Friday, 17 December 2021

நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!!

  நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!!



பாண்டிசேரி -செந்தில் முருகன் பிறந்து வளர்ந்தது விழுப்புரம் நகரத்தில் செட்டில்ஆனது பாண்டிசேரியில் !அரசு ஊழியாராக இருந்து ஓய்வு பெற்றவர்! மிகவும் பக்குவபட்டவர்! மனிதர்களை கையாளுவதில் திறனாளர்விழுப்புரத்தில் நடந்த நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கலந்து கொண்டவர் அதன்பிறகு என்னை இரண்டு மூன்று முறை சந்தித்து அன்பை பரிமாறிகொண்டோம்! அடுத்து கடலூரில் நடந்த வழிகாட்டுதல் முகாமிற்கு நேரடியாக வந்து தன்னார்வலாராக சிரம தானம் செய்தார் .நிகழ்ச்சிக்கு தேவையான சால்வைகள் நன்கொடையாக எடுத்து வந்தார்அன்னாருடன் ஒரு வேலையாக விழுப்புரம் பயணபடும் பொழது விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தேனிர் அருந்தினோம். அப்பொழுது அவர் பேச்சு வாக்கில் பழைய விழுப்புரத்தை படம் பிடித்து காட்டினார்!விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்,கலெக்டர் ஆபிஸ்,கோர்ட் என்று இருக்கின்ற இந்த பெரிய வளாகம் முழுதும் வழுதரெட்டி ஏரி இந்த ஏரியில் நான் குளித்து இருக்கிறேன்! இதோ நாம் இன்று டீ குடிக்கும் இந்த டிரெயினேஜ் பாதை ஒரு காலத்தில் வாய்க்கால்! இந்த இடமெல்லாம் விழுப்புரம் அல்ல ! பக்கத்தில் இருக்கும் சாலமங்கலம் கிராமம், அந்த கிராமத்தை சேர்ந்த வயற்காடுகள் தான் இந்த கட்டிடங்கள் எல்லாம்! முதலில் தந்தை பெரியார் போக்குவரத்து கழகம் இங்கு வந்தது! அதன்பிறகு விழுப்புரம் சக்கரை ஆலை நிறுவனம் சாலமங்கலத்தில் மனை பிரிவுகள் உருவாக்கினார்கள்! அப்படியே அரசு ——-ஏக்கர் ஏரியை நிலவகை மாற்றம் செய்து அரசு வளாகமாக மாற்றிவிட்டது! i மாநகராட்சியாக மாறிவிட்டது!தன் வாழ்நாளிலேயே ஒரு பெரிய மாற்றத்தை விழுப்புர்த்தில் பார்த்துவிட்டார் அண்ணன் செந்தில் முருகன்இப்படிக்குசா.மு.பரஞ்சோதி பாண்டியன்எழுத்தாளர்-தொழில் முனைவர்
பாண்டிசேரி -செந்தில் முருகன் பிறந்து வளர்ந்தது விழுப்புரம் நகரத்தில் செட்டில்ஆனது பாண்டிசேரியில் !அரசு ஊழியாராக இருந்து ஓய்வு பெற்றவர்! மிகவும் பக்குவபட்டவர்! மனிதர்களை கையாளுவதில் திறனாளர்
விழுப்புரத்தில் நடந்த நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கலந்து கொண்டவர் அதன்பிறகு என்னை இரண்டு மூன்று முறை சந்தித்து அன்பை பரிமாறிகொண்டோம்! அடுத்து கடலூரில் நடந்த வழிகாட்டுதல் முகாமிற்கு நேரடியாக வந்து தன்னார்வலாராக சிரம தானம் செய்தார் .நிகழ்ச்சிக்கு தேவையான சால்வைகள் நன்கொடையாக எடுத்து வந்தார்
அன்னாருடன் ஒரு வேலையாக விழுப்புரம் பயணபடும் பொழது விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தேனிர் அருந்தினோம். அப்பொழுது அவர் பேச்சு வாக்கில் பழைய விழுப்புரத்தை படம் பிடித்து காட்டினார்!
விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்,கலெக்டர் ஆபிஸ்,கோர்ட் என்று இருக்கின்ற இந்த பெரிய வளாகம் முழுதும் வழுதரெட்டி ஏரி இந்த ஏரியில் நான் குளித்து இருக்கிறேன்! இதோ நாம் இன்று டீ குடிக்கும் இந்த டிரெயினேஜ் பாதை ஒரு காலத்தில் வாய்க்கால்! இந்த இடமெல்லாம் விழுப்புரம் அல்ல ! பக்கத்தில் இருக்கும் சாலமங்கலம் கிராமம், அந்த கிராமத்தை சேர்ந்த வயற்காடுகள் தான் இந்த கட்டிடங்கள் எல்லாம்! முதலில் தந்தை பெரியார் போக்குவரத்து கழகம் இங்கு வந்தது! அதன்பிறகு விழுப்புரம் சக்கரை ஆலை நிறுவனம் சாலமங்கலத்தில் மனை பிரிவுகள் உருவாக்கினார்கள்! அப்படியே அரசு ——-ஏக்கர் ஏரியை நிலவகை மாற்றம் செய்து அரசு வளாகமாக மாற்றிவிட்டது! இப்பொழுது மாநகராட்சியாக மாறிவிட்டது! தன் வாழ்நாளிலேயே ஒரு பெரிய மாற்றத்தை விழுப்புரத்தில் பார்த்துவிட்டார் அண்ணன் செந்தில் முருகன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...