Monday, 27 December 2021

பாண்டிசேரி நிலத்தின் நலமறிய ஆவல்-5 சிறப்பாக நடந்தது!

  பாண்டிசேரி நிலத்தின் நலமறிய ஆவல்-5 சிறப்பாக நடந்தது!


25.12.2021 அன்று கிறிஸ்துமஸ் நாளில் பாண்டிசேரியில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் என்ற நிலசிக்கலுக்கான வழிகாட்டுதல்

நிகழ்ச்சி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அதற்கு அறகட்டளை குழுவினர்களும் சமூக ஊடக நண்பர்களும் அன்பான ஒத்துழைப்பை தொடர்ந்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை பொறியாளரும் குளோபல் பிராபர்ட்டி சர்வே நிறுவனத்தின் உரிமையாளரும் திரு.C.சந்தோஷ் குமார் அவர்களை சர்வே சம்மந்தமான expert talk ற்காக அழைத்து இருந்தோம்
இந்த முறை அரங்கம் நமது பாண்டிசேரி அலுவலகத்திலேயே உருவாக்கியிருந்தோம்!அதனால் அரங்க வாடகை கையை கடிக்கும் என்று நிலை இல்லை
காலை ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள் சேலம் பெங்களூர் கோவை திருவண்ணாமலை மரக்காணம் ஆகிய பகுதிகளில் இருந்து நண்பர்கள் வந்து இருந்தார்கள். வந்தவர்கள் நிலசிக்கல்கள் ஆவணபடுத்தபட்டு அதற்கேற்ற வழிமுறைகள் எழுத்துமூலமாக கொடுக்கப்பட்டது!
மேடை மரியாதை நிகழ்ச்சியில் வரவேற்புரை சோளிங்கர் மோகன் அவர்கள் ஆற்றினார். அதனை அடுத்து நிலம் உங்கள் எதிர்காலம் அறகட்டளை செயலாளர் பாபநாசம் ஜெயகுமார் அவர்கள் ரெவின்யூ சம்மந்தபட்ட சிக்கல்களை பேசினார். அதனை தொடர்ந்து c.சந்தோஷ் குமார் அவர்கள் சர்வே சிக்கல்கள் சம்மந்தமாக ஆழமாக உரையாற்றினார்
வந்திருந்த அன்பர்களில் சிலர் தங்கள் பெற்ற பயன்களை பற்றியும் நன்றியையும் அன்பையும் வெளிபடுத்தி பேசினார்கள்
இறுதியில் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் பேசினார்கள் நன்றியுரை கடலூர் அருண்குமார் அவர்கள் பேசி நிழ்வை இனிதே முடித்தார்கள்
அனைத்து கள வேலைகளையும் தம்பிகள் மதுராந்தகம் சுரேஷ் ,திருப்பத்தூர் இராமநாதன் ஊத்தங்கரை அருள் ஆகியோர் செய்தார்கள். அண்ணன் செந்தில் முருகன் அவர்கள் சால்வைகளை நன்கொடையாக வழங்கி நேரில் வந்து நிகழ்ச்சிக்கு ஓத்தாசையாக இருந்தார்.
அண்ணன் மேலூர் .இர.முரளி நிகழ்சிக்காக தொடர்ந்து ஆன்லைன் பிரச்சாரம் நன்கொடை திரட்டுதல் என்று உழைத்தார்.அதேபோல் சமூக பொறுப்புடையவர்கள் பலர் பலவேறு திசையில் இருந்து சிறு சிறு நிதிஉதவிகளை கொடுத்து சிறப்பு செய்தார்கள். இப்படி பல்வேறு தரப்பினரின் கூட்டு அன்பினால் மிகசிறப்பாக நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சி நடைபெற்றது
அடுத்த நிலத்தின் நலமறிய ஆவல் சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற விருக்கிறது.அதற்கான முழுமையான அறிவிப்பை விரைவில் வெளிவரும்
இப்படிக்கு
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள்நல அறகட்டளை
9962265834

Friday, 17 December 2021

நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!!

  நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!!



பாண்டிசேரி -செந்தில் முருகன் பிறந்து வளர்ந்தது விழுப்புரம் நகரத்தில் செட்டில்ஆனது பாண்டிசேரியில் !அரசு ஊழியாராக இருந்து ஓய்வு பெற்றவர்! மிகவும் பக்குவபட்டவர்! மனிதர்களை கையாளுவதில் திறனாளர்விழுப்புரத்தில் நடந்த நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கலந்து கொண்டவர் அதன்பிறகு என்னை இரண்டு மூன்று முறை சந்தித்து அன்பை பரிமாறிகொண்டோம்! அடுத்து கடலூரில் நடந்த வழிகாட்டுதல் முகாமிற்கு நேரடியாக வந்து தன்னார்வலாராக சிரம தானம் செய்தார் .நிகழ்ச்சிக்கு தேவையான சால்வைகள் நன்கொடையாக எடுத்து வந்தார்அன்னாருடன் ஒரு வேலையாக விழுப்புரம் பயணபடும் பொழது விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தேனிர் அருந்தினோம். அப்பொழுது அவர் பேச்சு வாக்கில் பழைய விழுப்புரத்தை படம் பிடித்து காட்டினார்!விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்,கலெக்டர் ஆபிஸ்,கோர்ட் என்று இருக்கின்ற இந்த பெரிய வளாகம் முழுதும் வழுதரெட்டி ஏரி இந்த ஏரியில் நான் குளித்து இருக்கிறேன்! இதோ நாம் இன்று டீ குடிக்கும் இந்த டிரெயினேஜ் பாதை ஒரு காலத்தில் வாய்க்கால்! இந்த இடமெல்லாம் விழுப்புரம் அல்ல ! பக்கத்தில் இருக்கும் சாலமங்கலம் கிராமம், அந்த கிராமத்தை சேர்ந்த வயற்காடுகள் தான் இந்த கட்டிடங்கள் எல்லாம்! முதலில் தந்தை பெரியார் போக்குவரத்து கழகம் இங்கு வந்தது! அதன்பிறகு விழுப்புரம் சக்கரை ஆலை நிறுவனம் சாலமங்கலத்தில் மனை பிரிவுகள் உருவாக்கினார்கள்! அப்படியே அரசு ——-ஏக்கர் ஏரியை நிலவகை மாற்றம் செய்து அரசு வளாகமாக மாற்றிவிட்டது! i மாநகராட்சியாக மாறிவிட்டது!தன் வாழ்நாளிலேயே ஒரு பெரிய மாற்றத்தை விழுப்புர்த்தில் பார்த்துவிட்டார் அண்ணன் செந்தில் முருகன்இப்படிக்குசா.மு.பரஞ்சோதி பாண்டியன்எழுத்தாளர்-தொழில் முனைவர்
பாண்டிசேரி -செந்தில் முருகன் பிறந்து வளர்ந்தது விழுப்புரம் நகரத்தில் செட்டில்ஆனது பாண்டிசேரியில் !அரசு ஊழியாராக இருந்து ஓய்வு பெற்றவர்! மிகவும் பக்குவபட்டவர்! மனிதர்களை கையாளுவதில் திறனாளர்
விழுப்புரத்தில் நடந்த நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கலந்து கொண்டவர் அதன்பிறகு என்னை இரண்டு மூன்று முறை சந்தித்து அன்பை பரிமாறிகொண்டோம்! அடுத்து கடலூரில் நடந்த வழிகாட்டுதல் முகாமிற்கு நேரடியாக வந்து தன்னார்வலாராக சிரம தானம் செய்தார் .நிகழ்ச்சிக்கு தேவையான சால்வைகள் நன்கொடையாக எடுத்து வந்தார்
அன்னாருடன் ஒரு வேலையாக விழுப்புரம் பயணபடும் பொழது விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தேனிர் அருந்தினோம். அப்பொழுது அவர் பேச்சு வாக்கில் பழைய விழுப்புரத்தை படம் பிடித்து காட்டினார்!
விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்,கலெக்டர் ஆபிஸ்,கோர்ட் என்று இருக்கின்ற இந்த பெரிய வளாகம் முழுதும் வழுதரெட்டி ஏரி இந்த ஏரியில் நான் குளித்து இருக்கிறேன்! இதோ நாம் இன்று டீ குடிக்கும் இந்த டிரெயினேஜ் பாதை ஒரு காலத்தில் வாய்க்கால்! இந்த இடமெல்லாம் விழுப்புரம் அல்ல ! பக்கத்தில் இருக்கும் சாலமங்கலம் கிராமம், அந்த கிராமத்தை சேர்ந்த வயற்காடுகள் தான் இந்த கட்டிடங்கள் எல்லாம்! முதலில் தந்தை பெரியார் போக்குவரத்து கழகம் இங்கு வந்தது! அதன்பிறகு விழுப்புரம் சக்கரை ஆலை நிறுவனம் சாலமங்கலத்தில் மனை பிரிவுகள் உருவாக்கினார்கள்! அப்படியே அரசு ——-ஏக்கர் ஏரியை நிலவகை மாற்றம் செய்து அரசு வளாகமாக மாற்றிவிட்டது! இப்பொழுது மாநகராட்சியாக மாறிவிட்டது! தன் வாழ்நாளிலேயே ஒரு பெரிய மாற்றத்தை விழுப்புரத்தில் பார்த்துவிட்டார் அண்ணன் செந்தில் முருகன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834

Thursday, 16 December 2021

முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!

  முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு

வாழ்த்துக்கள்
!!!


அண்ணன் இர.கிளியப்பன் வழக்கறிஞர் அரசியலாளர் முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக அந்த கிராம மக்களால் தேர்ந்து எடுக்கபட்டு இருக்கிறார்! அன்னாரை வாழ்த்தி சால்வையும் பரிசு கேடயமும் வழங்கினேன்
கிளியப்பன் அந்த ஊரில் தவிர்க்க முடியாத ஆளுமை! Go Getter தனக்கு தேவையானதை தானே தேடி கொள்ளும் ஆற்றல் படைத்தவர்
கிராமத்திற்கு நிறைய செய்ய வேண்டும்! தொண்டு நிறுவனங்கள் மற்றும் என்னுடைய வெளி தொடர்புகளை கிராமத்திற்கு அறிமுகபடுத்த கேட்டு கொண்டார்! நானும் கிராமத்தின் மொத்த ஜாதகத்தையும் சேகரித்து கொடுங்கள் நிறைய வேலைகள் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன்
நீடித்த ஆயுளும் ஐஸ்வர்யமும் பெற்று தானும் நன்றாக இருந்து கிராமத்தையும் நன்றாக வைத்து இருக்க வாழ்த்துகிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834

Wednesday, 15 December 2021

அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்

  அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு

வாழ்த்துக்கள்


மதுராந்தகம்-அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக திரு.வி.யோகேஷ் பாபு அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டதை வாழ்த்தி சால்வை மற்றும் அவர் பெயர் படம் பொறித்த வாழ்த்து கேடயம் நான் வழங்கினேன்
திரு.யோகேஷ் பாபு இளைஞர்,வழக்கறிஞர் நல்ல வாசிப்பாளர். இந்த மழைகாலத்திலும் இரவு முழுதும் பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்கி களபணியாற்றும் தோழர்! ஒரு வகையில் எனக்கு தம்பி!
நிச்சயம் சமூகத்தை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு செல்லும் தலைவர்களில் யோகேஷ் பாபுவும் ஒரு வருங்கால நம்பிக்கை
அன்பை முன்வைத்து செய்யும் பக்குவம் அறிவை பின்பற்றும் நிதானம் இருக்கிறது! இன்னும் தன்னை ஆழமாக உணர்ந்து அதில் வேர்விட்டு கிளைத்து பலருக்கு நிழல் தர தன்னை தகுதி படுத்திக்கொள்ளும் களமாக ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
ஊராட்சியின் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பயன்பட வாழ்த்துகிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

Wednesday, 1 December 2021

நிலத்தின் நலமறிய ஆவல் -4 தோழமைகளுக்கு நன்றி!!!

 நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் -4 வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு தங்கள் சமூக கடமை ஆற்றி உணர்ச்சி ரீதியான பலத்தை (Emotionally Strong) தோழமைகளுக்கு நன்றி!!!



 
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9962265834 / 9841665836

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...