Tuesday, 9 November 2021

இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!!

  இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!!



இராமநாதபுரத்தில் ஒரு களபணி நிலுவையில் இருந்தது அதனை முடித்துவிட இராமநாதபுரம் சென்றேன். காலை இராமநாதபுரம் அரண்மனையை பார்க்க விருப்பம் நமது நில வரலாறு புத்தகத்திற்கு தரவுகளுக்காக !அதனால் காலையில் ஒரு ஆட்டோவில் கிளம்பி அரண்மனை சென்றோம்.

ஆட்டோகாரரிடம் இராமநாதபுரம் என்ற சிறப்பு அண்ணே என்றேன். அரபுநாடுகளும் இஸ்லாமிய சகோதரர்களும் இல்லை என்றால் இராம்நாடு இல்லை என்று சொல்லி விட்டார்.

அரண்மனைக்கு கொண்டு வந்து விட்டார்! நானும் நண்பர் இரவீந்திரனும் இராம்நாடு அரணமனையை சுற்றி வந்து அங்கு இருக்கும் இராஜாவை சந்திக்க முடியுமா என்று அரண்மணை ஊழியர்களை கேட்டேன் நான் ஒரு எழுத்தாளர் நிலம் சம்மந்தமாக ஆய்பவன் யூடியுபர் என்று அறிமுகபடுத்தி கொண்டேன்.

அதன்பிறகு ஒரு அரண்மணை நிர்வாகி இராஜாவிடம் பேசினார்! உடனடியாக அனுமதி கிடைத்து விட்டது! நீங்கள் அவரை சந்திக்கலாம் என்று சொன்னார்கள்! நாங்கள் இருவரும் அரண்மனையில் இராஜா அமர்ந்து இருக்கும் முற்றத்திற்கு சென்றோம்.எங்களை ஆசனம் கொடுத்து அமர சொன்னார்! கேள்விகளை கேட்க சொன்னார் !நான் ஏற்கனவே பேராசிரியர் கமால் அவர்களின் புத்தகங்களை படித்து இருப்பதால் கமால் சொல்லி இருக்கும் தகவல்கள் எல்லாம் உண்மையா? என்று கேட்டேன்!அவர் உண்மை தான் என்றார் !பலவேறு செய்திகளை அரசியல் பயணங்களை கேட்டேன்.மன்னர் திருமலைநாயக்கர் முதல் மக்கள் தலைவர் மூப்பனார் வரை அரசியல் பயணங்களை பகிர்ந்தார்! மாவீரன் ரிபெல் முத்துராமலிங்கம் பற்றி தகவல்கள் நிறைய கொடுத்தார்!

நிறைய பழைய வாசிப்புகளை இராஜா மூலமாக உறுதி படுத்தி கொண்டேன் புகைபடம் மட்டும் அனுமதிக்க வில்லை! ஆனால் நல்ல மன நிறைவோடு தகவல்களை பெற்று கொண்டோம் என்ற நிறைவில் வெளியேறினோம்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழி்ல் முனைவர்

9962265834/9841665836

#ramanathapuram #realestate #author #trainer #writer #consulting #field #muthuramalingam #Raja #letter #administration #land #history #information

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...