படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்!
பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு குளறுபடியால், நிலுவை வைக்கப்பட்ட, ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு தீர்வு காண, ஜூன் இல் இருந்து ‘சமாதான் திட்டம்’ நடைபெற்று வருகிறது.
சொத்து பரிமாற்ற பத்திரங்களை, அந்தந்த பகுதிக்கான வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்றபடி, முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் போன்றவை முடிவு செய்யபடுகிறது.
ஆனால், வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்புக்கு, சிலர் பத்திரங்களை பதிவு செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்த மதிப்புக்கு உரிய காரணத்தை உறுதி செய்ய, பதிவு சட்டம், 47 – ஏ மற்றும், 19 – பி ஆகிய பிரிவுகளின் படி, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும்.
விசாரணைக்கு அனுப்பப்படும் பத்திரங்கள், மாவட்ட பதிவாளர் களவிசாரனை மேற்கொண்டு உடனடியாக கோப்புகளை நகர்த்தாமல் நீண்ட காலமாக நிலுவையில் போடப்படுவதால், சொத்து வாங்கியோருக்கு, பத்திரம் கிடைக்காமல் போகிறது.
மேலும், பதிவுத்துறைக்கும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்காக, மதிப்பு வேறுபாடு காரணமாக, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையில் நிலுவையில் உள்ள பத்திரங்களுக்கு தீர்வு காண, பதிவுத்துறை, ‘சமாதான்’ திட்டத்தை அறிவித்துள்ளது.
# பதிவுத்துறை தலைவர்,பிறப்பித்த உத்தரவு..!
l முத்திரை தாள் பிரிவுக்கான, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு, 2017 ஜூன், 8 நிலவரப்படி நிலுவையில் உள்ள பத்திரங்கள், சமாதான் திட்டத்துக்கு தகுதி பெறும். கூடுதல் பதிவு கட்டணம், முத்திரை தீர்வையில், மூன்றில் இரண்டு பங்கு தொகையை செலுத்தினால் போதும்.
l இத்திட்டம், ஜனவரி 3ல் துவங்கி, ஏப்ரல் 2 வரை, அமலில் இருக்கும்.
l இத்திட்டத்தில் பயன்பெற பொதுமக்கள், சம்பந்தப்பட்ட சார் – பதிவாளர்களை நேரடியாக அணுக வேண்டும்.
சந்தேகம் இருந்தால், மாவட்ட பதிவாளர்கள், பதிவுத்துறை, டி.ஐ.ஜி.,க்கள், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறையில், ஜூன், 8 நிலவரப்படி, ஐந்து லட்சம் பத்திரங்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தினால், ஐந்து லட்சம் பேர், தங்கள் பத்திரங்களை பெற முடியும்.
குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!
சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்
தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.
முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

No comments:
Post a Comment