Monday, 29 April 2024

மஹாபாரதம் காந்தரி போலவே கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு இருக்கிறாள்.

 “தெமிஸ் ஜஸ்டியா" கிரேக்க நீதி தேவதை சிலை பிரிட்டிஷ் இந்திய சட்ட நடைமுறை நீதி பரிபாலனம் செய்யும் நாடுகளில் இந்த மேடம் சிலையை பார்க்க முடியும். வாதி, பிரதிவாதி முகம் பார்த்து, பாவம், பச்சதாபாம், தயவு தாட்சண்யம் பார்த்து நீதி சொல்ல கூடாது என்பதற்காக மஹாபாரதம் காந்தரி போலவே கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு இருக்கிறாள். வாதி பிரதிவாதி சரியாக சமமாக எடை போட கையில் தராசு வைத்து உருவாகமாக மேடம் காட்டி கொண்டு நிற்கிறார்கள். தப்பு செய்தவர்களை தண்டிக்க கூரிய வாளை ஒரு கையில் வைத்து பயமுறுத்துகிறாள் 

சட்ட புத்தகம் மேல் ஒரு காலை வைத்து நீதி வழங்க அஸ்திவாரமே சட்ட புத்தகம் என்று எடுத்துறைக்கிறாள். சுவாரஸ்யமே அந்த பாம்பு தான் தீய நஞ்சு (toxic ) நபர்கள் நீதி வழங்க தடங்கல் செய்தால் அவர்களையும் காலில் போட்டு மிதிக்க வேண்டும் என்ற செய்தியை மறைமுகமாக சொல்கிறாள் இந்த மேடம். 

ஆனால் இன்றைய நிலையில் அந்த பாம்பு மலைப்பாம்பாக அல்லது கொடிய கட்டுவிரியனாக இருப்பதால் அந்த மேடம் காலில் விஷம் ஏறி இருக்கும். (படத்தில் உள்ள மேடம் சிலை சென்னை -எழும்பூரில் உள்ள வக்கீல் நண்பர் அலுவலகத்தில் எடுத்தது)



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#themis_justitia #themis #justice #lawyer #advocate #Greek #angel #British #statue #plaintiff #defendant #pity #compassion #kindness #mahabharatham #Gandhari #Law_book #court

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...