Saturday, 28 April 2018

பத்திரபதிவு துறைக்கு என்னுடைய ஆலோசனை மனுவும் ! எதிர்வினையும் !!

மார்ச் 2018 அன்று பத்திரபதிவு துறை பொது மக்களிடம் இருந்து ஆலோசனைகளை வரவேற்பதாக பத்திரிக்கைகளில் செய்தியாக அறிவித்திருந்தது.
சரி நாமும் நமக்கு தெரிந்த 2 விசயங்களை ஆலோசனைகளாக பத்திரபதிவு துறை I.G க்கு பதிவு தபால் அனுப்பியிருதேன் .
செய்தி இது தான்…….
1. வழிகாட்டி மதிப்பு கஸ்டமைஸ்ட் ஆக இருக்க வேண்டும்.
2. மாவட்ட பதிவாளருக்கு களபணி வேலை பளுவை குறைக்க தனி அதிகாரி நியமிக்கும் படியும் கேட்டிருந்தேன்.
அனுப்பிய மனுக்கு இது வரை பதில் ஏதும் வரவில்லை.
ஆனால் பத்திரிக்கைகளில் மாவட்ட பதிவாளர்க்கான வேலைபளு குறைப்பதற்காக விவசாய நிலமா ,மனையா என சார்பதிவாளர் நேரில் கள ஆய்வு செய்வதற்கு பதிவுத்துறை I.G சுற்றிக்கை அனுப்பியுள்ளார் என்ற செய்தியை ஏப்ரல் 15 அன்று வெளியுட்டுள்ளார் என்பதனை பத்திரிக்கையில் பார்க்கும் பொழுது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அந்த கடிதத்தையும் , அந்த மனுவையும், பத்திரிக்கை செய்தியையும் இதில் பதிவிட்டுள்ளேன்.
  
குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !

உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!

சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்

தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.

முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

Friday, 27 April 2018

பதிவு துறையில், ‘சமாதான் திட்டம்’ அறிவிப்பு….!

படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்!
பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு குளறுபடியால், நிலுவை வைக்கப்பட்ட, ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு தீர்வு காண, ஜூன் இல் இருந்து ‘சமாதான் திட்டம்’ நடைபெற்று வருகிறது.
சொத்து பரிமாற்ற பத்திரங்களை, அந்தந்த பகுதிக்கான வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்றபடி, முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் போன்றவை முடிவு செய்யபடுகிறது.
ஆனால், வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்புக்கு, சிலர் பத்திரங்களை பதிவு செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்த மதிப்புக்கு உரிய காரணத்தை உறுதி செய்ய, பதிவு சட்டம், 47 – ஏ மற்றும், 19 – பி ஆகிய பிரிவுகளின் படி, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும்.
விசாரணைக்கு அனுப்பப்படும் பத்திரங்கள், மாவட்ட பதிவாளர் களவிசாரனை மேற்கொண்டு உடனடியாக கோப்புகளை நகர்த்தாமல் நீண்ட காலமாக நிலுவையில் போடப்படுவதால், சொத்து வாங்கியோருக்கு, பத்திரம் கிடைக்காமல் போகிறது.
மேலும், பதிவுத்துறைக்கும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்காக, மதிப்பு வேறுபாடு காரணமாக, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையில் நிலுவையில் உள்ள பத்திரங்களுக்கு தீர்வு காண, பதிவுத்துறை, ‘சமாதான்’ திட்டத்தை அறிவித்துள்ளது.
# பதிவுத்துறை தலைவர்,பிறப்பித்த உத்தரவு..!
l முத்திரை தாள் பிரிவுக்கான, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு, 2017 ஜூன், 8 நிலவரப்படி நிலுவையில் உள்ள பத்திரங்கள், சமாதான் திட்டத்துக்கு தகுதி பெறும். கூடுதல் பதிவு கட்டணம், முத்திரை தீர்வையில், மூன்றில் இரண்டு பங்கு தொகையை செலுத்தினால் போதும்.
l இத்திட்டம், ஜனவரி 3ல் துவங்கி, ஏப்ரல் 2 வரை, அமலில் இருக்கும்.
l இத்திட்டத்தில் பயன்பெற பொதுமக்கள், சம்பந்தப்பட்ட சார் – பதிவாளர்களை நேரடியாக அணுக வேண்டும்.
சந்தேகம் இருந்தால், மாவட்ட பதிவாளர்கள், பதிவுத்துறை, டி.ஐ.ஜி.,க்கள், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறையில், ஜூன், 8 நிலவரப்படி, ஐந்து லட்சம் பத்திரங்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தினால், ஐந்து லட்சம் பேர், தங்கள் பத்திரங்களை பெற முடியும்.

குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !

உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!

சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்

தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.

முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.

சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து…

10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து, அதற்கு முன் 5 ஆண்டுகள் ரோட்டு கடைகளிலும் வீட்டிலும் அலுவலகம் வியாபாரத்தை நடத்தினேன். இன்று மும்பை;பெங்களூர்,சென்னை,கோயம்பத்தூர்,நெல்லை என வளர்ந்துள்ளது..நன்றியுடன் இந்நாளை கழிக்கிறேன்.
படத்தில் என் அன்பு ஆசிரியரும்,தாயாரும்..அலுவலகம் திறக்க ..பின்புறம் நம்ம Ravindran Pothiyamalai

ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிப்பு! மனை விற்பனை முகவர்கள் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்…

ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிப்பு மனை விற்பனை முகவர்கள் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்
சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்ட விதிகள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மனை விற்பனை முகவர்கள் கட்டாயம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்விதிகள் நடந்து வரும் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை மத்திய அரசு கடந்த மே 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள் 2017 உருவாக்கியுள்ளது.
அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி, செயலாளர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் செயலாளர், சட்டத்துறை ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும் குழுமம்/தீர்ப்பாயத்தின் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிய பரிந்துரைகளை வழங்கும். அதுவரை இடைக்கால ஏற்பாடாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு செயலாளர் குழுமமாக செயல்படுவார்.
தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள், 2017 முக்கிய அம்சங்கள் வருமாறு: 500 சதுரமீட்டர் நிலப்பரப்பளவு அல்லது எட்டு அலகுகளுக்கு மேல் உள்ள அனைத்து கட்டிட மனை விற்பனையில் ஈடுபடும் முகவர்கள் மற்றும் அத்தகைய திட்டங்கள் குழுமத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்விதிகள் நடந்து வரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்தவொரு கட்டிட மனை விற்பனை செய்ய இயலாது. ஒதுக்கீட்டாளரிடமிருந்து திட்டத்திற்காக வசூலித்த 70 சதவீத தொகையை திட்டத்திற்காக தனிக் கணக்கு துவக்கி வைப்பீடு செய்து அக்குறிப்பிட்ட திட்டம் மற்றும் கட்டிட செலவுக்கு அதனை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மேம்பாட்டாளர் தனது திட்டத்திற்கு உண்டான நிலம் எவ்வித வில்லங்கமும் இல்லை என்பதற்கும் அந்நிலத்திற்கு உண்டான சட்டபூர்வமாக உரிமை பெற்றவர் என உறுதிமொழி பத்திரம் அளிப்பதுடன் அத்திட்டம் நிறைவு பெறும் காலத்தையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரத்தில் சான்றளிக்க வேண்டும்.
எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இல்லாமல் ஒதுக்கீட்டாளரிடமிருந்து திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காட்டிற்கு அதிகமாக பணம் பெறக் கூடாது. அப்பத்திரத்தில் அலகின் மொத்த மதிப்பினையும் குறிப்பிட்டு பெற வேண்டும். ஒதுக்கீட்டிற்குபின் ஐந்து வருட காலத்திற்குள் கட்டுமானத்திலோ, வேலைப்பாட்டிலோ, தரத்திலோ, சேவையிலோ ஏதேனும் குறைபாடு இருப்பின் அதனை மேம்பாட்டாளர் தனது சொந்த செலவில் 30 நாட்களுக்குள் சரி செய்து தரவேண்டும். இச்சட்டத்தின் கீழ் குழுமம் அல்லது தீர்ப்பாளரால் பிறப்பிக்கப்படும் முடிவுகள் / செயலாணையால் பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம். அம்மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கொண்டிருக்கும். உறுப்பினர்களில் ஒருவர் நீதித்துறை சார்ந்த அலுவலராகவும் மற்றொருவர் நிர்வாகம் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த அலுவலராகவும் இருப்பார்.
இச்சட்டத்தின் கீழ் பல்வேறு அபராதங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அபராதங்கள் திட்டமதிப்பீட்டில் 10 விழுக்காடு அல்லது மூன்றாண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்படும். திட்ட மேம்பாட்டாளர் மற்றும் நுகர்வோர் இருதரப்பிலும் தங்கள் கடமையில் தவறும்பட்சத்தில், ஒரே விதமான விழுக்காட்டில் வட்டி செலுத்த வேண்டியது கட்டாயமாகும். தமிழக அரசின் கட்டிட, மனை விற்பனை ஒழுங்கு முறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபர் யூனியன் பிரதேசத்தினையும் இணைத்துக்கொள்ள இம்மாநில அரசின் இசைவினை மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குழுமத்தின் அலுவலகம் சென்னை எழும்பூரிலுள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையின் மூன்றாம் தளத்தில் தற்காலிகமாக இயங்கும்.
நன்றி : தினத்தந்தி

தங்க சுரங்கம் பூமிக்கு அடியில் இல்லை! அவை பூமிக்கு மேலே இருக்கிறது!

முதலீட்டு நோக்கில் வீட்டு மனைகளை வாங்கி வைப்பவர்கள் அறிவார்ந்த பார்வைக்கு! எனக்கு ஒரு நண்பர் மூலம் திரு.பிரான்சிஸ் அவர்கள் அறிமுகம் ஆனார். அவரின் மனைகளை அரசு ,நில ஆர்ஜிதம் செய்து விட்டது.
அதன் சம்மந்தமாக சில வேலைகளை நான் செய்ய நேரிட்டது. மேற்படி நண்பர் முதலீடு செய்த தொகை ரூ 12000/- , இருபது ஆண்டுகள் கழித்து அரசு நில ஆர்ஜித தாெகையாக அவரிடம் 58 இலட்சத்து 46ஆயிர்த்தை அவரிடம் கொடுத்தது . நில எடுப்பு இல்லை என்றால் நிச்சயம் இதை விட மூன்று மடங்கு வாங்கியிருப்பார்.
இதுல சிறப்பு என்ன வென்றால் 1983 ல் தாம்பரமே ஆள் இல்லாத காடு! ஒரகடத்தில் மனை வாங்க அநியாயத்திற்கு நெஞ்சு வேணும்!
அது நம்ம பிரான்ஸிஸ் அவர்களிடம் இருக்கிறது!
தங்க சுரங்கம் பூமிக்கு அடியில் இல்லை!
அவை பூமிக்கு மேலே இருக்கிறது!
புரிந்தவர்கள் செயலில் காட்டுபவர்கள்
வெற்றியாளர்கள்!!

திரு.பிரான்சிஸ்ராஜ் அவர்கள்
ரூ.12400/- க்கு 1983 ஆம் ஆண்டு
மனைகள் வாங்கியதற்கான ரசீது.

திரு.பிரான்சிஸ்ராஜ் அவர்களின் இடத்தை
தமிழக அரசு நிலா ஆர்ஜிதம் செய்ததற்கு
நஷ்ட ஈடாக 2௦13 ஆம் ஆண்டு கொடுத்த
தொகை 58 லட்சத்து 46ஆயிரத்து 456 ரூபாய் .
அதற்கான DD நகல் .
குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !
 உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!
சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்
தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.
முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...