமானியர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. எந்த விசாரணை என்றாலும் சென்னைக்கு தான் அழைக்கிறார்கள். அந்தந்த மாவட்டங்களில் விசாரணை வைத்தாலாவது சாமானியன் நேரம் பயண அலுப்பு மற்றும் பயண செலவு மிச்சப்படும். தஞ்சையில் அதிராம்பட்டினத்தில் இருக்கும் கறிவடை விற்கிற, தட்டுக்கடை பாய்க்கும், செருப்பு கடை நடத்தும் கடையநல்லூர் பாய்க்கும் நீ ஆக்கிரமித்து கடை நடத்துகிறாய் என்று நோட்டீஸ் அனுப்பி சென்னையில் வந்து ஆஜராக சொல்லி பயணக்களைப்பும், போக்குவரத்து செலவும் செய்து வரவழைத்து இன்று விசாரணை அலுவலர் இல்லை அதனால் எதுவுமே விசாரிக்காமல் அடுத்த வாய்தா வைக்க சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்ற திமிர் வக்புபோர்டு மகான்களுக்குதான் இருக்கின்றது.
9. Waqf சொத்துக்கள் நேரடியாக மசூதி பெயருக்கு இருப்பது ஒரு வகை, அல்லது மசூதி மற்றும் மத சேவை செய்வதற்கு சேவை கண்டிஷனரிடம் கொடுக்கப்பட்ட இனாம் நிலங்கள் ஒரு வகை, மூன்றாவது தனிப்பட்ட இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட தனிநபர் இனாம்கள் மூன்றாவது வகை இந்த தனி நபர் இனாம்கள் ரயத்துவாரியாக மாறி தூய பட்டாவாக அடுத்தடுத்து சாமானியர்களுக்கு தானாதி வினிமய விக்கிரையங்கள் மூலம் மாறி விட்டது. அப்படிப்பட்ட நிலங்களுக்கு எல்லாம் நோட்டீஸ் கொடுத்துவிட்டு என்.ஓ.சி (NOC)- ஐ விற்பனை செய்து கொண்டு இருக்கின்றார்கள். நீங்களே தடைகளை கொடுப்பது அதற்கு சாமானியர்கள் என்ஓசி (NOC)- கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் வருவது அதற்கு நீங்கள் சட்டவிரோத ஆதாயம் பெற்றுக் கொண்டு என்ஓசி(NOC)- கொடுப்பது என்று இடைத்தரகர்கள் மூலம் NOC வணிகம் செய்து கொண்டு இருக்கின்றார்கள் இந்த இப்லீஸ் மகான்கள்.
10. அல்லா எப்பொழுதும் சாமானியன் இருதயத்திற்கு அருகில்தான் இருக்கிறார். சொத்துக்கள் நிலபுலன்கள் உடைய ஸ்தாபனத்தின் பக்கம் இருப்பதில்லை. வருகின்ற தேர்தலில் இந்த வக்புபோர்டு தங்களுடைய நிலங்களை மீட்கும் பொழுது சாமானியனுக்கு சமவாய்ப்பு கொடுத்து, விசாரணை நடத்தி முறையான தீர்ப்பு கொடுத்து, அதற்கு மேல்முறையீடு வாய்ப்பு கொடுத்து அதன் பிறகு waqf சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஸ்டாண்டர்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் SOP உருவாக்குவதற்கு கோரிக்கை வைக்க அந்தந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு+91 86100 63410

Tuesday, 27 January 2026

பதிவு – 7 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் (TNCDBR ) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!

 


 

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.
பதிவு – 7
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் (TNCDBR ) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!
1. பொதுமக்கள் வீடு கட்டும் பொழுது TNCDBR விதிமுறைகள் பின்பற்றினால் நில சிதறல் ஏற்படுகிறது. அந்த நிலச் சிதறலை தவிர்ப்பதற்கு TNCDBR Rule 35 இல் நீள அகல உயரங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குடியிருப்பு கட்டங்களுக்கு 12 மீட்டர் உயர வரம்பின் கீழ் ஒவ்வொரு தளத்திற்கும் 3.0 மீட்டர் உயரம் மட்டுமே வழங்க இயலும். இதனால் உள் காற்றோட்டம் குறைவு MEP/ BEAM DEPTH/ DUCTING போன்றவற்றை அமைக்க இடவசதி பற்றாக்குறை மற்றும் STRUCTURAL SAFETY பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது உயர வரம்பு 14 மீட்டராக உயர்த்தப்பட்டதால் ஒவ்வொரு தளத்திற்கும் 3.5 மீட்டர் உயரம் வழங்கும் வசதி உருவாகியுள்ளது. இதனால் குடியிருப்பு வசதித்தரம் மேம்பட்டுள்ளது, பொறியியல் ரீதியான பாதுகாப்பு வலுவடைந்துள்ளது. மேற்படி 14 மீட்டர் உயர வரம்பு இன்னும் சட்டப்பாிவில் அதற்கேற்ற சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது.
a. தற்போது RULE 35 இல் குறிப்பிடப்பட்டுள்ள GF+1F/ STILT+2F SUBJECT TO A MAXIMUM HEIGHT OF 9 METRES என்ற உயர வரம்பு நடைமுறை வாழ்க்கை, வசதி தேவைகள் மற்றும் பொறியியல் நிபந்தனைகளுக்கு பொருந்தாததாக இருப்பதால் — ஒவ்வொரு தளத்திற்கும் 3.25 – 3.5 M உயரம் கிடைக்கும்படி MAXIMUM HEIGHT = 10.5 METRES என உயர வரம்பை திருத்தி, “GF+1F/ STILT+2F கட்டிடங்களுக்கு RULE 35(A(B) இல் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள 9 மீட்டர் உயர வரம்புக்கு பதிலாக அதிகபட்ச உயர வரம்பை 10.5 மீட்டராக நிர்ணயிக்க வேண்டும்.
b. RULE 35(E1) இல் குறிப்பிடப்பட்டுள்ள FRONT SET BACK ஷரத்தில் ABUTTING ROAD WIDTH UP TO “9 மீட்டர் அகல வரம்பு” என்பதனை 23 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் UP TO “9.14 மீட்டர்” என திருத்துவதும் MORE THEN 9 மீட்டர் என்று வருகின்ற இடத்தில் 9.14 மீட்டர் என்று திருத்துவது அவசியமாகிறது. அதேபோல் MORE THEN 18 மீட்டர் என்று வருகிற இடத்தில் 18.29 மீட்டர் என்று திருத்துவது மிகவும் அத்தியாவசியமாகிறது. இதற்கு உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும்.
c. இது போல RULE 35E(2) சைடு செட் பேக் விடுவதற்கான சரத்தை ஷரத்தில் 7 மீட்டர் வரை இருக்கும் கட்டிடங்களுக்கு அடி மனையின் அகலம் UPTO 9 மீட்டர் என்பதை 9.14 மீட்டர் என்றும் ABOVE 9 மீட்டர் என்று இருப்பதை ABOVE 9.14 மீட்டர் என்றும் மாற்றப்பட வேண்டும். கட்டிட உயர வரம்பாக 7 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை என்பதை அதனை 7 மீட்டர் முதல் 12.19 மீட்டராக மாற்ற வேண்டும் அதேபோல் அடிமனையின் அகலம், “6 மீட்டர்” என குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச அகலத்தினை “6.10 மீட்டர்” என மாற்றுவது நடைமுறையில் நிலவும் அளவீட்டு முறைமைக்கு ஏற்ப பொருத்தமானதாகும். மேலும், 6 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை என குறிப்பிடப்பட்டுள்ள அகல் வரம்பு “6.10 மீட்டர் முதல் 9.14 மீட்டர் வரை”என மாற்றப்பட வேண்டும். இதேபோல், ABOVE 9 மீட்டர் என குறிப்பிடப்பட்டிருப்பதை “9.14 மீட்டர் என மாற்றும் திருத்தமும் அவசியமாகிறது. SSB 1.5 மீட்டர் ON ONE SIDE என்பதை 1.2 மீட்டர் ON ONE SIDE என்று மாற்றப்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் நிலசிதறல் ஏற்படாமலும் இருக்கும். பிரிவு 35 E (3) REAR SET BACK பற்றி சொல்லும் ஷரத்தில் கட்டிட உயரத்தை பேசும் இடத்தில் MORE THEN 7 மீட்டர் UPTO 12 மீட்டர் என்று வருகிறது. அதில் UPTO 12.19 மீட்டர் என்று மாற்றப்பட வேண்டும்.
d. TNCDBR விதி 35 B(B)யில் MAXIMUM HEIGHT 18.30 மீட்டர் என்று வர வேண்டிய இடத்தில் 21 மீட்டர் என மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
e. FRONT SET BACK விடுவதற்காக விதி 35B (D1)அடிமனையின் அகலம் ABUTTING ROAD WIDTH) FROM 9 மீட்டர் என்பதை FROM 9.14 மீட்டர் என்றும் UPTO 18 மீட்டர் என்பதை 18.29 மீட்டர் என்றும் MORE THEN 18 மீட்டர் என்பதை 18.29 மீட்டர் என்றும் மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
f. TNCDBR விதி 35 B(D2) யில் சைடு செட் பேக் (SSB) ரியர் செட் பேக் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 24 (RSB ) சொல்லப்படுகின்ற ஷரத்தில் கட்டிட உயரத்தை சொல்லும் நெடு வரிசை பட்டியலில் UPTO 12 மீட்டர் என்பதை 14 மீட்டர் MORETHEN 12 மீட்டர் என்பதை 14 மீட்டர் என்றும் UPTO 16 மீட்டர் என்பதை 17.5 மீட்டர் என்றும் MORE THEN 16 மீட்டர் என்பதை 17.5 மீட்டர் என்றும் UPTO 18.30 மீட்டர் என்பதை 21 மீட்டர் என்று திருத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
g. TNCDBR விதிகள் 2019 பின்பற்றி வெளியிடப்பட்ட அரசு ஆணை G. O. (MS) NO 118 DATED 08.08.2025 (HOUSING AND URBAN DEVELOPMENT ) யிலும் 4 வது ஷரத்தில் வெளியிட்டு இருக்கின்ற அட்டவணையிலும் SIDE SET BACK பற்றி பேசப்படுகின்ற இடத்தில் UP TO 10 மீட்டர் என்று வருகின்ற இடத்தில் 10.5 என்று வரவேண்டும். அதேபோல் 9 மீட்டர் என்று வருகின்ற இடங்களில் எல்லாம் 9.14 மீட்டர் என்று வரவேண்டும். இதற்கான உரிய திருத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேற்கண்ட a-g உரிய திருத்தங்கள் செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
2. ஆகாய திறவிட வெளிச்சம் கட்டிட உள்ளறைகளுக்குள் வரும் வகையில் விடப்படக்கூடிய (OTS) அளவுகள் அகலம் மற்றும் நீளம் 1.5 மீட்டர் x 2.5 மீட்டர் என உள்ளது. சிறிய பரப்பளவில் மேற்கொள்ளப்படும் கட்டடங்களில் அனுமதிக்கப்படும் தளப்பரப்பு குறியீட்டினை ஏற்கனவே அடைய முடியவில்லை. ஆகவே (OTS) இதனை மனைப் பரப்பளவு மாடிகளின் உயரம், மற்றும் சாலைகளின் படிநிலைகள் (hierarchy) அடிப்படையில் மாற்றி அமைக்கலாம். கட்டுனர்கள், அங்கீகாரத்துறையால் அனுமதிக்கப்படும். (குறிப்பாக) சிறிய பரப்பளவில் (300-சதுர மீட்டருக்குள்) மேற்கொள்ளப்படும் கட்டடங்களில் (OTS) ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற வகையில் மாற்றி அமைக்க வழிவகை செய்யலாம்.
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும் உள்ள பொறியாளர்கள் அனைவரும் Common and Single Registration மூலம் பதிவு செய்யும் முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் 10-வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ள டிப்ளமோ (DCE) ஹோல்டர்களை BE DEGREE மற்றும் RE GRADE II -விற்கு சமமாகக் கருதப்பட வேண்டும். ஒரு பொறியாளர் ஒரு கட்டிடத்தை மட்டுமே மேற்பார்வை செய்ய வேண்டும் என்பதனை கட்டிடப் பரப்பினை 25 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் பொறுத்து நிர்ணயம் செய்ய வேண்டும். உதாரணமாக ஆயிரம் சதுர அடி கட்டிடத்திற்கு சதுர அடி 2500 என்று வைத்துக்கொண்டால் கட்டிடத்தின் மதிப்பீடு 25 இலட்சம். ஒரு பொறியாளருக்கு 20- ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று வைத்துக்கொண்டால் 10 மாதங்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய், அதாவது 10% சதவீதம் பொறியாளர் சம்பளத்திற்கு மட்டுமே பொதுமக்களால் செலவிடப்படும். இது சாதாரண பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும். இதற்கு பதிலாக 500 சதுர அடி பரப்பளவு உள்ள நான்கு கட்டிடங்களுக்கு ஒரு பொறியாளர் மற்றும் பத்தாயிரம் சதுர அடி உள்ள 2-கட்டிடங்களுக்கு ஒரு பொறியாளர் 50,000 சதுர அடி உள்ள கட்டிடத்திற்கு 2 பொறியாளர் என்ற வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
4. UDS - என்ற முறையில் அபிவிருத்தி செய்யப்படும் எல்லா கட்டுமான திட்டங்களுக்கும் பிற்காலத்தில் வீட்டு உரிமையாளர் சட்டத்திற்கு உட்பட்டு அவருடைய கட்டிடத்தை மட்டும் மாற்றம் செய்ய தனிப்பட்ட முறையில் திட்ட அனுமதி பெற வழி வகை செய்ய வேண்டும்.
5. கட்டிட அடித்தளத்தின் உயரம் சாலையின் நிலையில் இருந்து மூன்று அடிக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும். சாலை புதுப்பிக்கப்படும் பொழுது உயரம் மிகாமல் அமைக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆக்கப்படவேண்டும்.
6. வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும் அளவுகளை ( Benchmark / MFL) நீர்நிலைகளின் அருகில் இருக்கும் நிலங்களில் ஒப்புதல் முறையை விரைவுப்படுத்துவதற்காக PWD குறியிட வேண்டும்.
7. G.O.(Ms).No.154- ல் குறிப்பிட்டுள்ளதன் படி ( Stilt + 3 Floors மற்றும் Ground + 2 Floors ) கட்டிடத்தின் உயரம் 12 மீட்டர்க்கு மிகாமலும் குடியிருப்பு பயன்பாட்டிற்காக கட்டிட பரப்பு 10,000 சதுரடி அடி மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக கட்டிடப் பரப்பு 300 - சதுர மீட்டர் அனுமதிக்கப்பட்டுள்ளது. CMDA-ல் உள்ள அனைத்து Local Bodies-களில் இவ்விதியே பின்பற்றப்படுகிறது. Stilt + 3 கட்டிடங்களுக்கு உயரம் 12m - இல் இருந்து 15 மீட்டர் வரை தளர்வு செய்ய வேண்டுகிறோம்.
8. தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் (TNCDBR ) அமல்படுத்தப்பட்ட பின்பு பொதுமக்கள் கட்டிட வரைபட அனுமதி பெறுவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். நகர கட்டமைப்புத் துறை தான் தமிழக அரசுக்கு வருமானம் ஈட்டி தரும் துறையில் ஒரு முக்கியமான துறையாகும். எனவே, பெருநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் நகர கட்டமைப்புத் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 26 துறைக்கு தேவைக்கேற்ப அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
9. அரசுத் தரப்பில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட எதிர்காலப் பயன்பாடு மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக கையகப்படுத்தும் நிலங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அங்கீகார துறையின் இணையதளத்தில் நிலங்களை வாங்குகின்ற பொதுமக்கள் மற்றும் அபிவிருத்தியாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்ய வேண்டுகிறோம்.
10 .தமிழக முழுவதும் மிகப் பழமையான நகரங்களிலும், அதேபோன்று அதிவேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை மாநகரங்கள் மற்றும் நகரங்களிலும் தொடர் கட்டுமானப் பகுதி (CBA) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான பகுதியை (EWS) அடையாளப்படுத்தி, அதன் பரப்பளவை அதிகப்படுத்தியும், மேலும், தமிழகம் முழுவதும் நீண்ட நெடிய காலமாக நில வகைப்பாடு மாற்றம் செய்யாமல் உள்ள (நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் மற்றும் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் ஏற்கனவே இருக்கும் உள்ளுர்த் திட்டக் குழுமம் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து) பகுதிகளில் விரைவாக நில வகைப்பாடு அட்டவணையை மாற்றம் செய்ய வேண்டுகிறோம்.
11. சுயச்சான்று அடிப்படையிலான 2500 சதுரடியில் பரப்பளவில் 3500 சதுரடி கட்டுமானத்தில் இரண்டு கிச்சன் அனுமதியை STILT +2 நான்கு கிச்சனாக மாற்றி அனுமதி கொடுக்குமாறு வேண்டுகின்றோம்.
12. சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பெருநகரங்களுக்கு மாநகராட்சிகளுக்கு Floor Space Index உயர்த்தி வழங்க வேண்டும். சென்னையில் SPR Township- ற்கு மட்டும் அதிக FSI-யும் கட்டிட உயரத்தையும் அதிகரித்துக் கொடுத்து இருக்கிறார்கள். இப்படி பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் FSI மற்றும் Height of the Building உயர்த்தித்தர வேண்டுகின்றோம்.
13. தமிழகம் முழுக்க உள்ள நகரங்களில் வளர்ச்சி அடைந்ததற்கு ஏற்றபடி எல்லைகளை விரிவாக்கம் செய்து SLPA மற்றும் CLPA முழுமைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். மேற்படி திட்டங்கள் உருவாக்கிய நகரங்களில் அவை கோப்புகள் அளவிலேயே தேங்கி நிற்கிறது.எனவே அதனை உறுதிச் செய்து பொதுமக்கள் கருத்து கேட்டு இறுதி செய்ய வேண்டுகின்றோம்.
14. CBA (Continues Buildup area) வில் 19% மற்றும் 22% என்று திட்டம் கொண்டு வந்துவிட்டாலும் இன்னும் நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை. அதேபோல் 27 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் கோவில் நகரங்களாக பல LPA க்கள் இருக்கிறது. அதில் CBA வை அறிமுகப்படுத்த வேண்டும்.மேலும் சாலைகளை அகலப்படுத்தி எல்லைகளை விரிவாக்க வேண்டும்.
15. CRZ பகுதிகளில் 2011 விதிகளைதான் நாம் நடைமுறைப்படுத்திக்கொண்டு வருகிறோம்.தற்பொழுது மத்திய அரசுடன் கலந்து பேசி எல்லைகளைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.
16. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக இருக்கின்றது. அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் கரிக்கிலி இன்னும் பறவைகள் சரணாலயம் என்ற முன்மொழிவிலேயே இருக்கிறது. அந்த முன்மொழிவை இரத்து செய்ய வேண்டுகிறோம்.
17. 8 Kitchen, ( 750 m² FSI Area வரை ) கட்டிடங்களுக்கு முடிவுச் சான்று/ தடையின்மைச் சான்று இல்லாது ஆணை வழங்கிட வேண்டும்.
18. கிராம பகுதிகளில் கட்டிட அனுமதி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது ஆன்லைன் மென்பொருள் சிக்கல்களால் எளிமையாக விண்ணப்பிக்க முடியாமல் இருக்கிறது. இதுபோன்ற நேர்வுகளில் மேனுவலாக விண்ணப்பிக்கும் முறையை அனுமதிக்க வேண்டும்.
19. மனை மற்றும் கட்டிடத் திட்ட அனுமதி பெற தற்போது நடைமுறையில் உள்ள பல வகையான கட்டணங்களை ஒருங்கிணைத்து வெகுவாக குறைத்திடவும் இணையதளம் வாயிலாகவே அதனை செலுத்திடவும் மேலும் அது குறித்த உத்தரவு பெறவும் வழிவகை செய்ய வேண்டுகிறோம் குறிப்பாக வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சதுர அடிக்கு ரூபாய் ஒன்று முதல் பத்து வரை என வெவ்வேறு மாதிரியாக உள்ள நிலையற்ற கட்டணத்தை மாற்றி அமைத்து ஊராட்சி பிரிவு அடிப்படையில் நிலையான ஒரே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டுகிறோம்.
20. எந்த ஒரு மறு ஆய்வு செய்வதற்கு முன்பும் 2019-விதிகளுக்கு எதிராக உள்ள நிலுவையில் உள்ள நீதிப்பேராணைகள் (Writs) அனைத்தும் தீர்மானிக்கப்பட வேண்டும்.
21 .கட்டிட அனுமதி பெற்ற பின், கட்டிடங்கள் விதிமுறைகளோடு கட்டப்படுவதற்கு முழு முதற்காரணம் கட்டிடத்தின் உரிமையாளர்களே மற்றும் இந்த விதிமுறைகளை தடுப்பதற்கு எல்லா அதிகாரமும் Corporation, Municipality, Pan- அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 28 chayat, Panchyat Union- இல் உள்ள Town Planning அதிகாரிகளுக்கு உள்ளது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எங்களைப் போன்ற பதிவு பெற்ற தொழில் வல்லுநர்களின் மீதே எடுக்கப்படுகிறது. எங்களுக்கு ஒவ்வொரு கட்டிடத்தின் எல்லா நிலைகளான Basement, Roof Levels and Completion செய்யும் பொழுதும், நாங்கள் அந்த கட்டிடத்தை முழுமையாக பார்வையிட்டு விதிமீறல் உள்ளதா, இல்லையா என ஆராய்ந்து முடிவு எடுக்க எங்களுக்கு ID Card மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டுகிறோம். பதிவு பெற்ற தொழில் வல்லுனர்களான நாங்கள் ஆய்வு செய்த அறிக்கையை அந்த அந்தக் குறிப்பிட்ட இடத்தின் Town Planning அலுவலர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். மேலும், இதற்கான குறைந்த அளவு, கட்டணத்தை கட்டிட உரிமையாளரிடம் இருந்து தமிழக அரசாங்கம் எங்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
22. சமையல் அறையில் பால்கனி என்பது குடும்பத் தலைவிகளுக்கு மிக அவசியமான ஒன்று சிறிய மனைகளில் இதற்கு வாய்ப்பு இல்லை. இதனை கருத்தில் கொண்டு சமையலறை பால்கனி மற்றும் லிவிங் ரூம் பால்கனி மட்டும் மூன்று அடி என்ற அளவிலும் மற்றும் கபோர்ட் இரண்டு அடி மட்டும் பக்கவாட்டு இடைவெளியில் நீட்டித்துக் கொள்ளவும் அனுமதித்தால் பெருநகர மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு இருக்கும். தீ விபத்து மற்றும் பிற அவசர காலகட்டங்களில் பால்கனிகள் மக்கள் எளிதாக அணுகி பயன்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உதவும். மற்றும் குடும்பங்களுக்குத் தங்கள் துணிகளை உலர்த்துவதற்கும் பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டுகிறோம்.
அடுத்த பதிவில் தொடரும்.....................


பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...