Tuesday, 27 January 2026

பதிவு – 4 தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஓழுங்குமுறை ஆணையம் (TNRERA) செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெ ரிவித்தல் தீர்மானங்கள்!

 


 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15-வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836

பதிவு – 4

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஓழுங்குமுறை ஆணையம்
(TNRERA) செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நன்றி
தெ ரிவித்தல் தீர்மானங்கள்!

1. வீட்டு மனை அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சிக்கல்கள் மற்றும் சிரமங்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காண வேண்டி TNRERA தலைவர்ஆகிய தங்களின்மேலானகவனத்திற்கு கொண்டு வரும்போது, அவைகளை தாங்கள் கவனமுடன் கேட்டு, ஆராய்ந்து, பரிசீலித்து உடனடி தீர்வு காணும் வகையில் வழிவகைசெய்து வரும் TNRERA தலைவர் அவர்களுக்கு FAIRA கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
2. விண்ணப்பதாரார்களின் ஆவணங்களில் உள்ள வருவாய்த்துறை பதிவேடுகளில் எழுத்துப் பிழை, அளவு பிழை போன்றவற்றை பிழைதிருத்தம் செய்து திருத்தப்பட்டஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு கால தாமதம் ஏற்படும் என்கின்ற வகையில் விண்ணப்பதாரருக்கு ஏற்படும் காலநேர விரையம் மற்றும் பொருளாதார இழப்புகளை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்டவருவாய்த்துறை அதிகாரியிடமிருந்து அதற்குரிய அடங்கல், அ-பதிவேடு மற்றும் வருவாய்த்துறை சான்றினை பெற்று TNRERA-வில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் உடனடியாக பதிவு செய்து அனுமதி பெறலாம் என்கின்ற வகையில் வாய்மொழி உத்தரவினை பிறப்பித்து எளிய வழியில் தீர்வினை வழங்கியதற்கு FAIRA கூட்டமைப்பின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

3. வீட்டு மனை அபிவிருத்தியாளர்கள் தங்களது புதிய வீட்டு மனைப்பிரிவில் அமைந்துள்ள பொதுச்சாலைகளை சம்பந்தப்பட்ட மனைப்பிரிவில் மனைகளை வாங்கிய உரிமையாளர்களை தவிர்த்து பிறர் பயன்படுத்தும் போது பாதுகாப்பற்ற சூழல் உருவாகும் என்கின்ற அச்சத்தினாலும், மேலும் சமூகவிரோதிகள் எளிதாக உள்ளே நுழையும் அபாயத்தை தடுத்திடும் வகையிலும் மற்றும் கால்நடைகள் எளிதாக மனைப்பிரிவினுள் நுழைந்து அடிப்படை கட்டமைப்புகளான சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, குடிநீர்குழாய்கள், மனைகளை வரையறுத்து நடப்பட்ட எல்லை கற்கள் போன்ற அடிப்படைகட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாத்திடும் வகையில் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் அமைப்பது அத்தியாவசியமென தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கின்றனர். அதேசமயம் சம்பந்தப்பட்ட மனைப்பிரிவை சுற்றிலும் அமைந்துள்ள பிறநிலங்களின் உரிமையாளர்கள் புதிய வீட்டுமனை பிரிவுகளின்அமைந்துள்ள பொது வழி சாலைகளை பயன்படுத்த முடியாத வகையில் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில்கள் அமைத்து தடுக்கப்படுவதின் காரணமாக, தங்களுக்கான நிலங்களில் புதிய வீட்டு மனை பிரிவுகளை ஏற்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்கவேண்டியுள்ளதெனவும் இதன்காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்ததனையடுத்து, வீட்டு அபிவிருத்தியாளர்களின் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி TNRERA தலைவர்ஆகிய தங்களை FAIRA கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அதற்கு TNRERA தலைவர்ஆகிய தாங்கள் இதற்கு தீர்வு காணும் பொருட்டு, வீட்டு மனை அபிவிருத்தியாளர்கள் புதிய வீட்டுமனைப்பிரிவிற்கு திட்டஅனுமதி வேண்டி பதிவு செய்து உத்தரவு பெறTNRERA-வில் விண்ணப்பிக்கும் போது ரூபாய். 100/- மதிப்புள்ள முத்திரைத்தாளில் தங்களது புதிய வீட்டுமனைப் பிரிவுகளில் அமைந்துள்ள பொதுவழிச்சாலைகளை அனைத்து தரப்பினரும் எவ்வித தடையுமின்றி தாராளமாக பயன்படுத்திக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்து உறுதி மொழி ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு உத்தரவு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லைஎன்கின்ற வகையில் வாய்மொழி உத்தரவினை பிறப்பித்து சிறந்ததீர்வினை ஏற்படுத்திக் கொடுத்த TNRERA தலைவர்ஆகிய தங்களுக்கு FAIRA கூட்டமைப்பின் சார்பாக பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

4. பொதுமக்கள், வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் TNRERA-வில் பதிவு செய்திடஏற்படும் சிரமங்கள், காலதாமதங்கள், சங்கடங்கள், பொருந்தாத விதிகள் மற்றும் சட்டவிதி மீறல்கள் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருக்கும் பட்சத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரைநடைபெறும் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது குறைகளை மனுக்களாக TN¬RERA தலைவராகிய தங்களிடம் நேரடியாக வழங்கி தீர்வினை காணும் வகையில் தாங்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு FAIRA கூட்டமைப்பின் சார்பாக எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

5. RERA Approval விரைந்து வழங்குதல் (கடந்தஆண்டுகளில் 8,522 அனுமதி வழங்குதல்)

அடுத்த பதிவில் தொடரும்......................

#thanksof #resolutions #tnrera #projects #implement #projectimplement #faira2026


No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...