Monday, 27 December 2021

பாண்டிசேரி நிலத்தின் நலமறிய ஆவல்-5 சிறப்பாக நடந்தது!

  பாண்டிசேரி நிலத்தின் நலமறிய ஆவல்-5 சிறப்பாக நடந்தது!


25.12.2021 அன்று கிறிஸ்துமஸ் நாளில் பாண்டிசேரியில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் என்ற நிலசிக்கலுக்கான வழிகாட்டுதல்

நிகழ்ச்சி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அதற்கு அறகட்டளை குழுவினர்களும் சமூக ஊடக நண்பர்களும் அன்பான ஒத்துழைப்பை தொடர்ந்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை பொறியாளரும் குளோபல் பிராபர்ட்டி சர்வே நிறுவனத்தின் உரிமையாளரும் திரு.C.சந்தோஷ் குமார் அவர்களை சர்வே சம்மந்தமான expert talk ற்காக அழைத்து இருந்தோம்
இந்த முறை அரங்கம் நமது பாண்டிசேரி அலுவலகத்திலேயே உருவாக்கியிருந்தோம்!அதனால் அரங்க வாடகை கையை கடிக்கும் என்று நிலை இல்லை
காலை ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள் சேலம் பெங்களூர் கோவை திருவண்ணாமலை மரக்காணம் ஆகிய பகுதிகளில் இருந்து நண்பர்கள் வந்து இருந்தார்கள். வந்தவர்கள் நிலசிக்கல்கள் ஆவணபடுத்தபட்டு அதற்கேற்ற வழிமுறைகள் எழுத்துமூலமாக கொடுக்கப்பட்டது!
மேடை மரியாதை நிகழ்ச்சியில் வரவேற்புரை சோளிங்கர் மோகன் அவர்கள் ஆற்றினார். அதனை அடுத்து நிலம் உங்கள் எதிர்காலம் அறகட்டளை செயலாளர் பாபநாசம் ஜெயகுமார் அவர்கள் ரெவின்யூ சம்மந்தபட்ட சிக்கல்களை பேசினார். அதனை தொடர்ந்து c.சந்தோஷ் குமார் அவர்கள் சர்வே சிக்கல்கள் சம்மந்தமாக ஆழமாக உரையாற்றினார்
வந்திருந்த அன்பர்களில் சிலர் தங்கள் பெற்ற பயன்களை பற்றியும் நன்றியையும் அன்பையும் வெளிபடுத்தி பேசினார்கள்
இறுதியில் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் பேசினார்கள் நன்றியுரை கடலூர் அருண்குமார் அவர்கள் பேசி நிழ்வை இனிதே முடித்தார்கள்
அனைத்து கள வேலைகளையும் தம்பிகள் மதுராந்தகம் சுரேஷ் ,திருப்பத்தூர் இராமநாதன் ஊத்தங்கரை அருள் ஆகியோர் செய்தார்கள். அண்ணன் செந்தில் முருகன் அவர்கள் சால்வைகளை நன்கொடையாக வழங்கி நேரில் வந்து நிகழ்ச்சிக்கு ஓத்தாசையாக இருந்தார்.
அண்ணன் மேலூர் .இர.முரளி நிகழ்சிக்காக தொடர்ந்து ஆன்லைன் பிரச்சாரம் நன்கொடை திரட்டுதல் என்று உழைத்தார்.அதேபோல் சமூக பொறுப்புடையவர்கள் பலர் பலவேறு திசையில் இருந்து சிறு சிறு நிதிஉதவிகளை கொடுத்து சிறப்பு செய்தார்கள். இப்படி பல்வேறு தரப்பினரின் கூட்டு அன்பினால் மிகசிறப்பாக நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சி நடைபெற்றது
அடுத்த நிலத்தின் நலமறிய ஆவல் சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற விருக்கிறது.அதற்கான முழுமையான அறிவிப்பை விரைவில் வெளிவரும்
இப்படிக்கு
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள்நல அறகட்டளை
9962265834

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...