Wednesday, 30 December 2020

இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!!

  இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!!



திரு.குணசேகரன் மாதவரம் மாற்று திறனாளி!
ஆழந்த சிந்தனையாளர்,சொத்து வாங்க வழிகாட்டுதல் வேண்டி சந்தித்தோம்.
புத்தக எடிட்டிங் வேலைக்காக 20 நாட்களுக்கு மேல் வடசென்னை கொளத்தூரில் தங்கிக் கொள்ள நல்ல ரூம் பரிந்துரையுங்கள் ஆன்லைனில் oyo வில் விலை அதிகமாக இருக்கறது என்றேன்.
ஆனால் அவரே தன் நண்பருடன் கொளத்தூரில் சுற்றி அலைந்து அசோக் விடுதியை புக்செய்து கொடுத்தார்
நம் நண்பர்கள் பலர் உடல் கைகால்கள் நன்றாக இருந்தும் முடி கொட்டுது, உயரம் கம்மி ன்னு புலம்பிகிட்டு இருக்காங்க!
இருக்கின்ற உடலுக்கு நன்றியுணர்வோடு இல்லாமல் !அப்படி இல்லாததை பற்றி நினைத்துக்கொண்டு இருக்கும் எதிர்மறை அரை கிறுக்கன்கள் நம்ம குணசேகரன் அண்ணனுடன் ஒரு தேநீர் சாப்பிடுங்கள்.
பேசாமலேயே நிறையப் பாடம் சொல்லிக் கொடுப்பார்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

Monday, 28 December 2020

தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!!

  தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!!



தமிழக அரசின் நூலகத்திற்கு எனது நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 என இரண்டு புத்தகத்தையும் தமிழக அரசின் நூலகத்துறையில் வைப்பதற்கு மாதிரிகளை அனுப்பியுள்ளேன்.
டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை, கன்னிமாரா போன்ற நூலகங்களுக்கு ஒரு மாதிரி புத்தகத்தைத் தபாலில் அனுப்பி இரண்டுப் படிவங்கள் நிரப்பி ரூபாய் 100 கட்டணமாகக் கட்டி புத்தகத்தின் soft copy ஐ சிடியில் வைத்து ஒப்படைக்கச் சொல்லி இருந்தார்கள்.அனைத்தையும் செவ்வனே செய்து முடித்துவிட்டேன்.
நூலகமே இனி உன் கடமைதான் !
நீ நூலகத்திற்காகப் புத்தகங்களை வாங்கினால் நிலத்தை பற்றிய அறிவு இன்னும் பலரிடம் சென்று சேரும்!
நண்பர்கள் யாராவது நூலக ஆர்டர் பெற்றுக் கொடுக்க உதவினாலும் பேருதவியாக இருக்கும்.
நூலகத் துறையே நல்ல செய்திக்காகக் காத்து இருக்கிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழிலமுனைவர்

Sunday, 27 December 2020

பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!

  பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!

 

அப்ரூவ்டு மேட்டர் தான் டிடிசிபி க்கு போயிடுச்சே இனி என்ன ஜோலி ரியல்எஸ்டேட் காரங்ககிட்ட
வீட்டு மனை உருவாக்கும் தொழிலில் வட்டிக்கு முதல் திரட்டி மனைப்பிரிவுகள் விற்பனை செய்து நாலு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்ற ரியல்எஸ்டேட் தொழில் முனைவோர்களின்வழிப்பறி செய்வது போல் செய்யலாமா!
கடந்த 20 வருடமாக உங்களிடம் பஞ்சாயத்து தலைவர்கள் வார்டு மெம்பர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கப்பம் கட்டித் தானே பஞ்சாயத்து NOC மனைகளைப் போட்டோம்
அப்பொழுது அங்கீகாரம் பற்றி அரசே ஒழுங்கா கொள்கை முடிவு எடுக்கவில்லை!
அப்பொழுது உருவாக்கிய மனைகளை இன்று விதி மீறல்கள் ஏன் போர்டு வைக்கிறீர்கள்!
இப்பொழுது டிடிசிபி வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் வாங்க ஓலை அனுப்பி இருக்கிறார்கள்!!
அதற்கு அவர்களுக்கு கப்பம் கட்டத் தானே நாங்கள் கடன் வாங்கி பணம் பிரட்டிக் கொண்டு இருக்கிறோம்.
வேலை புராசாஸ்ல இருக்கும்பொழுதே நீங்கள் அறிவிப்பு போர்டு வைத்து பொதுமக்களை பயமுறுத்தலாமா!!
டிடிசிபியில் அங்கீகாரம் அரசுக் கட்டணம் மட்டும் கட்டச் சொல்லி வேலையை ஒரு வருடம் இழுக்காமல் இருந்தால் தான் நாங்கள் எல்லா அங்கீகாரமும் வாங்கி விடுவோமே!
அதற்குள் நீங்கள் எதற்கு அறிவிப்பு பலகை வைக்கிறீர்கள் அங்கீகாரம் வாங்க வில்லை என்று!!
அந்த சைட் லாம் பாருப்பா டோசர் அடிக்க முடியாம களையா இருக்கு!!!
வியாபாரம் ஆகாத இடத்துக்கு எதுக்குப்பா அறிவிப்பு!!
உங்களிடம் இனி வரவே தேவை இருக்காது இனி டிடிசிபி AD யவே நாங்கள் உருவி விட்டு கொள்ளாலாம் என்று நினைத்தால் நீங்களும் அவிழ்த்துப் போட்டு நின்றால் எப்படி!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்

புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!

  புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!

 

ரியல்எஸ்டேட் களப் பணிக்காக பழைய வேட்டவலம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த ஆலம்பாடி கிராமத்திற்குச் சென்று இருந்தேன். 
விழுப்புரம் டூ திருக்கோயிலூர் சாலை டூ வீலர் பயணத்திற்கு ஏற்ற அழகான சாலை
சாலையின் இருபக்கத்தில் பெரியப் பெரிய குடைப்போல் நிழல் விரித்து இருக்கும் புளியமரங்கள் மரங்கள், இப்படி மரங்கள் இருப்பதால் வெயில் தெரியாதப் பயணம் செய்தேன்.
இதுபோல 1970 களில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பல புளியமர சாலைகள் எல்லாம் இப்பொழுது சாலை விரிவாக்கத்தில் பிய்த்து எடுத்துவிட்டார்கள்.
இப்பொழுது அருகி போய் இருக்கும் புளியமர நிழற்சாலைகளில் விழுப்புரம் -திருக்கோயிலூர் சிறப்பான சாலை.இனிவருங்காலங்களில் சாலை விரிவாக்கம் செய்தால் புளியமரத்தில் கை வைக்காமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தினர் காவலாக இருக்க வேண்டிகிறேன்
 
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
www.paranjothipandian.in
 
#jameen #realstate #field #paranjothi_pandian #viluppuram #Tamarind_Tree

எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!!

  என்னுடைய போதிமரம்!



கடந்த 18 ஆண்டுகளின் தொழில்முனைவு பயணங்களில் எனக்குள் நடக்கின்ற பல்வேறு மன போராட்டங்களுக்கு விடைகளை இந்த கடல்தாயிடம் வந்து அமரந்து அதனுடன் பேசி முடிவு எடுத்துகொள்வேன்.
பல்வேறு நபர்களுக்கு நான் ஆறுதல், ஹீலர், உந்துசக்தி, ஆனல் எனக்கு வலி தொய்வு களைப்பு போன்றவை ஏற்படும் பொழுது எல்லாம் அழகான கடல்தான் இளைப்பாறுதல்!
தெளிவற்று இருக்கும் பொழுது இந்தக் கடலின் இரைச்சல் அனைத்தையும் சீராக்கிவிடும்.
ஒன்றே ஒன்றுதான் எனக்குப் பாடம் அலைகள் ஓய்வதில்லை நீயும் ஓயாமல் உழைத்துக்கொண்டு இரு!!
இந்த கடலில் உன் அஸ்தி கரைக்கும் வரை!!
எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
 
 

Tuesday, 15 December 2020

ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!!

  ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!!



பன்னாட்டு நிறுவனத்தில் இலட்சங்களில் ஊதியம் சென்னை பெங்களூர் என்று சம்பாத்தியம் வாழ்க்கை என்று இருந்த ஆடிட்டருக்கு சொந்த ஊரில் அவருடைய உணர்வின் வேர்கள் ஆழமாக ஊடுருவி இருந்ததால்.

ஊரில் தொழில் செய்யத் தன்னுடைய அலுவலகத்தை ஊத்தங்கரை ரவுண்டானாவில் லோகநாதன் சேகர் ஆடிட்டர் என்ற முத்திரையுடன் திறந்துவிட்டார்.
எனக்கு பல ஆண்டுகள் முகநூல் நண்பர்,ஒரு சில விஷயங்களில் எனது நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்.

ரியல்எஸ்டேட் களப்பணிக்காக பெங்களூர் சென்றப் பொழுது நன்றி நிமித்தமாக ஊத்தங்கரையில் ஆடிட்டரை சந்தித்துவிட முடிவுசெய்து அவரை சந்தித்தேன். நிறைய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் கருத்தொற்றுமை இருக்கிறது.

வருங்காலங்களில் நம்முடன் அதிகம் பயணிக்கும் உறுதுணை ஆடிட்டர்.தொழில் முனைவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய மனிதர். நான் பயனடைந்து இருக்கிறேன் அதனால் பரிந்துரைக்கிறேன்.

பயன்படுத்திகொள்ளுங்கள்! தொழில் வாழ்வில் வெற்றிக் கொள்ளுங்கள்!!!

இப்படிக்கு,

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in
9841665836,9841665837

#ஊத்தங்கரை #ஆடிட்டர் #லோகநாதன்சேகர் #தொழில் #தொழில்முனைவர் #கணக்கு #auditor #லோகனதன்செகர் #account

புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!

 புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!



 
ஓய்வு பெற்ற புதுச்சேரி காவல்துறை ஆய்வாளரால் உருவாக்கபட்டு புதுவை புலனாய்வு என்ற பெயரில் அரசின் இலஞ்ச ஊழல்களை வெளிகொணருகின்ற வேலைகளை செய்கின்றார்கள்.
நில சிக்கலில் அவர்களுக்கு பல்வேறு புதிர்கள் இருந்து இருக்கிறது.
அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்க ரூம் போட்டு பாண்டிசேரி வரவழைத்துவிட்டனர்.
நான்கு மணிநேர இடைவிடாத உரையாடல் அனைத்துக்கும் விடை கிடைத்து கிளம்பி சென்றனர்
இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
 
 
 

நில சிக்கலுக்கான கள பணி ஆய்வு !!!

  நில சிக்கலுக்கான கள பணி ஆய்வு !!!

துபாயில் இருக்கின்ற நண்பர் ஒருவருக்கு மன உளைச்சல் கொடுக்கும் ஒரு நில சிக்கல் தான் வாங்கிய மனை தன்னுடைய எதிர் மனுதார்கள் பெரிய காம்பவுண்டு சுவர் போட்டு தங்கள் அனு போகத்திற்கும் கட்டுபாட்டிற்கும் கொண்டு வந்து வழக்கும் போட்டு நீண்ட நாட்களாக இழுத்து கொண்டு இருக்கிறது

வழக்கின் பொறுப்பை தந்தைக்கு பிறகு துபாயில் இருக்கிற தனயன் எடுத்து என்னை யுடுபில் பிடித்து பல்வேறு உரையாடல்கள் உரையாடியும் எனக்கு போதுமான தெளிவு வரவில்லை. எனவே சைட் விசிட் செய்ய தீர்மானித்து 100 கி. மீட்டர் பயணித்து பிரச்சனைக்குரிய இடத்தையும் பார்வையிட்டேன். எனக்கு தேவையான தகவல்களை எல்லாம் தந்தையார் கொடுத்தார்.

என்ன அசௌகரியம் என்றால் அமர்ந்து பேச ஒரு இடம் இல்லை அப்படிபட்ட லொகேசன். இருந்தாலும் வெளிச்சமான இடத்தை பார்த்து என் பையில் ரெடிமேடாக வைத்து இருக்கிற துண்டை (நாமெல்லாம் பஸ் ஸ்டாண்டில் துண்டு விரித்து படுக்கிற ஆள்
என்று அவருக்கு தெரியாது) விரித்து இதில் அமருங்கள் என்று சொன்ன பிறகு தான் என்ன சார் எல்லாம் ரெடியாக வைத்து இருக்கிறீர்கள் என்று சொல்லியவாறு ஆசைவாசம் அடைந்து அமர்ந்தார்

நீங்கள் தரையில் இருக்றீர்கள் எனக்கு மட்டும் துண்டா என்றார். அய்யா நான் மிலிட்டிரி பேண்ட் அழுக்கு தெரியாது நீங்கள் தும்பைபூ வேட்டி அதனால் என் துண்டில் அமருங்கள் என்று அமர வைத்து என் சந்தேகங்களுக்கு பதில் எல்லாம் பெற்று என் லேப்டாப்பில் ஏற்றிகொண்டு கிளம்பினேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in


Friday, 27 November 2020

கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!!

 கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!!



மக்களிடம் ஒப்படைக்கபடாத ஏழாயிரம் ஏக்கர் பூமிதான நிலங்களின் கிராமங்கள் அதன் சர்வே எண்கள் கேட்டு தகவல் பெறும் உரிமைசட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட பூமிதான பிரிவிற்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை சார்பாக தகவல்கள கேட்டு அனுப்பி உள்ளேன்.

முழு தகவல்கள் வந்த பிறகு விவசாயம் செய்ய விரும்பும் ஆயிரம் நபர்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் பூமி தானம் வேண்டி மொத்தமாக மனு செய்கிற முடிவில் இருக்கிறேன்.அரசிடம் இருக்கும் அனாதீனம் நிலங்களை கேட்பதை விட விவசாயத்திற்கு மட்டும் ஓதுக்கபட்டு இருக்கும் பூமிதான நிலங்களை பெற முயற்சிப்பது சீக்கிரம் பலித்துவிடும்.அந்த நிலங்களின் நோக்கமே நிலமற்றவர்களுக்கு பயிர் செய்ய நிலம் ஒப்படைப்பது ஆனால் அவை எங்கெங்கு இருக்கிறது என்ற தகவல்கள் தான் இல்லை அதற்கான முயற்சி தான் இந்த வேலை

இந்த வேலைகளுக்கு எல்லாம் ஆகும் தபால் செலவுகள் மனு செலவுகள் எல்லாம் ஏற்றுகொண்டு உள்ள புருனே வாழ் அண்ணன் திலக்ராஜ் முன்னாள் இராணுவ வீரர் திரு ஆகியவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக நன்றி!!

நிலத்தின் பயன் அனைவருக்கும் போய் சேர அரசின் தகவல்கள் தான் மிகவும் முக்கியம் அதன் பிறகு நம்முடைய தொடர் உழைப்பு தொடர் முயற்சி தேவை. நிச்சயம் காரியம் சித்தியாகும்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்/தொழில்முனைவர்

www.paranjothipandian

#பூமிதானம் #rti #நிலம் #அறக்கட்டளை #வினோபாவே #ஏக்கர் #நிலமற்றோர்

Monday, 16 November 2020

வடக்கு பெங்களூர் தாலுகாவில் முதலீட்டிற்கான மனை விற்பனை!!

 வடக்கு பெங்களூர் தாலுகாவில முதலீட்டிற்கான மனை விற்பனை!!



முதலீட்டிற்கான மனை விற்பனைக்கு இருக்கிறது விற்பவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் ! விலை அந்த பகுதியில் என்ன போகிறதோ அதனை வியாபரம் பேசி வாங்கலாம்.

எனக்கு அங்கு என்ன விலைவாசி என்று தெரியவில்லை !

பெங்களூர் நட்புகள் உதவி செய்யவும்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர
www.paranjothipandian.in
9841665836,9841665837,9962265834

#North. #banglore #plot #இலங்கா

நிலங்களை பற்றி Self learning செய்யும் இரயில்வே அதிகாரி!!

  நிலங்களை பற்றி Self learning செய்யும் இரயில்வே அதிகாரி!!



சேகர் சார் மெங்களூர் இராஜாஜி நகரில் வசிப்பவர் .பூர்வீகம் தமிழநாடு சோளிங்கர் பக்கம்.ஓய்வு பெற போகும் இரயில்வே அதிகாரி நிலம் சம்மந்தபட்ட பல கேள்விகளை ஒரு தாளில் எழுதி வைத்துகொண்டு ஒவ்வொன்றாக கேட்கிறார் நானும் ஒவ்வொன்றாக விடையை அழிக்கிறேன்.அவரும் அனைத்தையும் எழுத்தால் குறிப்பெடுத்து கொள்கிறார்.

ஓய்வு இரயில்வே அரசு அதிகாரி கூட நிலங்களை பற்றி கற்றுகொள்ள மெனக்கெடுகிறார் .ஆனால் இன்றைய இளைஞர்கள் நிலங்களை கற்றுக்கொள்ள பால்மாறுகிறார்கள். நட்புகளே கற்று கொண்டால்தான் பெற்று கொள்ள முடியும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில் முனைவர்

www.paranjothipandian.in

#learning  #education #realestate

Monday, 9 November 2020

நிலம் உங்கள் எதிர்காலம் best seller நோக்கி பயணிக்கிறது!



 நிலம் உங்கள் எதிர்காலம் best seller  நோக்கி பயணிக்கிறது!

சென்னையை சேர்ந்த நண்பர் அன்வர் கணியம் அறக்கட்டளை திரு.அன்வர் இந்த ஸ்கீரின் ஷாட்டை அனுப்பியிருந்தார். டெலகிராம் குழுக்களில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் கிடைக்குமா என்று உங்கள் புத்தகம் தேடப்படுகிறது என்று.

ஏற்கெனவே என்னிடம் சொல்லி இருந்தார் நிறைய பேர் டெலகிராம் குழுக்களில் கேட்கிறார்கள் என்று இப்பொழுது இந்த ஸ்கீரீன் ஷாட் பார்த்ததும் மண்டைக்குள் பட்டாம் பூச்சி பறக்குது

Best Seller அந்தஸ்து சீக்கிரம் என் உழைப்பிற்கு கிடைத்துவிடும் என்ன நம்பிக்கை
துளிர்விட்டு கொண்டு இலுக்கிறது

 

இப்படிக்கு,

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில முனைவர்
www.paranjothipandian.in

#bestseller #book #land #realestate #nilamudan # vaazhga # praptham

தரிசை பயிர் செய்யும் நிலமற்றவர் குடும்பம்!!!


 

நிலமற்றவர்கள் ஊரில் தரிசை தேடுங்கள் பயிர் செய்யுங்கள் கிராம நிர்வாக அதிகாரி அடங்கலில் நீங்கள் சாகுபடிசெய்கிறீர்கள் என்று குறிப்புகள் ஆகட்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படை பட்டாகேளுங்கள் என்று நான் எழுதியும் பேசியும் வருகிறேன்.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரின் ஒதுக்குபுறமாக சும்மா இருந்த தரிசை
ஒடுக்கபட்ட சமூக குடும்பம் விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டது.
இப்பொழுது களத்தில் இறங்கி மனு கொடுக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.ஏற்கனவே நான் களத்தில் சென்று பார்த்த இடம் தான் இப்பொழுது தலையாரி இதெல்லாம் செய்யகூடாது என்று குரல் குடுக்க ஆரம்பித்து விட்டார் என்று என்னிடம் சொன்னார்கள்.பயிர் செய்ய வேண்டாம் என்று நோட்டீஸ் கொடுக்க சொல்லுங்க போனில் பேசி மிரட்டும் தொனியில் பேச வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
www.paranjothipandian.in

#தரிசு #ஒப்படை #ஒடுக்கபட்டோர் #செங்கல்பட்டு #land #assignment

Wednesday, 4 November 2020

சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு

 சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு



தாத்தா சொத்துக்களை அப்பா அம்மாக்கள் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இடங்களுக்கு எந்த எந்த சர்வே எண்கள் எங்கு எங்கு இருக்கிறது போன்ற விவரங்கள் எதுவும் தெரியாது. மேற்படி கண்டுக்காமல் விட்ட இடங்கள் எல்லாம் புதிய ஆவணங்களை உருவாக்கி சம்மந்தமில்லாதவர்கள் ஆண்டு அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்ற நிலையில்

தாத்தா பாட்டி பெயர்கள் அ பதிவேட்டில் இருக்கிறதா என்று தேடிபார்க்க RTI யில் 2j மனு போட்டு இருந்தோம் .இரண்டு மணி நேரம் முழு கணக்கையும் தீர பார்த்து நமக்கு தேவையான குறிப்புகளை எடுத்து கொண்டோம். இப்பொழுது இதிலிருந்து நூல்பிடித்துகொண்டே சென்றால் கிடைக்கும் உறுதியான தகவல்கள் அடிப்படையில் சொத்து மீட்கும் படலம் ஆரம்பித்துவிடும்.

இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்,
எழுத்தாளர் தொழில்முனைவர்,
www.paranjothipandian.in.

#rti #2j #vao #nanthiyambakkam #asset #சொத்துமீட்டல் # property

நில பிரச்சினையை படமாகவே வரைந்துவிட்டார்கள்!!!

நில பிரச்சினையை படமாகவே வரைந்துவிட்டார்கள்!!!



தேனி மாவட்டத்தில் ஒரு பங்காளிகளுக்குள் நில சிக்கல் பாகம் பிரிவினை செய்யாமல் பல வருடங்களாக தனிதனியாக நின்று அனுபவித்து வருகிறார்கள்.யுடிஆரில் ஒரு பங்காளி பெயர் மட்டும் ஏறிவிட்டது அந்த வாய்ப்பை பயன்படுத்தி பல கிரய பத்திரங்களை உருவாக்கி விட்டனர் பொது பாத்தியதை வழி நீர்கால் எல்லாம் இப்பொழுது உரிமை இல்லை என்று தடுக்கின்றனர். இந்த சிக்கலை சரி செய்ய முடிவெடுத்த படத்தில் உள்ள சகோதரி எல்லா நில ஆவணங்களையும் ஆராய தொடங்கிய பிறகுதான் பங்காளிகள் நன்றாக பேசிகொண்டே இப்படி இரகசியமாக நிறைய தில்லுமுல்லுகள் பத்திரங்களில் செய்து இருக்கிறார்கள் என்று தெரிய வந்து இருக்கிறது. இந்த பிரச்சினை வருவதற்கு முன் சர்வே எண் என்றால் என்னவென்றே தெரியாது சகோதரிக்கு அதன்பிறகு யூடியூப் சேனல் புத்தகம் வக்கீல் என்று பலவகையில் நிலங்களை அதன்அடிப்படைகளை கற்று கொண்டு இருக்கிறார். அவரின் எதிர்மனுதாரர் உருவாக்கிய அனைத்து பத்திரங்களின் சொத்துவிவரங்களையும் தனி தனி வரைபடமாக ஒரே பிளானில் வரைந்து ஒவ்வொரு பத்திரத்தில் நடந்த தில்லுமுல்லுகளை தனிதனியாக வரைபடமாக வரைந்து இருந்தார்.

இதுவரை நிலசிக்கல் என்று ஆலோசனைக்காக வருபவர்கள் ஆவணங்களை அப்படியே கொடுத்துவிடுவார்கள் அதனை ஆழமாக படித்து புரிந்து கொள்ளவே அதிக நேரம் எடுக்கும்.சில நேரங்களில் முழு இரவும் எடுத்துகொள்ளும்.ஒரு சிலருக்கு பிரச்சினையை சொல்லவே தெரியாது நாம் தான் பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக நூல்பிடித்து் செல்ல வேண்டும்.

ஆனால் இந்த சகோதரி எளிதில் புரியும் விதமாக வரைபடமே போட்டுவிட்டார். ஐந்து நிமிடத்தில் ஐம்பதாண்டு கால சிக்கல்கள் புரிந்துவிட்டது. அட் என்று கண்களும் ஆச்சரியத்தில் விரிந்து விட்டது.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
www.paranjothipandian.in

#நிலசிக்கல் #வழக்கு #நீதிமன்றம்
#theni #map #land #consultant

கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம்!!!

 கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம்



அண்ணன் திருநெல்வேலி இராமகிருஷணன் அர்பணிப்புள்ள ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் அடிக்கடி தொடர்பிலேயே இருப்பார். அனைத்து தொழில் சார்ந்த விஷயங்களை பகிரந்து கொள்வார். கருப்பு சட்டை பற்றியும் ஒரு வாட்ஸப் செய்து போட்டு இருந்தார். உங்களுக்கு கருப்பு சட்டை சிறப்பாகதான் இருக்கறது. கருப்பு சட்டை ஒரு தனி அடையாளம் பிஸினஸ் உலகில் ஸடீவ் ஜாப்ஸ் தன்னை கருப்பு சட்டையிலே காண்பிப்பார். ஆப்பிள் கம்பெனியில் கருப்பு வண்ணம் இல்லாமல் இருக்காது. கருப்பு richness மற்றும் stand alone, brave போன்ற தன்மைகளை பிரதிபலிக்கும். அதனால் தொடர்ந்து கருப்பணியுங்கள் தலைமைத்துவத்துடன் தொழில் செய்யுங்கள்.

இப்படிக்கு,

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்/தொழில் முனைவர்

www.paranjothipandian.in

மனிதர்கள் பல விதம்!!!


 

மனிதர்கள் பல விதம்

கடந்ந வாரம் கடலூருக்கு கீழே தஞ்சை பள்ளதாக்கில் அதிராம்பட்டினம் வரை சென்று வந்ததில் திரு. நாகேஸ்வரம் -கும்பகோணம் பகுதிகளில் சொத்து சிக்கலகளுக்காக களபணி செய்தேன் அனைவருமே நல் விருந்தோம்பி வழி அனுப்பி வைத்தனர்.சந்தித்த ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒவ்வொருவிதமான வார்ப்பு ஒவ்வொருவருக்கும் வேறு வேறு வகையான நில சிக்கல்கள், ஆனால் சிக்கலை அணுக தெரியாமல் உணர்ச்சி கொந்தளிப்புகளால் தங்கள் மனதை குழப்பிகொள்கின்றனர்.
மனிதர்களின் அடிப்படை பலவீனமான பண்புகள் அப்படியே இருக்கிறது.
நிலசிக்கல் தாண்டி அவர்களின் மன தெளவிற்காகவும் பேச வேண்டி இருக்கிறது.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
www.paranjothipandian.in

#man #different #social #service 

Friday, 30 October 2020

தேடிவந்து மனை வாங்கும் வாடிக்கையாளர்!!

தேடிவந்து மனை வாங்கும் வாடிக்கையாளர்!!



திரு .பக்ருதீன் -சென்னை என்னை தேடி வந்து உங்கள் எழுத்துக்கள் வீடியோக்கள் எல்லாம் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். உங்களிடம் தான் முதலீட்டிற்கான மனை வாங்க வேண்டும் என்று ஆறு இலக்க அளவில் தொகையை கட்டிவிட்டு சென்று இருக்கிறார். அன்னாரின் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு அதிக ஊக்கத்தை அளிக்கன்றன மேலும் இவை போன்ற நிகழ்ச்சிகள் என்னுடைய கடந்த கால பிஸினஸ் காயங்களை ஆற்றிவிடும்
நன்றி வாடிக்கையாளர்களே!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /தொழில்முனைவர்
www.paranjothipandian.in
9962265834

Wednesday, 28 October 2020

நிலசீர்திருத்தம் -முழுமையடையாத திட்டம்

 



நிலசீர்திருத்தம் -முழுமையடையாத திட்டம்

நிலசீர்திருத்த துறையில் மூலம் அரசு உச்சவரம்பு தரிசாக்கி அதனை நிலமற்றவர்களுக்கு ஒப்படைக்கின்ற F பத்திர ஆணை நிலமற்ற மக்களுக்கு அரசு வழங்கியது.
தமிழகத்தில் பலர் F பத்திர ஆணையை வைத்து இருக்கிறார்கள் தவிர நிலத்தை சுவாதீனம் எடுத்து கொள்ள முடியவில்லை.

இப்படி பல இடங்களில் unfinished Task ஆக நில சீர்திருத்த துறை செயல்பாடுகள் இருந்து இருக்கின்றன.இப்படி நில ஒப்படையாக பேப்பரை மட்டும் பெற்று நிலத்தை பெறாத பயனாளிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நிலங்களை பெறுவதற்கான வேலையை நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையினர் மூலமாக செய்வோம்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in

பழைய சிலபஸ் - தொழில் அலுவலகமும் அதன் பயனும்


 

பழைய சிலபஸ் தொழில் அலுவலகமும் அதன் பயனும்

குடும்பம் வேறு வணிகம் வேறு இல்லாத காலத்தில் வீட்டோடு ஒட்டிய அலுவலகம் வீடு வியாபரம் குடும்பம் என்று அனைவரும் சேர்ந்து பங்களிக்கின்ற பாரக்கின்ற வாழ்க்கை அமைப்பு.இப்படி பழைய சிலபஸ் இல் இன்றும் வியாபாரத்தை பலர் நடத்திகொண்டு்இருக்கின்றார்கள்.

முன்பக்கம் வராந்தா அதில் நுழைந்தவுடன் பாய் விரிந்து வைத்து இருக்கும் அலுவலகம் அதன் உட்புரம் ஒரு அறையில் சரக்கு இருக்கும ஒரு குடோன்,அதன் பிறகு வீட்டிற்கான வரவேற்பரை அதன் பிறகு இல்வாழ்க்கைகான வீடு என்று ஒரு கட்டமைப்பு

வியாபரத்தில் அதிக புற நெருக்கடிகள் திடீர் எதிரிகள் அந்த வியாபர தலைவரை ஆட்டும் பொழுது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் எடுக்கின்ற முடிவுகளுக்கு அந்த வியாபார தலைவனின் உணர்ச்சிகள் (Emotion) மிக முக்கிய பங்கு வகிக்கிறது

நல்ல தூக்கம், நல்ல உணவு, நல்ல செக்ஸ் தரமான அன்பு சூழ் குடும்பம் இருந்தால் வியாபார தலைவன் வெற்றி மேல் வெற்றி அடைவார்கள். மேற்சொன்ன பழைய சிலபஸில் இவையெல்லாம் இயல்பாகவே அமைந்து விடும்.

இப்பொழுது இருக்கின்ற பிஸ்னஸ் சூழல் அப்படி இருப்பது இல்லை! தொழில் தலைவர்களுக்கு பல்வேறு மனதிசை மாறுதல்கள் மன சமநிலை இல்லாமல் முடிவெடுக்க கூடிய சூழல்கள்
கையில் இருக்கின்ற பணத்தை என்ன சொல்லி எப்படி சொல்லி எடுத்துகொண்டு போவது என்று வியாபர தலைவரை சுற்றி இருக்கிறார்கள்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /தொழில் முனைவர்
www.paranjothipandian.in

ரியல்எஸ்டேட் தொழில்முனைவோருக்கு பாடபுத்தமாக நிலம் உங்கள் எதிர்காலம்


 

ரியல்எஸ்டேட் தொழில்முனைவோருக்கு பாடபுத்தமாக நிலம் உங்கள் எதிர்காலம்

நன்றி வாசகர்களே! நண்பர்களே! சென்ற வருடம் நிலம் உங்கள் எதிர்காலம் இண்டாவது பதிப்பு வெளியிட்டு இருந்தேன். முழுதும் உங்கள் அன்பால் விற்று தீர்ந்தது.
என்னை போல ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்ற முகவர்களுக்கு ஒரு கோனார் விளக்க உரை போல பலருக்கு உதவி இருக்கிறது.

புத்தகம் மூலம் தெளிவு கிடைத்து இருக்கிறது. நிறைய நிலம் சம்மந்தபட்ட முடிவுகள் உருப்படியாக எடுத்து இருக்கிறோம்.
அக்கறை எடுக்காமல் வைத்து இருந்த நிலங்களுக்கு இப்பொழுது தான் பட்டா வாங்கினேன் என்றெல்லாம் பின்னூட்டம் வரும்பொழுது ஒரு நல்ல வேலையை தொழிலில் செய்து கொண்டு இருக்கின்றோம் என்ற மனநிறைவு வந்துவிட்டது.

இந்த ஆயுத பூஜையில் பாடபுத்தகங்களோடு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தையும் படைத்து இருக்கும்.திருநெல்வேலி ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்

இப்படிக்கு
சா.மு.பஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
www.paranjothipandian.in

Monday, 6 July 2020

மாத தவணையில் மனைகள் விற்பதும் வாங்கி தருவதும் அதிக ரிஸ்க்கான தொழில்

மாத தவணையில் மனைகள் விற்பதும் வாங்கி தருவதும் அதிக ரிஸ்க்கான தொழில்
அந்த தொழிலை தேரந்தெடுத்து வாழ்க்கையாக மாறிவிட்டது .அந்த தொழிலில் பலவேறு போட்டி பொறாமைகள்,தடைகள்,கஷ்டங்கள் ஆனாலும் அந்த மாத தவணை ரியல்எஸ்டேட் தொழிலையே மிக சரியாக செய்ய வேண்டும் அந்த தொழிலில் உள்ள குறைபாடுகளை அறவே நீக்கி சிறப்பான தொழில் முனைவராக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை!!
மிகவும் அதிகமாக உழைக்க ஆரம்பித்தேன்.இப்படி அடிதட்டு மக்கள பலருக்கு ஏதோ ஒரு சொத்து சேர்த்து கொடுக்க நான் உதவி இருக்கிறேன்.
அதே உத்வேகத்துடன் இப்பொழுதும் விருது நகர் அருகில் எரிச்ச ந்த்தம்-செங்கோட்டை கிராமத்தில் மாத தவணை ரூ750 x60 மாதங்கள் சீட்டு முறையில் அடிதட்டு மட்டும் நடுத்தர மக்களுக்கு நிலம் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பிராபதம் டீமால் உருவாக்க படுகிறது.
உங்களின் ஆதரவையும் வரவேற்பையும்
நாடி!!!
உங்கள் சிறுசேமப்பு முறையில் மனை மூலமாக சொத்து சேர்க்க
அழைக்கவும்
8110986111

மாத தவணை வாடிக்கையாளர் FEED BACK

அடிதட்டு மக்கள் எப்பொழுதும் பணம் கஷ்டம் பணம் ஏமாத்திடுவாங்க என்ற அதிக எதிர்மறை எண்ணங்களுடனே வாழ்ந்து அந்த எண்ணங்களையே தங்களை சுற்றி ரேடியேட் செய்து கண்ணுக்கு தெரியாத சிலந்தி வலையில் விழுந்து விடுவார்கள்.நான் அப்படிபட்டவர்களை அடையாளம் கண்டால் உடனடியாக அவரகள் இல்லம் சென்று அதிக நம்பிக்கைகளை உருவாக்கி அவர்களுக்கு சொத்து என்று ஒரு இரண்டு சென்டு ஆவது உருவாக்கி கொடுத்துவிடனும் என்று முடிவுஎடுத்து வேலை செய்வேன்.
அப்படி ஒரு feed back தான் இது
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
குறிப்பு: தற்பொழுது விருது நகர்,எரிச்ச நத்தம் அருகில் செங்கோட்டை கிராமத்தில் மாதம் ரூ 750 x 60 மாதங்கள் தவணைதிட்ட மனையின் புக்கிங்கிற்காக பிரச்சாரம் நடை பெற்று கொண்டு இருக்கிறது.சேர்ந்து பயனடைவீர்!!
மனை புக்கிற்கு
8110986111

பிராப்தம் ரியல்டர்ஸில் தன் அனுபவங்களை பகிரந்து கொள்கிறார் நமது வாடிக்கையாளர்

பிராப்தம் ரியல்டர்ஸில் தன் அனுபவங்களை பகிரந்து கொள்கிறார் நமது வாடிக்கையாளர
கள் http://youtu.be/MvMzdpfLRs4

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...