அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில்தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836
பதிவு – 5
பத்திரப்பதிவுத்துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தல் தீர்மானங்கள்!
1. பதிவுத்துறை தலைவர் அவர்கள் 15.05.2025 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆவணங்கள் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமெனவும் மேலும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்துவதுடன் அவர்களுக்கான சேவையினை உரிய முறையில் வழங்க வேண்டுமெனவும் அப்படி தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிவுத்துறை தலைவர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சுற்றரிக்கைக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் பொதுமக்கள் மற்றும் FAIRA கூட்டமைப்பின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
2. ஏலத்தின் வாயிலாக சொத்துக்களை வாங்கியவர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் விற்பனைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இப்படி வழங்கப்படும் விற்பனை சான்றிதழ்களை பதிவுத்துறை பதிவேட்டில் பதிவு செய்வதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக 7% மற்றும் பதிவு கட்டணமாக 4% என்கின்ற வகையில் கட்டணம் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2023-ல் வழக்கமான சொத்து விற்பனை பத்திரங்களுக்கான பதிவு கட்டணத்தை 4% இலிருந்து 2% ஆகக் குறைத்து நடைமுறைப்படுத்தியது. அதேசமயம் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் நடத்திய ஏலத்தின் வாயிலாக வாங்கப்பட்ட சொத்து சம்பந்தமாக வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும் விற்பனைச் சான்றிதழ் பதிவு கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாமல் முன்பிருந்த நிலையே அதாவது பதிவு கட்டணம் 4% என்கின்ற வகையிலே தொடர்ந்து வந்தது. தமிழ்நாடு அரசு வழக்கமான சொத்து விற்பனை பத்திரங்களுக்கான பதிவு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 14 கட்டணத்தை 4% இலிருந்து 2% ஆகக் குறைத்து நடைமுறைப்படுத்தியதை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக பாராட்டி வரவேற்றும் அதேபோன்று வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும் விற்பனைச் சான்றிதழ் பதிவு செய்வதற்கான கட்டணத்தையும் 4% இலிருந்து 2% ஆகக் குறைத்திட வழிவகை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையாக FAIRA கூட்டமைப்பு முன் வைத்தது. FAIRA கூட்டமைப்பின் மேற்கண்ட கோரிக்கையினை தமிழ்நாடு அரசு கனிவோடுபரிசீலித்து தமிழகத்தில் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும் விற்பனைச் சான்றிதழ் பதிவு தொடர்பாக1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் (1908 ஆம் ஆண்டின் மத்திய சட்டம் 16) பிரிவு 78 இன் கீழ் கட்டண அட்டவணையில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை ஏலத்தில் விடப்பட்ட சொத்துக்களின் விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை 4% இலிருந்து 2% ஆகக் குறைத்து அரசாணை (அரசாணை எண்:087, நாள்:13.06.2025) ஆக வெளியிட்டு வழிவகை செய்தமைக்கு FAIRA கூட்டமைப்பின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
3. பதிவுத்துறை சமீபத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள பத்திரப் பதிவு நடைபெற்ற தினத்தன்றே சம்பந்தப்பட்ட நபரின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி இணைப்பின் (LINK) வாயிலாக சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்க சான்றினை இலவசமாக பெற முடியும். மேலும் சம்பந்தப்பட்ட சான்றிதழ் இணைப்பு (LINK) 30 நாட்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டடுள்ளதன் காரணமாக இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கான திட்ட அனுமதி, சொத்து வரி, மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பிற்கான பெயர் மாற்றங்களை மேற்கொள்வதற்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தினை FAIRA கூட்டமைப்பு மனம் திறந்து பாராட்டி வரவேற்கிறது.
4. 09.09.2026 அன்று அங்கீகாரமில்லாத பட்டா மனைகளை விற்பதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு தமிழக அரசானது கொள்கை முடிவெடுத்து அங்கீகாரமில்லாத பட்டா மனைகளையெல்லாம் வரன்முறை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள கூடிய வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை (மனை வரன்முறை சட்டத்தை) கடந்த 04.05.2017 அன்று அரசாணை எண்: 078/2017 ஆக கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியது பிறகு அதில் சில மாற்றங்களை கொண்டு வந்து கடந்த 13.10.2017 அன்று அரசாணை எண்: 172 ஆக பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்துமுறையே அரசாணை எண்: 55 15 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கைமற்றும் தீர்மானங்கள் நாள்:02.05.2018, அரசாணை எண்:21 நாள் 05.02.2019, அரசாணை எண்: 16 நாள்: 25.01.2021. அரசாணை எண்: 40நாள்: 26.02.2021 & அரசாணை எண்: 118, நாள்:04.09.2023 ஆக கொண்டு வந்து, மனை வரன்முறை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது கடந்த 20.10.2016 அல்லது அதற்கு முன்னர் அங்கீகாரமில்லாத பட்டா மனைகளை வாங்கி வைத்திருக்கின்ற பொதுமக்கள் பலர் வெளிநாடுகளிலும் மற்றும் வெளிமாநிலங்களிலும் வசித்து வருவதின் காரணமாகவும் மற்றும் இத்திட்டத்தினை குறித்து போதிய விழிப்புணர்வு மற்றும் புரிதல் இல்லாத காரணத்தினாலும் பொதுமக்கள் தங்களுக்கான மனைகளை சிறப்பு திட்டமான மனை வரன்முறை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை தவறவிட்டார்கள்.இது குறித்து பொதுமக்கள் தரப்பிலிருந்தும் மற்றும் மேற்கண்ட FAIRA கூட்டமைப்பின் சார்பாகவும் அரசுக்கு முன்வைத்த கோரிக்கையினை அரசு கவனமுடன் ஏற்று, பொதுமக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனை வரன்முறை சட்டத்தினை மேலும் எதிர்வரும் 30.06.2026 வரை கால அவகாசம் அரசாணை எண் 70/2025 ஆக வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையானது பொதுமக்கள் மற்றும் வீட்டுமனை அபிவிருத்தியாளர்களிடைய பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு FAIRA கூட்டமைப்பின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
5. தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய தாங்கள் கடந்த 31.07.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணொளி வாயிலாக, வணிகவரி மற்றும் பதிவுத் துறைக்காக கட்டப்பட்டுள்ள 2 மாநில வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 64 கிராமங்களில் 9 கிராமங்களை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் 13 கிராமங்களை பிரித்து கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களையும் திறந்து வைத்தைதயும் 2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் தமிழகம் முழுவதும் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்கின்ற அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் - பெருநாழி மற்றும் கமுதி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை மற்றும் ஆழ்வார்திருநகரி, திருநெல்வேலி மாவட்டம் - வடக்கு வீரவநல்லூர் மற்றும் முக்கூடல், தர்மபுரி மாவட்டம் – பென்னாகரம், கடலூர் மாவட்டம் -பெண்ணாடம் மற்றும் குமராட்சி, தென்காசி மாவட்டம் சிவகிரி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 16 ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், வணிகவரி மற்றும் பதிவுத் துறைக்கான புதிய கட்டடங்கள் என தமிழ்நாடு முழுவதும் வணிகவரி மற்றும் பதிவுத் துறைக்கான புதிய கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய தாங்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான வணிகவரி மற்றும் பதிவுத்துறை சேவைகள் கிடைத்திடும் வகையில் வழிவகை செய்த தங்களுக்கு FAIRA கூட்டமைப்பின் சார்பாக உளமார்ந்த நன்றிகளையும் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
6. பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் ஒரு சதவிகிதம் முத்திரைத் தீர்வை குறைவு என சலுகை வழங்கி, சட்டசபையில் அறிவித்து வெளியிட்டுள்ள திட்டத்தினை மனம் திறந்து பாராட்டி வரவேற்று தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு FAIRA கூட்டமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
7. 2021-2022 நிதியாண்டில் ரூ.13,913 கோடி வருவாய் ஈட்டி சாதனை.
8. பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்க கட்டுப்பாட்டு அறை 16.06.2021-அன்று திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
9. சார்பதிவாளர் அலுவலங்களில் அமைக்கப்பட்டிருந்த உயர் மேடை மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டது.
10. போலி ஆவணப்பதிவினைத் தடுக்க ஆவணங்களைத் தயாரிக்கும் ஆவண எழுத்தர்/வழக்கறிஞர் புகைப்படம் ஆவணத்தில் ஒட்ட ஆணையிட்டது.
11. ஆவண எழுத்தர் நல நிதியம் தோற்றுவிக்கப்பட்டது.
12. சார்பதிவாளர் அலுவலங்களின் பதிவறையில் இணைய நெறிமுறை புகைப்படக் கருவி நிறுவப்பட்டுள்ளது.
13. மோசடி பதிவுகளைத் தவிர்க்க, மோசடிப் பத்திரத்தை ரத்து செய்யும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ரத்து செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.
14. கிருஸ்துவ திருமணச் சான்றுகளின் சான்றிட்ட உண்மை நகல் மண்டல துணைப்பதிவுத்துறைத்தலைவர் அலுவலகங்களில் 26.04.2022-முதல் வழங்க வழி வகை செய்யப்பட்டது.
15. வருவாய்க் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள் ஓரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையில் பதிவு எல்லைகள் சீரமைக்கப்பட்டது. 17 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கைமற்றும் தீர்மானங்கள்.
16. வருவாய் மாவட்டத்திற்கு நிகரான திருவாரூர், திருவள்ளுர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களின் தலைமை இடங்களில் 26.04.2022 அன்று 5-புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
17. பெரம்பலூர் பதிவு மாவட்டத்தில் கொளக்காநத்தம் சார்பதிவாளர், அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டது.
18. திங்கட்கிழமை தோறும் அனைத்து துணைப்பதிவுத்துறைத்தலைவர் மாவட்டப் பதிவாளர் அலுவலங்களில் பதிவுக்குறை நீக்கு முகாம் நடத்தப்படுதல்.
19. 45-தணிக்கை மாவட்டப்பதிவாளர் 1-மாவட்டப்பதிவாளர் ( நிர் ) மற்றும் 2 உதவிப்பதிவுத்துறைத் தலைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.
20. அலுவலகங்களில் அடையாளவில்லை காட்சிக் கருவி ( Token Display Unit) நிறுவப்பட்டது.
21. ஆதார் தரவுடன் ஆவணத்தை எழுதிக்கொடுப்பவர் / வாங்குபவர் விரல்ரேகை / கருவிழி படலம் சரிபார்த்தல்.
22. மூத்த குடிமக்களுக்கு பதிவில் முன்உரிமை அறிமுகம்.
23. தட்கல் டோக்கன் முறை அறிமுகம்.
24. பல்வேறு திருமணச் சட்டங்களின் கீழ்ப் பதிவு செய்யப்பட்ட திருமணப் பதிவு சான்றிதழ்களில் திருத்தம் செய்ய, இணைய வழி விண்ணப்பித்து திருத்தம் பெற 28.09.2022ம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
25. திருமணத் தரப்பினர்கள் திருமணம் நடத்தி வைத்து பதிவு செய்ய, கிறிஸ்துவ மத குருமார்கள்/அரசிடமிருந்து இந்திய கிறிஸ்துவ திருமணம் நடத்தி வைக்க உரிமம் பெற்ற உரிமைதாரர்களிடம், இணையவழி விண்ணப்பித்து பதிவு செய்யும் முறை 03.10.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
26. 26-மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நிர்வாக மாவட்டப்பதிவாளர் பணியிடங்களை, உதவிப்பதிவுத்துறைத்தலைவர் நிலை உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
27. அட்டவணைத் திருத்தம் இணைய வழி மேற்கொள்ளுதல்.
28. பொதுமக்களின் நலன் கருதி அலுவலகங்களில் பதிவுப்பணி சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படுதல்.
29. உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு குறித்து எழுதிக் கொடுக்கப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 18 உடன்படிக்கை ஆவணம், இரசீது ஆவணம் மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் மீது எழுதிக்கொடுக்கப்படும் ஐந்து ஆண்டுகளுக்குட்பட்ட வாடகை உடன்படிக்கை குத்தகை ஆவணம் ஆகியவை இணைய வழியாகவே ஆவணப்பதிவு மேற்கொள்ளும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
30. ஒருங்கிணைந்த தணிக்கை மென்பொருள் அலகு ஏற்படுத்தப்பட்டது.
31. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்துவரி குடிநீர் கட்டணம் கழிவு நீர் அகற்றும் வரி மற்றும் மின் கட்டணம் இவற்றில் பெயர் மாற்றம் செய்ய தானியங்கி விண்ணப்பம் வசதி.
32. ஆவண எழுத்தர் புதிய உரிமம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
33. சந்தை வழிகாட்டி மதிப்பில் உள்ள முரண்பாடுகளை களையும் பொருட்டு சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு குழு அமைத்தல்.
34. பதிவு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கருத்தரங்குகள் நடத்துதல் மாவட்டங்கள் தோறும் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்.
35. வில்லங்கச் சான்றுகள் இணைய வழி விண்ணப்பித்தவர்களுக்கு வரிசை கிராமமாக வழங்குதல்.
36. மின்னணு முத்திரை முறையை ( E- Stamping ) அனைத்து சார்பதிவாளர் அலுவலங்களுக்கும் நடைமுறைப்படுத்துதல்.
37. அரசு நிலங்கள் மற்றும் பிற தடைச் செய்யப்பட்ட நிலங்கள் பதிவு செய்யப்படுவதை ஆரம்ப நிலையிலேயே ஸ்டார் மென்பொருள் வழியாக தன்னிச்சையாக தடுக்கத் திட்டம்.
38. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் பெறப்படும் கடன் தொடர்பாக, பதிவு செய்யப்படும் உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு குறித்து ஆவணங்களுக்கு முத்திரைத்தீர்வை விலக்கு 31.12.2021 வரை நீட்டிப்பு.
39. பதிவுத்துறையில் சிறப்பு விருதுகள் வழங்கும் திட்டம்.
40. 01.01.1950 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களில் வில்லங்கச் சான்றினை இணைய வழியில் பார்க்கும் வசதி விரிவு செய்யப்பட்டுள்ளது.
41. மதுரை ( தெற்கு ) பதிவு மாவட்டத்தில் சாமநத்தம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் மதுரை ( வடக்கு ) பதிவு மாவட்டத்தில் பொதும்பு மேலூர் ( கிழக்கு ), செட்டிக்குளம் மற்றும் காவல்கிணறு ஆகிய 4 சார்பதிவாளர் 19 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கைமற்றும் தீர்மானங்கள் அலுவலகங்கள் ஆக 5 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் 29.12.2022 அன்று தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
42. திருச்சிராப்பள்ளி பதிவு மாவட்டத்தில் தில்லைநகர் பகுதியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் 29.06.2023-அன்று தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
43. ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னை மற்றும் கோவை ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.
44. சேலம்(கிழக்கு), காரைக்குடி மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய பதிவு மாவட்டங்களில் 3 புதிய தணிக்கை மாவட்டப்பதிவாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.
45. இராமநாதபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 புதிய மண்டலங்கள் முறையே 29.12.2022 / 27.04.2023 -அன்று உருவாக்கப்பட்டது.
46. தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் ( தெற்கு ) என இரண்டு புதிய பதிவு மாவட்டம் உருவாக்கப்பட்டு 21.07.2023 முதல் செயல்பட்டு வருகின்றன.
47. திருச்சிராப்பள்ளி பதிவு மாவட்டத்தில் காணக்கிளியநல்லூர் என்ற இடத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் 10.01.2024 அன்று தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
48. மிகப்பழமையான பதிவுத்துறைக் கட்டடங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல்.
49. பதிவுத்துறைத் தலைவர், அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் குழு (Grievances Redressal committee) அமைக்கப்பட்டது.
50. (Tiny url ஐ பயன்படுத்தி கைபேசி எண்ணுக்கு ஆவணம் பதிவு செய்த மறுநாள் வில்லங்கசான்று விவரங்களை அனுப்புதல் வசதி 19.02.2024 அன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
51. ஜுன் 2021 முதல் நவம்பர் 2024 வரையிலான காலத்தில் மூன்று மாவட்டப்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 43 சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
52. 2022-2023 நிதியாண்டில் ₹.17,296-கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
53. 2023-2024 நிதியாண்டில் ₹.18,825 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அடுத்த பதிவில் தொடரும்......................................
#thanksof #resoulutions #registration #department #regiatraiondepartment #faira2026

No comments:
Post a Comment