Monday, 22 November 2021

 ஆர்டிஐக்கு பிறந்த நாள் விழா ! அன்று அண்ணன் தியாகராஜன் அவர்களுடன்!!!

  ஆர்டிஐக்கு பிறந்த நாள் விழா ! அன்று அண்ணன் தியாகராஜன் அவர்களுடன்!!!



தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 தேதி அக்டோபர் மாதம் 12 தேதி கொண்டு வரபட்டது. அந்த சட்டத்தால் மக்களிடையே பல தகவல்கள் வெளிப்படையாக கிடைக்க ஆரம்பிக்க அரசு நிர்வாகத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் குறைய ஆரம்பித்துவிட்டது உண்மை! இந்த ஆர்டிஐயால் பலருக்கு பலவிதமான பயன்கள் என்றால் அண்ணன் தியாகாராஜன் அவர்களால் கோயம்புத்தூரில் ரிசர்வ் சைட்டுகள் பாதுகாக்கபடுகின்றன பலகோடி ரூபாய்களை கோவை மாநகராட்சிக்கு மிச்சபடுத்தி கொடுத்து இருக்கிறார். ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் டாப் 10 இளைஞர்களில் ஒருவராக விருது பெற்றவராக இருக்கிறார். ஆரர்டி ஐ மூலம் தியாகராஜன் அண்ணன் ஒரு வழியில் பயணிக்க !நானோ

இந்த ஆர்டிஐயால் என்னுடைய வாடிக்கையாளர் பலரின் சொத்து சிக்கலை தீர்க்க துணையாக வைத்து இருக்கிறேன். பல தகவல்களை தேடி எடுத்து வாடிக்கையாளரின் சொத்து சிக்கல் தீர்த்து இருக்கிறேன்.

ஆர்டிஐ யால் தகவல்கள் மறுக்கபடுகிறது. ஆர்டிஐ யால் பலன் இல்லை என்ற உற்சாகமற்ற வார்த்தைகளை அரசு ஊழியர்கள் பரவ விடுகிறார்கள். தகவல் கொடுக்காமல் தண்ணி காட்டும் பல ஆர்டிஐ தீர்ப்புகளை வைத்து இருக்கிறார்கள்!அதனையெல்லாம் ஓரங்கட்டி பதிலடி கொடுக்கும் விதமாக நான் நிலசிக்கல்களுக்கான ஆர்டிஐ நுணுக்கங்கள் என்ற புத்தகம் எழுதி கொண்டு வருகிறேன்.

நிச்சயம் அடுத்த ஆர்டிஐ பிறந்த நாளுக்குள் புத்தகத்தை கொண்டு வந்து விட வேண்டும்

என்னுடைய கோவை அலுவலகத்தில் அண்ணன் தியாகராஜன் அவர்களும் நானும் ஆர்டிஐ 17 வது பிறந்த நாளை கொண்டாடி மகழ்ந்தோம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் -தொழில் முனைவர்

#paranjothipandian #RTI #thiyakarajan #author #writer #consulting #trainer #book #land #Issue #problem #solve #realestate #agent #coimbatore #office #celebration 

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...