கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது!
Monday, 29 November 2021
கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது!
Monday, 22 November 2021
ஆர்டிஐக்கு பிறந்த நாள் விழா ! அன்று அண்ணன் தியாகராஜன் அவர்களுடன்!!!
ஆர்டிஐக்கு பிறந்த நாள் விழா ! அன்று அண்ணன் தியாகராஜன் அவர்களுடன்!!!
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 தேதி அக்டோபர் மாதம் 12 தேதி கொண்டு வரபட்டது. அந்த சட்டத்தால் மக்களிடையே பல தகவல்கள் வெளிப்படையாக கிடைக்க ஆரம்பிக்க அரசு நிர்வாகத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் குறைய ஆரம்பித்துவிட்டது உண்மை! இந்த ஆர்டிஐயால் பலருக்கு பலவிதமான பயன்கள் என்றால் அண்ணன் தியாகாராஜன் அவர்களால் கோயம்புத்தூரில் ரிசர்வ் சைட்டுகள் பாதுகாக்கபடுகின்றன பலகோடி ரூபாய்களை கோவை மாநகராட்சிக்கு மிச்சபடுத்தி கொடுத்து இருக்கிறார். ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் டாப் 10 இளைஞர்களில் ஒருவராக விருது பெற்றவராக இருக்கிறார். ஆரர்டி ஐ மூலம் தியாகராஜன் அண்ணன் ஒரு வழியில் பயணிக்க !நானோ
இந்த ஆர்டிஐயால் என்னுடைய வாடிக்கையாளர் பலரின் சொத்து சிக்கலை தீர்க்க துணையாக வைத்து இருக்கிறேன். பல தகவல்களை தேடி எடுத்து வாடிக்கையாளரின் சொத்து சிக்கல் தீர்த்து இருக்கிறேன்.
ஆர்டிஐ யால் தகவல்கள் மறுக்கபடுகிறது. ஆர்டிஐ யால் பலன் இல்லை என்ற உற்சாகமற்ற வார்த்தைகளை அரசு ஊழியர்கள் பரவ விடுகிறார்கள். தகவல் கொடுக்காமல் தண்ணி காட்டும் பல ஆர்டிஐ தீர்ப்புகளை வைத்து இருக்கிறார்கள்!அதனையெல்லாம் ஓரங்கட்டி பதிலடி கொடுக்கும் விதமாக நான் நிலசிக்கல்களுக்கான ஆர்டிஐ நுணுக்கங்கள் என்ற புத்தகம் எழுதி கொண்டு வருகிறேன்.
நிச்சயம் அடுத்த ஆர்டிஐ பிறந்த நாளுக்குள் புத்தகத்தை கொண்டு வந்து விட வேண்டும்
என்னுடைய கோவை அலுவலகத்தில் அண்ணன் தியாகராஜன் அவர்களும் நானும் ஆர்டிஐ 17 வது பிறந்த நாளை கொண்டாடி மகழ்ந்தோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் -தொழில் முனைவர்
#paranjothipandian #RTI #thiyakarajan #author #writer #consulting #trainer #book #land #Issue #problem #solve #realestate #agent #coimbatore #office #celebration
Thursday, 18 November 2021
நிலத்தின் நலமறிய ஆவல் -3சமூக கடமை ஆற்றி உணர்ச்சி ரீதியான பலத்தை தோழமைகளுக்கு நன்றி!!!
நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் -3 வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு தங்கள் சமூக கடமை ஆற்றி உணர்ச்சி ரீதியான பலத்தை (Emotionally Strong) தோழமைகளுக்கு நன்றி!!!
பர்கூர சார்பதிவகத்தில் நமது அண்ணன்!
பர்கூர சார்பதிவகத்தில் நமது அண்ணன்!
Wednesday, 17 November 2021
கந்தர்வ கோட்டையில் ஒரு நில வேள்வி!
கந்தர்வ கோட்டையில் ஒரு நில வேள்வி!
Tuesday, 16 November 2021
தம்பி வீரப்பூர் முத்து அவர்களுடன் திருச்சியில்!!!
தம்பி வீரப்பூர் முத்து அவர்களுடன் திருச்சியில்!!!
Sunday, 14 November 2021
மதுரையில் ஒரு அன்பு தம்பி அருண்!!!
மதுரையில் ஒரு அன்பு தம்பி அருண்!!!
மதுரைகாரங்க ரொம்ப பாசகாரங்க!அடோன் அண்ணன் ,சேகர் அண்ணன்,சின்ன மருது என்று என்னை நேசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் !அண்ணன் அருணும் அப்படிதான் கூர்ந்த அறிவு நில சிக்கல்களை பகுத்தாயும் திறன் நல்ல வாசிப்பு பழக்கம் என்று நிறைய கற்று கொள்ள வேண்டி இருக்கிறது அருண் அண்ணிடம்! மதுரை வந்து இறங்கியதும் அன்பு வரவேற்பும் விருந்தோம்பலும் கொடுத்தார்.
அருண் அவர்களுக்கு சில பொது செய்திக்கான ஆர்டிஐ மனுக்களை செய்து கொடுக்க சொன்னேன். செய்து கொடுப்பதாகவும் சொல்லி அதன் மாதிரி எனக்கு அனுப்பியும் வைத்தார்! ஐடி நிறுவன உத்தியோகம் போதுமான நடுத்தர வருமானம் என்று இருக்கிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் நிலம் சம்மந்தமாக செய்ய உங்களை நெறிபடுத்தி கொள்ளுங்கள் அண்ணா!அதில் தான் கற்றுலும் இருக்கிறது வரலாறும் எதிர்காலும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன்
கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834/9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #field #experience #madurai #realestate #agent #RTI
Friday, 12 November 2021
வழிசிக்கலில் மனதை தவிக்க விடும் தரும்புரி தம்பி!
வழிசிக்கலில் மனதை தவிக்க விடும் தரும்புரி தம்பி!
வழி தேவைபடுகிறது!அதற்கான சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளை ஒரு கால்பந்தாட்டம
போல் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுக்க ஆள் இல்லாததால்!
ஒரு உணர்ச்சி கொந்தளிப்பான போராட்டமாக மாற்றி வைத்து இருந்தார் என்னை பாண்டிசேரியல் வந்து சந்தித்தார்
பிறகு நான் தரும்புரி அருகே இருக்கும் அவர் கிராமம் சென்று அனைத்தையும் பார்வையிட்டு் குறிப்பெடுத்து செய்ய வேண்டியதை விளையாட்டு போல் அணுகவும் தோற்றாலும் ஜெயித்தாலும் அதனை இரசித்து அடுத்து எப்படி அடுத்த ஆட்டம் ஆட வேண்டும் என்று யோசித்து செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834/9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #filed #experience #realestate #agent #land #problem #issue #solve
Wednesday, 10 November 2021
ஹக்கீம் அண்ணன் ஒரு தகவல் மருத்துவர்!
ஹக்கீம் அண்ணன் ஒரு தகவல் மருத்துவர்!
Tuesday, 9 November 2021
இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!!
இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!!
இராமநாதபுரத்தில் ஒரு களபணி நிலுவையில் இருந்தது அதனை முடித்துவிட இராமநாதபுரம் சென்றேன். காலை இராமநாதபுரம் அரண்மனையை பார்க்க விருப்பம் நமது நில வரலாறு புத்தகத்திற்கு தரவுகளுக்காக !அதனால் காலையில் ஒரு ஆட்டோவில் கிளம்பி அரண்மனை சென்றோம்.
ஆட்டோகாரரிடம் இராமநாதபுரம் என்ற சிறப்பு அண்ணே என்றேன். அரபுநாடுகளும் இஸ்லாமிய சகோதரர்களும் இல்லை என்றால் இராம்நாடு இல்லை என்று சொல்லி விட்டார்.
அரண்மனைக்கு கொண்டு வந்து விட்டார்! நானும் நண்பர் இரவீந்திரனும் இராம்நாடு அரணமனையை சுற்றி வந்து அங்கு இருக்கும் இராஜாவை சந்திக்க முடியுமா என்று அரண்மணை ஊழியர்களை கேட்டேன் நான் ஒரு எழுத்தாளர் நிலம் சம்மந்தமாக ஆய்பவன் யூடியுபர் என்று அறிமுகபடுத்தி கொண்டேன்.
அதன்பிறகு ஒரு அரண்மணை நிர்வாகி இராஜாவிடம் பேசினார்! உடனடியாக அனுமதி கிடைத்து விட்டது! நீங்கள் அவரை சந்திக்கலாம் என்று சொன்னார்கள்! நாங்கள் இருவரும் அரண்மனையில் இராஜா அமர்ந்து இருக்கும் முற்றத்திற்கு சென்றோம்.எங்களை ஆசனம் கொடுத்து அமர சொன்னார்! கேள்விகளை கேட்க சொன்னார் !நான் ஏற்கனவே பேராசிரியர் கமால் அவர்களின் புத்தகங்களை படித்து இருப்பதால் கமால் சொல்லி இருக்கும் தகவல்கள் எல்லாம் உண்மையா? என்று கேட்டேன்!அவர் உண்மை தான் என்றார் !பலவேறு செய்திகளை அரசியல் பயணங்களை கேட்டேன்.மன்னர் திருமலைநாயக்கர் முதல் மக்கள் தலைவர் மூப்பனார் வரை அரசியல் பயணங்களை பகிர்ந்தார்! மாவீரன் ரிபெல் முத்துராமலிங்கம் பற்றி தகவல்கள் நிறைய கொடுத்தார்!
நிறைய பழைய வாசிப்புகளை இராஜா மூலமாக உறுதி படுத்தி கொண்டேன் புகைபடம் மட்டும் அனுமதிக்க வில்லை! ஆனால் நல்ல மன நிறைவோடு தகவல்களை பெற்று கொண்டோம் என்ற நிறைவில் வெளியேறினோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழி்ல் முனைவர்
9962265834/9841665836
#ramanathapuram #realestate #author #trainer #writer #consulting #field #muthuramalingam #Raja #letter #administration #land #history #information
Monday, 8 November 2021
வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!
வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!
Monday, 1 November 2021
நிலத்தின் நலமறிய ஆவல் -3வது வழிகாட்டுதல் முகாம் விழுப்புரத்தில் செழிப்புற நடைபெற்றது!
நிலத்தின் நலமறிய ஆவல் -3வது வழிகாட்டுதல் முகாம் விழுப்புரத்தில் செழிப்புற நடைபெற்றது!
கடந்த 30 .10 .2021 அன்று விழுப்புரத்தில் நகரத்தில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் மூன்றாவது நேரடி வழிகாட்டுதல் முகாம் ஆனந்தா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . காலை 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது .வந்து இருந்த நண்பர்கள் தூத்துகுடி,மதுரை,திருச்சி,திருப்பூர்,பெரம்பலூர்,குளித்தலை,சென்னை,கடலூர்,கள்ளகுறிச்சி பகுதிகளில் இருந்து வந்து இருந்தனர்,விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் நிறைய நபர்கள் வந்து இருந்தனர். நீதிதுறை பத்திரிக்கை துறை,காவல் துறையில் இருந்தும் நிறைய நண்பர்கள் வந்து இருந்தார்கள்.
காலையில் வருகின்றவர்களுக்கு பதிவு செய்தல் முடிந்த பிறகு அவர்களின் பிரச்சினைகள் அரசினுடைய கோரிக்கையா?அல்வது பிறத்தியாருடன் தாவாவா என்று வகை பிரித்து அதற்கேற்ற விண்ணப்ப படிவங்களை கொடுத்து தன்னார்வலர்களான சோளிங்கர் மோகன்,ஓமலூர் தமிழ்,ஊத்தங்கரை அருள்,கிருஷ்ணகிரி முத்து,திருப்பூர் இரவி ஆகிய தன்னாரவலர்கள் இரண்டு மணி நேரம் வரை வந்த நபர்களின் பிரச்சனையை தொகுத்து ஆவணபடுத்தினர். திண்டிவனம் கலைமணி அவர்கள் வருகின்றவர்களை வரவேற்கின்ற வேலைகளை மாலை வரை செய்து கொண்டு இருந்தார்.
உண்மையில் ஒரு நில சிக்கலை தீர்ப்பதற்கு முதலில் சிக்கலை ஆவணபடுத்துதுதான் அதனை தீர்ப்பதற்கு முதல் வழி அதனை வந்து இருந்தவர்களுக்கு செயல்முறை வடிவில் புரிய வைத்தோம். அதன் பிறகு வந்து இருந்த அனைத்து பிரச்சனைகளையும் நிலசிக்கல் வாரியாக பிரித்து எண்ணிடபட்டு அதன் அடிப்படையில் வந்து இருந்த மக்கள் புரிதலுக்காக அடிப்படை பாலபாடம் தெளிவாக எடுக்கப்பட்டது.
அதன் பிறகு மேடைமரியாதை நிகழ்வுகள் நிகழ்ச்சியை ஆவண எழுத்தர் திரு மோகன் அவர்கள் துவக்கி வைத்து விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்று பேசினார் அதன்பிறகு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் தலைவரும் நூலாசிரியரும் சமூக சிந்தனையாளருமான திரு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் சிறப்பு முன்னுரை அளித்து விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த வழக்கறிஞர் திண்டிவனம் திரு.தமிழரசன் அவர்களுக்கும் இன்வெஸ்டிகேட்டர் திரு. கதிரேசன் ஈரோடு அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசாக நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை பெயர் பொறித்த கேடயத்தினை வழக்கறிஞர் திண்டிவனம் தமிழரசன் அவர்கள் நினைவு பரிசினை வழங்கினார் இன்வெஸ்டிகேட்டர் திரு. ஈரோடு கதிரேசன் அவர்களுக்கு வழங்கினார் அதேபோல் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் செயலாளர் திரு. பாபநாசம் ஜெயக்குமார் அவர்கள் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் பெயர் பொறித்த கேடயத்தை விழுப்புரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திரு.இராவணன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு வழங்கினார் .
அதன்பிறகு விழுப்புரத்தில் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த தன்னார்வலர் விழுப்புரம் ஜெயமூர்த்தி அவர்களுக்கு மற்றும் ஆவண எழுத்தர் திரு தமிழ்ச்செல்வன் ஈரோடு ஆகியோருக்கும் தலைவர் திரு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டுகளை தெரிவித்தார் .
அதன் தொடர்ச்சியாக வழக்கறிஞர் திண்டிவனம் திரு தமிழரசன் அவர்கள் நிலத்தில் ஏற்படும் வழக்கு சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எவ்வாறு என்பதை தெளிவாக குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார் அதன் தொடர்ச்சியாக இன்வெஸ்டிகேட்டர் ஈரோடு திரு . கதிரேசன் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது சம்பந்தமான வழிகாட்டுதலையும் காவல்துறை அதிகாரிகளை நாம் அணுகும் முறையையும் சிறப்பாக எடுத்து வைத்து பேசினார் அதன் தொடர்ச்சியாக நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் செயலாளர் பாபநாசம் திரு ஜெயக்குமார் அவர்கள் மூன்று கருத்தரங்குகளையும் வரிசைப்படுத்தி அதில் விழுப்புரம் கருத்தரங்கம் மற்றவற்றில் இருந்து எவ்வாறு வேறு படுத்தப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதையும் எழுத்தாளர் தலைவர் சமூக சிந்தனையாளர் திரு சாமு பரஞ்சோதி பாண்டியனின் உழைப்பு தேடல் அவரது எதிர்கால சிந்தனைகளை பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டும் தனித்தனி ஆலோசனைகள் வழங்குவது குறித்தும் சிறப்பாக பேசினார்.
இறுதியாக எழுத்தாளரும் தலைவருமான திரு சாமு பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் நிலத்தின் சிக்கல்களை எடுத்துரைத்து வில்லங்கம் இல்லாத சொத்துக்கள் வாங்குவது எப்படி என்பதை குறிப்பிட்டு மோசடி பத்திரங்களை மாவட்ட பதிவாளரிடம் எப்படி கையாள்வது என்பதையும் சிறப்பாக விளக்கி கூறி பேசினார்.
அதன் பிறகு மதிய உணவு வேளை முன்னா பிரியாணி கடையின் முட்டை பிரியாணி உணவும், சைவ உணவுபிரியர்களுக்கு அய்யர் மெஸ் பட்டை சாதமும் வழங்கபட்டது. அதன்பிறகு நேரடி கலந்துரையாடல் வழிகாட்டுதல் ஈரோடு கதிரேசன் பாபநாசம் ஜெயகுமார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் தனி தனி நாற்காலியிட்டு தன்னார்வலர்கள் உறுதுணையுடன் வழிகாட்டுதல் எழுத்து பூர்வமாக ஆவணபடுத்தி வழங்கபட்டது. மேற்படி தனிதனி வழிகாட்டுதல் முடிய இரவு 9 மணி ஆகிவிட்டது.
நிகழ்ச்சியில் உறுதுணையாக இருந்த தன்னார்வலர் அனைவருக்கும் மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டது. அதன்பிறகு இரவில் இரண்டாவது நாள் ஆவணவேலைகளுக்கான முகாம் பாண்டிசேரி க்கு தன்னார்வலர்கள் அனைவரும் கிளம்பினோம். மறுநாள் ஞாயிற்று கிழமை முகாமில் கலந்து கொண்ட பாண்டிசேரி கோவிந்த ராஜி,கடலூர் குப்புசாமி ஆகியோர் நேரடியாக வந்து முழுமையான ஆலோசனை எழுத்து மூலமாக பெற்றனர். மீதி 27 நபர்களின் ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் எழுத்து மூலமாக தயாரிக்கபட்டு தபால் அனுப்பபட்டது.
மேற்படி நிகழ்வுக்காக மொத்த செலவுக்காக ரூ.19,132 ஆகி இருக்கிறது!அதில் அறக்கட்டனை உறுப்பினர் கட்டணமாகவும் நுழைவுகட்டணமாகுவும் நண்பர்கள் ஆதரவாளர்கள் நன்கொடையாகவும் வந்த தொகை ரூ 9996 ஆகும் மீத தொகை பிராப்தம் குழுமத்தின் இருப்பில் இருந்து நன்கொடையாக செலவிடபட்டு இருக்கிறது
மேற்படி நிலம் உங்கள் எதிர்காலம் அறகட்டளையின் நிலத்தின் நலம் அறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் சிறப்பாக நடைபெற்றதற்கு உள்ளும் புறமும் உழைப்பை கொடுத்து கொண்டே இருந்த அறக்கட்டளை துணைதலைவர் மேலூர் இர.முரளி,செயலர் பாபநாசம் ஜெயகுமார் மற்றும அறகட்டளை உறுப்பினர்கள் முத்து நயினார்,முத்துகதிர்வேல்,பிரகாஷ்,இரங்கநாதன்,மற்றும் பரஞ்சோதி பாண்டியனின் தொழில் முனைவு குடும்பத்தினர்,சிட்டாய் பறக்கும் தன்னாரவல உறவுகள் சமூக ஊடக உறவுகள் என அனைவரின் உறுதுணையுடன் 3வது வழிகாட்டுதல் முகாம் சிறப்பாக நடைபெற்றது
அடுத்து வழிகாட்டுதல்முகாம் நவம்பர் மாதம் சேலம் பெருநகரில் திட்டமிடபட்டு இருக்கிறது.அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்பதை மகிழச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு
நிலம் உங்கள் எதிர்காலம். மக்கள் நல அறகட்டளை நிர்வாகம்
9962265834/9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #trust #social_service #nilam_ungal_ethirkalam #investigator #police #document #problem #issue #solve #program #asset
ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025
“மலைகளின் அரசி ஏற்காட்டில் நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...
-
இனி நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1 மற்றும் பாகம் 2 இப்பொழுது நூல் உலகம் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்ச...
-
கந்தர்வ கோட்டையில் கோவிலூர் கிராமத்தில் புதிய குடியிருப்பு சங்கம் உதயம்! அவர்களின் அடிமனை பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கொடுத்...
-
திருத்தணி பேருந்து நிலையத்தில் சாமானியர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆர்வலர்கள் மாநாடு விழிப்புணர்வுக்கான பரப்புரை பயணம் செய...
