அகில
இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர்
அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில்.
நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116
பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள்
முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும்
நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE,
REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அதனை
தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில்
பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில்
முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு
தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால்
ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.
பதிவு – 8(1)
நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!
1.
பத்தாயிரம் சதுர மீட்டருக்குள் மேம்படுத்தப்படும் புதிய வீட்டுமனைப்
பிரிவுகளில் திறந்த வெளி நிலம் ஒதுக்குவதில் இருந்து விலக்கு அளித்து
அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி அங்கீகாரம் வழங்குவதற்கு வழிவகை செய்யுமாறு
FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகின்றோம்.
2. தமிழகத்தில் உள்ள அந்தந்த நகரங்களில் வசிக்கும் பொதுமக்களின் வீட்டுமனை
கனவுகள் நினைவாகும் வகையில் ஊராட்சியை போன்று நகர்ப்புறங்களிலும் அணுகு
சாலையின் அளவு குறைந்தபட்சம் 6.0 மீட்டர் என தளர்வளித்து,மேற்கண்ட
அரசாணையில் (G.O.NO.58/2024) திருத்தம் கொண்டு வந்து,(புதிதாக ஏற்படுத்தும்
வீட்டுமனை பிரிவுக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட
விதிகளின்படி அனுமதித்து) நடைமுறைப்படுத்த வழிவகை செய்ய FAIRA
கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
3. அதே போன்று தமிழகம் முழுவதும் அரசாணை எண் 78-ல் குறிப்பிட்டுள்ளபடி மனை
வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெறப்பட்டுள்ள வீட்டு மனைப்பிரிவின்
12அடி,15அடி,16அடி,18அடி மற்றும் 20 அடி உள்ள சாலைகளின் வழியாக சென்று,
பின்புறம் அமைந்துள்ள பெரும் நிலங்களையும், அதேபோன்று நகர்ப்புறங்களில்
காலம் காலமாக பயன்பாட்டில் அமைந்துள்ள 16 அடி,18 அடி மற்றும் 20 அடி
சாலைகள் வழியாகவும் சென்று, பின்புறம் அமைந்துள்ள பெரும் நிலங்களையும்,
புதிய விதிகளின்படி அபிவிருத்தி செய்ய வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின்
சார்பாக வேண்டுகின்றோம்.
4. புதிய வீட்டுமனைப்பிரிவுகளை அமைப்பதற்கான திறந்தவெளி நிலம் (OSR)
சம்பந்தமான, நகர் ஊரமைப்பு இயக்குனர் அவர்களின் வழிகாட்டு சுற்றறிக்கை எண்
NO.4367/2019/TCP2 நாள்: 14.08.2021 படி வீட்டுமனை பிரிவுக்கான (OSR)
திறந்தவெளி நிலத்திற்கு ஈடாக சாலைகள் நீங்கலாக விற்பனைக்குரிய நிலத்திற்கு,
நிலமாகவோ அல்லது அதற்குண்டான சந்தை மதிப்பில் 10% சதவீதம் கட்டணமாகவோ
செலுத்தும் வகையில் வழிவகை செய்து தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்
மீண்டும் அதே விண்ணப்பதாரர் அவர் பெயரில் அகில இந்திய ரியல் எஸ்டேட்
கூட்டமைப்பின் 15வது மாநாடு 30 உள்ள மேற்கண்ட வீட்டுமனை பிரிவிற்கு
அருகிலுள்ள மிகை நிலத்தில் மேற்கண்ட OSR பயனை அடையும் வகையில் கூடுதலாக
வீட்டுமனை பிரிவை ஏற்படுத்த எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்கின்ற
தெளிவுரை இதில் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்த விண்ணப்பதாரரின் மனைவி
மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அருகில்
உள்ள நிலத்திற்கு மேற்கண்ட வகையில் (OSR) நிலம் சம்பந்தமான பலனை அடையும்
வகையில் வீட்டுமனை பிரிவு அமைக்க கால அவகாசமும் இதில் குறிப்பிடப்படவில்லை.
ஒரு ஹெக்டேருக்குள் மேற்கண்ட வகையில் அருகருகே அமைக்கும் புதிய வீட்டுமனை
பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பதாரர் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இடங்களில்
இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கின்ற கால
அவகாசத்தையும் அதே விண்ணப்பதாரர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட
இரத்த சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இடங்களில்
ஓராண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கும் வகையிலும், கால அவகாசத்தை
நிர்ணயிக்க வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகின்றோம்.
5. தமிழகத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் வீட்டுமனை பிரிவுகளுக்கு DTCP
அனுமதி வழங்கி வருகிறது. இதன் விதிகளின்படி தமிழகம் முழுவதும் DTCP அனுமதி
பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் விண்ணப்பதாரர்களால் விற்பனை செய்யும் வகையில்
வகைப்படுத்தப்பட்டுள்ள சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, சுகாதார
நிலையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை, அது குறித்த தன்மை அறியாமல், சந்தை மதிப்பை
விட குறைவான விலைக்கு கிடைக்கிறது என்கிற அடிப்படையில், மேற்கண்ட
வீட்டுமனை அபிவிருத்தியாளர்களிடமிருந்து, அப்பாவி பொதுமக்கள் வாங்கி
வைத்துள்ளனர். இதனை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் தற்போது குடியிருப்பு
மனையாக நில வகைப்பாடு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது, தற்போதுள்ள
(DTCP) நகர் ஊரமைப்புச் சட்டத்தின் புதிய விதிகளின்படி, ஏற்கனவே
ஒதுக்கப்பட்டுள்ள திறந்தவெளி நிலம் போக, தற்பொழுது உள்ள புதிய விதிகளின்
படி தேவையான அளவிற்கு திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துவதோடு,
அப்படி தேவையான திறந்தவெளி நிலம் ஒதுக்கவில்லை எனில், அப்பாவி
பொதுமக்களின் நில வகைப்பாடு மாற்றம் கோரிய விண்ணப்பத்தினை நகர் ஊரமைப்பு
துறையினர் நிராகரிக்கின்றனர். மேற்படி ஒதுக்கீடுகளுக்கு DTCP புதிய
விதிகளின்படி தேவையான திறந்தவெளி நிலத்தை ஒதுக்க வேண்டும் எனில், அப்பாவி
பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள மொத்த நிலத்தையும் 31
மாநாட்டில்–நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் உள்ளாட்சிக்கு
எழுதிக் கொடுத்து, இழக்க நேரிடும். ஆகவே, DTCP பழைய விதிகளின்படி அனுமதி
பெற்ற மேற்படி ஒதுக்கீடுகளை, நில வகைப்பாடு மாற்றம் செய்து தரக்கோரி
விண்ணப்பித்தால், தற்போதுள்ள DTCP புதிய விதிகளின்படி திறந்தவெளி நிலத்தை
ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தாமல், ஏற்கனவே உள்ளதை உள்ளபடியே பாவித்து நில
வகைப்பாட்டினை மட்டும் மாற்றம் செய்வதற்கு தேவையான கட்டணத்தை பெற்றுக்
கொண்டு, நில பயன்பாடு வகைப்பாட்டினை மாற்றம் செய்து கொள்ளும் வகையில்
வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
6. தமிழகத்தில் மனைப்பிரிவு அனுமதிகளை (LAYOUT APPROVAL) CMDA மற்றும்
DTCP துறைகளால் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி
மற்றும் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தால் இறுதி அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வீட்டு மனைப்பிரிவு (LAYOUTAPPROVAL) இறுதி ஒப்புதல்
அளிக்கப்படும்போது, உள்ளாட்சிகளின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மழைநீர்
வடிகால் வசதி, தெருவிளக்கு குடிநீர் விநியோகம், பூங்கா, பொது பயன்பாடு
மற்றும் மின்சாரம் பயன்பாடு போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே
CMDA மற்றும் DTCP துறையால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்ட அந்த
மனைப்பிரிவுக்கு (LAYOUT APPROVAL) உள்ளாட்சிகள் இறுதி ஒப்புதல் வழங்குவது
வழக்கம். தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்
அரசாணை எண்:181/2020 இன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சிகளில்
(மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில்) அபிவிருத்தி செய்யப்படும்
திட்டங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளுக்கான செலவீட்டுத் தொகையை நகராட்சி
நிர்வாகம் கணக்கீடு செய்து விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கும் பட்சத்தில்
விண்ணப்பதாரர்கள் அதற்குரிய கட்டணத்தை நேரடியாக சம்பந்தப்பட்ட நகர்ப்புற
நிர்வாகத்திற்கு செலுத்தக்கூடிய வகையில் இருந்தது. இதனை
நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதின் அடிப்படையில் FAIRA
கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் வீட்டுவசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சித் துறையானது, இதனை கவனத்தில் கொண்டு, சில நிபந்தனைகளை
மாற்றியமைத்து அரசாணை எண்:141 நாள்: 16.07.2022 ஆக வெளியிட்டு இருந்தது.
இந்த அரசாணையில் மனைப்பிரிவுகளில் அடிப்படை கட்டமைப்பு திட்டப் பணிகளை
உள்ளாட்சி நிர்வாகம் (மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியோ)
சம்பந்தப்பட்ட அபிவிருத்தியாளார்களிடமிருந்து உரிய கட்டணத்தை பெற்றுக்
கொண்டு கட்டமைப்பு பணி மேற்கொள்ளலாம் அல்லது அகில இந்திய ரியல் எஸ்டேட்
கூட்டமைப்பின் 15வது மாநாடு 32 அபிவிருத்தியாளர்களே மனைப் பிரிவிற்கான
அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஊராட்சியில் மனைப் பிரிவுகளை மேம்படுத்துவது குறித்து இந்த
அரசாணையில் ஷரத்துகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே ஊராட்சி
பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படை கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும்
இனங்களுக்கான கட்டணங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின்
சுற்றறிக்கை ந.க. எண் 4870/2024, நாள் 10.01.2025, இல் மேற்கண்ட அரசாணை
எண்:181/2020 இல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி மனைப் பிரிவை மேம்படுத்திட
தேவையான அடிப்படை கட்டமைப்புகளுக்கான தார்சாலை அமைத்திட அலகுத்தொகையாக
சதுர மீட்டருக்கு ரூ.1600/- எனவும், மழைநீர் வடிகால் இரு புறங்களுக்குமான
வசதிக்கு அலகுத்தொகையாக மீட்டருக்கு ரூ.23,000/- எனவும், தெருவிளக்கு
வசதிக்கான அலகுத்தொகையாக ரூ.15,000/- எனவும், குடிநீர் வசதிக்கான
அலகுத்தொகையாக ரூ.30 லட்சம் எனவும், சிறு பாலங்களுக்கான (1.5மீ இடைவெளி)
அலகுத்தொகையாக ரூ.7லட்சம் எனவும் நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் தொகை சந்தை
மதிப்பை விட மூன்று மடங்கு வரை உயர்வாக இருக்கின்றது. இதன் அடிப்படையில்
கிராமப்புறங்களில் வீட்டு மனைகளை அபிவிருத்தி செய்து விற்பனை செய்ய இயலாத
சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் ஊராட்சி நிர்வாகமும் மேற்கண்ட
அரசாணை எண்:141 இல் தெரிவித்துள்ள ஷரத்துகளின்படி ஊராட்சி பகுதிகளில்
அபிவிருத்தி செய்யக்கூடிய மனைப்பிரிவு திட்டங்களுக்கு விண்ணப்பதாரர்
ஊராட்சி நிர்வாகத்திற்கு உரிய அடிப்படை கட்டமைப்பிற்கான கட்டணத்தை நேரடியாக
செலுத்தும் வகையிலோ, அல்லது வீட்டுமனைப் பிரிவிற்கான அடிப்படைக்
கட்டமைப்புகளை அபிவிருத்தியாளர்களே மேற்கொள்ளும் வகையிலோ உரிய சட்ட
திருத்தம் மேற்கொண்டு, தாங்கள் வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக
வேண்டுகிறோம்.
7. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில்
புதியதாக இணைக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் அபிவிருத்தி செய்யப்படும்
மனைப் பிரிவுகளுக்கு அணுகு சாலையானது குறைந்தபட்சம் 7.0 மீட்டர் இருக்க
வேண்டும் அரசாணை எண் 58/2024) என்பதனை 6.0 மீட்டர் என மாற்றி அமைக்க உரிய
வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
8.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் அரசாணை எண். 79/2017 இல்
பாரா 9 இல்“நகர் ஊரமைப்பு இயக்குநரிடமிருந்து செய்யக்
கருதியுள்ள33மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள்
மேம்பாடு குறித்து முன் அனுமதி பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி
அமைப்பு, நிலப்பயன் மாற்ற கட்டணமாக 1899 ஆம் ஆண்டு இந்திய
முத்திரைச்சட்டம், (மத்திய சட்டம் 2/1899) பிரிவு 47- உட்கூறு AA இன் கீழ்,
சந்தை மதிப்பில் 3 விழுக்காடு நிர்ணயம் செய்து, அதனை வசூலித்து, அரசுக்
கணக்குத் தலைப்பின் கீழ் வரவு வைத்து செய்யக் கருதியுள்ள மேம்பாட்டுப்
பணியை மேற்கொள்ள உரிய அனுமதி அளிக்க வேண்டும்”. எனக் குறிப்பிட்டுள்ளது.
இதில் மேற்கண்ட நிலப் பயன் மாற்றக் கட்டணம் என்பது நகர் ஊரமைப்பு
இயக்குனரிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ள வரைபடத்தில் விற்பனைக்குரிய
பகுதிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது பொது பயன்பாடு, சாலைகள்,
மின்இணைப்பு, திறந்தவெளி நிலம் பூங்கா உள்ளிட்ட அனைத்திற்கும் கட்ட
வேண்டுமா என்கிற சரியான தெளிவுரையை வழங்க FAIRA கூட்டமைப்பின் சார்பாக
வேண்டுகிறோம்.
9. அதேபோன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில்
மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்கிட 79/2017 -ல் விதி (3)-ல்
குறிப்பிட்டுள்ள படி மனை ஒன்றுக்கு கூராய்வு கட்டணம் ரூபாய்.1000/- என்பதை
ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும் என FAIRA கூட்டமைப்பின் சார்பாக
வேண்டுகிறோம்.
10.DTCP/ CMDA சம்பந்தப்பட்ட அரசாணை அரசிதழில் வெளிவந்தவுடன் இணையத்தில்
செயல்பாட்டிற்கு வரும் வகையில் உடனடியாக பதிவேற்றம் செய்து நடைமுறைக்கு
கொண்டு வருவதற்கு வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
11. தமிழகத்தில் மனைப்பிரிவு அனுமதிகளை (LAYOUT APPROVAL) CMDA மற்றும்
DTCP துறைகளால் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி
மற்றும் ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தால் இறுதி அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வீட்டு மனைப்பிரிவு (LAYOUT APPROVAL) இறுதி ஒப்புதல்
அளிக்கப்படும்போது, உள்ளாட்சிகளின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மழைநீர்
வடிகால் வசதி, தெருவிளக்கு குடிநீர் விநியோகம், பூங்கா, மின்சாரம், பொது
பயன்பாடு போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே CMDA மற்றும் DTCP
துறையால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்ட அந்த மனைப்பிரிவுக்கு (LAYOUT
APPROVAL) உள்ளாட்சிகளினால் இறுதி ஒப்புதல் வழங்குவது வழக்கம். இந்த
அடிப்படை கட்டட அமைப்புகளில் மழைநீர் வடிகால், மேல் தேக்க குடிநீர்
தொட்டியும் உடனடியாக வீடுகட்டி குடியேறும் அகில இந்திய ரியல் எஸ்டேட்
கூட்டமைப்பின் 15வது மாநாடு 34 வகையில் நகர்ப்புறங்களில் ஏற்படுத்தக்கூடிய
வீட்டுமனை பிரிவுகளில் ஏற்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
கிராமப்புறங்களில் ஏற்படுத்தும் வீட்டுமனை பிரிவுகளுக்கும் குடிநீர்
வசதியும் மழைநீர் வடிகாலும் உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்பது
ஏற்புடையதாகவோ, மக்களுக்கு பயனுள்ளதாகவோ அமையாது. குடிநீர் மேல் தேக்கத்
தொட்டி ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு கூடுதல் பரப்பளவுடன் அமைக்கப்படுகின்ற
வீட்டுமனைப் பிரிவுகளில் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதைவிடுத்து அரை ஏக்கரில் ஏற்படுத்தக்கூடிய சிறிய வீட்டுமனை
பிரிவுகளுக்கும் மேல் தேக்க குடிநீர்த்தொட்டியை ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர்
வீட்டுமனை பிரிவுகளுக்கும் அதே கொள்ளவுகளில் தொட்டி ஏற்படுத்துவது
அபிவிருத்தியாளர்களுக்கு பெரும் செலவினங்களை கொடுக்கும். இப்படிப்பட்ட
சிறிய மனைப் பிரிவுகளில் மனைகளை வாங்குகின்ற போது பொதுமக்களின் தலையில்
தான் இந்த செலவினங்களையும் கட்ட வேண்டியதாக இருக்கும், பொது மக்களுக்கும்
பெரும் சுமையை ஏற்படுத்தும். ஆகவே இப்படி சிறிய அளவில் வீட்டுமனை பிரிவுகளை
ஏற்படுத்துகின்றவர்களுக்கு மேல் தேக்க குடிநீர் த தொட்டி கட்டுவதில்
இருந்து விலக்கு அளிக்கவும், அல்லது இதற்குண்டான கட்டணத்தை சம்பந்தப்பட்ட
உள்ளாட்சியில் குறைந்த அளவில் கட்டும் வகையிலும், அல்லது சிறிய அளவில்
மேம்படுத்துகிற மனை பிரிவுகளுக்கு பிளாஸ்டிக் சின்டெக்ஸ் த தொட்டி
அமைக்கும் வகையிலும் வழிவகை செய்யவும் அரசு பரிசீலிக்கலாம். சிறிய
வீட்டுமனை பிரிவுகளில் மழைநீர் வடிகால் மற்றும் குடிநீர் வசதி
ஏற்படுத்துவதில் இருந்து விலக்களிப்பதற்கு தாங்கள் தகுந்த நடவடிக்கை
மேற்கொண்டு, உரிய வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
12. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குனர்
அலுவலகம் மூலம் துணை அதிகார குழுக்களான நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக
உள்ளாட்சிகளுக்கு கட்டிட திட்ட அனுமதி வணிக வளாகங்கள் மற்றும் மனைப்பிரிவு
அனுமதி உள்ளிட்ட அனுமதிகளை வழங்குவதற்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ள
அதிகாரத்தின் படி 24 சென்ட்க்கு கீழ் அமைந்துள்ள நிலங்களில் எட்டு அலகு வரை
மனைப் பிரிவினை உட்பிரிவு அனுமதியாக வழங்குவதற்கு மேற்கண்ட
உள்ளாட்சிகளுக்கு அனுமதி உள்ளதாக தெரிவித்து, மாநிலம் முழுவதும் உள்ள
உள்ளாட்சித் துறைகள் மனை உட்பிரிவு அனுமதி வழங்கி வருகிறார்கள். இந்த
உட்பிரிவு மனைப்பிரிவு அனுமதியின் அடிப்படையில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட்
ஒழுங்குமுறை ஆணையமும் பதிவு 35 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை
மற்றும் தீர்மானங்கள் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில்
பதிவு அலுவலகங்கள் மூலம் பதிவு பணியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால்
சமீபகாலமாக பதிவுத்துறையில் மேற்கண்ட உட்பிரிவு அனுமதிகளை பதிவு செய்ய
இயலாது என தெரிவித்து பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை திருப்பி
அனுப்புவதோடு மட்டுமில்லாமல் பதிவு செய்வதை நிராகரிக்கின்றனர். ஆகவே
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்: 78,
நாள்: 04.05.2017 இல் சட்டப்பிரிவு 2(2), மனை உட்பிரிவு வழங்குவதற்கு தகுதி
வாய்ந்த அதிகாரி மாநகராட்சிகளில் ஆணையாளர், நகராட்சிகளில் ஆணையாளர்,
பேரூராட்சிகளில் செயல் அலுவலர் மற்றும் ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி
அலுவலர் (கிராமஊராட்சி) என குறிப்பிட்டுள்ளது. மேலும் சட்டப்பிரிவு 8இல்
சென்னை பெருநகர திட்டப்பகுதியில் எட்டு பிரிவுகளுக்கு மேல் மனைகளாக
பிரித்தால் தான் மனைப்பிரிவாக கருத முடியும் எனவும், சட்டப்பிரிவு (16) இல்
மனை உட்பிரிவு என்பது சென்னை பெருநகர திட்டப்பகுதியில் 8 உட்பிரிவு
மிகாமல் இருக்க வேண்டும் எனவும், சென்னை பெருநகர திட்டமில்லாத பிற
பகுதியில் புதிய சாலைகள் மற்றும் தெருக்கள் உருவாக்காமல் அமைக்கும்
மனைப்பிரிவு எனவும் உள்ளது. மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின்
உறுப்பினர் செயலரின் செயல்முறை ஆணை எண். Proce.No.RT/15631/2009, இன் மூலம்
மேற்கண்ட 24 சென்ட்க்குள் எட்டு அலகுகள் வரை அமையும் மனை பிரிவிற்கு
அனுமதி வழங்கும் அதிகார வரம்பு சம்பந்தப்பட்ட துணை அதிகாரக் குழுக்களுக்கு
வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் அனுமதி தரும்
மனை உட்பிரிவு அனுமதிகளை தற்போது பதிவுத்துறை பதிவு செய்ய மறுக்கிறது.
ஆகவே மேற்கண்ட மனை உட்பிரிவு அனுமதி வழங்கும் அதிகார வரம்பு சம்பந்தமாக
சரியான வழிகாட்டி நெறிமுறையை அரசாணையாகவோ, அல்லது சட்ட திருத்தமாகவோ,
அல்லது சுற்றறிக்கையாகவோ வெளியிட்டு விரைவில் சரியான நடவடிக்கையை
மேற்கொண்டு தகுந்த தீர்வினை தாங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும்,
மேலும் தற்போது வரை மனை உட்பிரிவு அனுமதி பெற்ற மனைகளை எல்லாம் பதிவு
செய்வதற்கு தாங்கள் உரிய வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக
வேண்டுகிறோம்.
13. அனுமதியற்ற மனைப்பிரிவில் விற்கப்பட்ட மனைகளுக்கெல்லாம் பட்டா மாற்றம்
செய்துவிட்டு விற்கப்படாத மனைகளுக்கு மாத்திரம் தற்போதைய உரிமையாளர்
பெயரில் பட்டா மாற்றம் செய்து சமர்ப்பித்தால் தான் கொள்கை அளவிலான ஒப்புதல்
வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் வழங்கப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட்
கூட்டமைப்பின் 15வது மாநாடு 36 என்பது ஏற்புடையதாக அல்ல, மேலும் அது
நடைமுறைக்கு சாத்தியமும் அல்ல. ஆகவே இது போன்ற நேர்வுக்கு, கொள்கை அளவிலான
ஒப்புதல் வழங்குவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வழி வகை செய்ய FAIRA
கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
14. தமிழகம் முழுவதும் உரிய அனுமதி பெறாமல் ஏராளமான கட்டிடங்கள்
கட்டப்பட்டு வருவதை தடுத்து ஒழுங்குப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு
நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் முறையான அனுமதி
பெறாமலும் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாமலும்
கட்டிடங்கள் கட்டும் பணிகள் த தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே இதனை
தடுக்கும் பொருட்டு கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும்
கட்டடங்களை மூடி சீல் வைக்க கிராம ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம்
வழங்கிடும் வகையில் பொதுமக்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் வழங்காமல்
அதிரடியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள
(ந.க.எண்4870/2024 நாள்: 08.07.2025) அறிவிப்பானது கிராம மக்களிடையே பெரும்
அதிர்ச்சி மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கிராம ஊராட்சி
நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம்
இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதிச்
சான்றினை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது கிராம
மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற மக்கள்
தங்களுக்கான இல்லங்களை உருவாக்கும் பொழுது இல்லம் கட்டுவதற்கான பட்ஜெட்
மற்றும் அதற்குரிய முறையான அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தங்களது
இல்லங்களை கட்டிக் கொள்கின்றனர். அதே சமயம் தமிழகத்தில் 11,791 கிராம
ஊராட்சி கிராமங்களில் வசிக்கும் மக்கள் அரசு சம்பந்தப்பட்ட அரசு வழிகாட்டி
நெறிமுறைகளை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும் மற்றும் பொருளாதார
ரீதியாகயும்நலிவடைந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் வாழும் கிராம மக்கள்
அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கட்டிடப் பணிகளை மேற்கொள்வது என்பது
இயலாத காரியம் என்பதனை தமிழக அரசுக்கும் நன்றாக தெரியும். மேலும் கிராம
மக்கள் தங்களுக்கான சொந்த இல்லம் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் போது அரசு
வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கட்டுவதில்லை. காரணம் பெரும்பாலான மக்கள்
விவசாயம் மற்றும் தினக்கூலித்தொழில்செய்து அதில் கிடைக்கும் சொற்ப பணத்தைக்
சிறுக சிறுக சேமித்து தங்களது கட்டிடப் பணிகளை ஆரம்பிக்கின்றனர். பிறகு
படிப்படியாக தங்களுக்கு 37மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும்
தீர்மானங்கள் கிடைக்கும் பணத்தினை கொண்டு மீதி பணிகளை நிறைவு செய்து
தங்களது சொந்த இல்லக் கனவுகளை நினைவாக்கி மகிழ்கின்றனர். இந்நிலையில்
மேற்கண்ட வகையில் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பானது கிராம மக்களின்
சொந்த இல்லக் கனவுகளை தகர்க்கும். அது மட்டுமல்லாமல் ஒரு சில கிராம ஊராட்சி
அலுவலர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள இந்த அதிகாரத்தை தவறான வழியில்
செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே ஊராட்சிகளில் அனுமதி பெறாமல்
கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களுக்கான
அனுமதியினை பெற்றுக் கொள்ளும் வகையில் ஒரு வாய்ப்பினை வழங்க உரிய நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டுமென FAIRA கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.
15
.புதிய கோவை முழுமை திட்டம் 2041 இன் வரைவு பொது மக்களின் பார்வைக்கும்
-கருத்துக்கும் ஆலோசனைக்கும் வேண்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
கடந்த 2023 இல் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டபோது அங்கு கோவை மாவட்ட
விவசாய அமைப்பினரால் ஆட்சேபனையும் மற்றும் முற்றுகை போராட்டமும்
நடத்தப்பட்டு பல்வேறு வாக்குவாதங்களுடன் அந்தக் கூட்டம் முழுமை பெறாமல்
நிறுத்தம் செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் இது சம்பந்தமாக
கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என காத்திருந்த பொதுமக்களுக்கு அதற்கான
சூழலும் அமையவில்லை, போதிய வாய்ப்பு வழங்கவில்லை என அந்த பகுதியில்
வசிக்கும் மக்களின் மனக்குமுறல்கள் எமது FAIRA கூட்டமைப்பிற்கு தெரிய
வருகிறது. இணையதளம் சம்பந்தமான போதிய விழிப்புணர்வு இல்லாத சமானிய மக்கள்
கோவை புதிய முழுமை திட்டம் வரைவு சம்பந்தமாக தங்களின் கருத்துக்களை பதிவு
செய்ய இயலவில்லை ஆகவே பொதுமக்களின் மனக்குமுறல்களுக்கும்
எதிர்ப்பார்பிற்கும் மதிப்பளித்து மீண்டும் ஒரு முறை இது சம்பந்தமாக கோவை
முழுமை திட்டம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு
மட்டும் வாய்ப்பளித்து அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று,
தற்போதைய முழுமை திட்டத்தில் உள்ள நில வகைபாடுகளை அப்பகுதி மக்களின்
கருத்துக்களின் அடிப்படையில் கோவை முழுமை திட்டம் 2041 உடன் இணைத்து ஒரு
துணை திட்டம் தயாரித்து வெளியிட வழி வகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக
வேண்டுகிறோம்.
.
அடுத்த பதிவில் தொடரும்.....................

No comments:
Post a Comment