Sunday, 26 August 2018

கேரளாவுக்காக பிராப்தம் ரியல்டர்ஸ் முன்னெடுப்புகள்!!


அன்புடையீர்
வணக்கங்களும்!வாழ்த்துக்களும்!
மழை வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளாவுக்கு பிராப்தம் ரியல்டர்ஸ்
இன் நெட்வொர்க் மற்றும் ரீசோர்ஸ்ஸை பயன்படுத்தி நிவாரண உதவிகளை
சென்னை, தென்காசி, மதுராந்தகம்,மும்பையில் இருக்கும் எங்களின் கிளைகள் மூலம் ஒருங்கிணைத்து அதனை எங்களுடைய கோவை அலுவலகத்திற்கு அனுப்பி அங்கிருந்து நிவாரண உதவிகள் இரயில் மூலம் பாலக்காடு வழியாக அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்.பிராப்தம் ரியல்டர்ஸ் ஊழியர்களும் நிவாரண பொருட்களுடன் உடன் செல்லுகின்றனர்.
இந்த பணியில் பங்கெடுத்து கொள்ள சிரம தானம் (உடல் உழைப்பு) கொடுக்க விரும்புபவர்கள் உங்கள் பகுதிகளில் நிவாரணபொருட்களை சேரித்து எங்கள் கிளைகளில் ஒப்படைக்கலாம்.
அதிக அளவில் சேகரிப்பவர்களுக்கு நிறுவனத்தில் இருந்து சுமைவாகனம் அனுப்பி வைக்கப்பட்டு எடுத்து கொள்ளப்படும்.
மேற்படி கள வேலைகளை ஒருங்கிணைக்க பெட்ரோல் வண்டிவாடகை என செலவுகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட எங்கள் அறக்கட்டளை வங்கி கணக்கு எண்ணுக்கு தொகையாக அனுப்பலாம் அல்லது கீழ்கண்ட பேமண்ட் கேட்வே லிங்க்ககில் பணம் செலுத்தலாம்.
சிரம தானம் செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் அறக்கட்டளை மூலம் சிறந்த தனார்வலர் என்று சான்றிதழ் வழங்கப்படும்.
பணமாக நன்கொடை அளிப்பவர்களுக்கு இரசீதும் நன்றி கடிதமும் அனுப்பி வைக்கப்படும்.
மேற்படி வேலைளை ஒருங்கிணைக்க 2015 கடலூர் வெள்ள நிவாரண உதவிகளை என் பின்னால் நின்று வெற்றிகரமாக ஒருங்கிணைத்த திருமதி.நித்யா (கோவை) இந்த பணியில் முழுநேரமும் ஈடுபட்டு இருக்கிறார்கள்!
நிறவனத்தின் நண்பர்கள் முகவர்கள் ஊழியர்கள் நல விரும்பிகள் தங்கள் வேலையோடு வேலையாக கொஞ்சம் மனசும் நேரமும் ஒதுக்கினால் மகத்தான மனித நேய சேவையில் பங்கெடுக்கலாம்!!
பங்கெடுக்க விரும்புவோர் சென்னை,மும்பை,பெங்களூர்,கோவை,தென்காசி,மதுராந்தகம் உள்ள எங்கள் அலுவலத்தில்ஒப்படைக்கலாம்.
அதன் முகவரிகள்

TENKASI
No: 121(4), Kamarajar Nagar (Near RTO Office),
Kuthukkal Valasi, Elathur(Po), Tenkasi – 627803.
04633 – 280837

PRAPTHAM REALTORS – CHENNAI
Old No:30, New No:80,Mutha Nisha Street,
Ellis Road( Behind Devi Theatre),Mount Road ,Chennai – 2.
044 – 28523847

PRAPTHAM REALTORS – MUMBAI
14, Floor-GRD,8, Jairam Jadhav Wadi,
N S Mankikar Marg, Sion Talao
Sion East, Mumbai – 400022.
7666262726

PRAPTHAM REALTORS – BANGALORE
No.1, Ground Floor, 5th Cross Street,
Manjunatha Temple Street, Sudhama Nagar,
Near Shanthinagar BMTC Depot, Bangalore – 560 027.
080 – 2222 9276

PRAPTHAM REALTORS – COIMBATORE
No. 239, Bhaarat Complex,Sathy Road,
Ganapathy Bus Stop,Ganapathy,Kovai – 641006.
0422 – 4351150

PRAPTHAM PROPCARE – MADURANTAKAM
No.108, PJR Agro Shopping centre,
Aringar Anna Bus Stand,
Madurantakam – 603306.
044 – 27555539

பணமாக உதவி செய்ய நினைப்போர் கீழ்கண்ட வங்கி கணக்கில் போடலாம்
ACCOUNT DETAILS:-
Name – deepangara buddhar trust
Ac – 1319102000002318
Bank – idbi
Ifsc – IBKL0001319
Branch – Tenkasi
அல்லது
கீழ்கண்ட லிங்க் வழியாக நேரடியாக பணம் செலுத்தலாம்.
https://www.instamojo.com/@deepangarabuddhartrust/
அனைத்துவிதமான தொடார்புகளுக்கும்
திருமதி நித்யா:9944744493

Thursday, 16 August 2018

கடலூர் வெள்ள நிவாரண உதவியும் தற்போதைய கேரளா வெள்ள இயற்கை பேரிடரும்!








2015 ஆண்டு இறுதியில் சென்னை மற்றும் கடலூரில் பெருவெள்ளம் வந்த போது.மீடியா கவனம் முழுக்க சென்னையில் தான் இருந்தது.

கடலூர் அதிகம் கவனிக்கப்பட வேண்டும் என்று நான் உணர்ந்து நானும் என்குழுவினரும் இரண்டாம் நாளே நிவாரண பொருட்களுடன் கடலூர் சென்றுவிட்டேன்.

முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு அதிகாரிகளை நிவாரண பொருட்களுடன் சந்தித்தேன்.பொருட்களை அவர்கள் காட்டிய இடத்தில் வைக்க சொன்னார்கள்.

எனக்கு கொஞ்சம் உறுத்தலாகவே இருக்க நிவாரண பொருட்கள் எப்பொழுது  போய் மக்களிடம் சேரும் என்று கேட்டதற்கு அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் அங்கிருந்து கிராம அலுவலர் அலுவலகம் போய் மக்களிடம் போகும் அதுவும் சீக்கிரம் போகாது..சாலைகள் போகமுடியதாபடி அறுந்து இருக்கின்றன.மின்சார கம்பங்கள் விழுந்து இருக்கின்றன.

அதனால் நிலைமை கொஞ்மாவது சீரான பிறகு நிவாரண பொருட்கள் சென்று சேரும் என்றார்கள்.

எனக்கு தாமதாமாக சென்று சேரும் உதவி மேல் உடன்பாடு இல்லை.அதனால் தனியாக கிராமங்ளுக்கு சென்று விடுலாம் என்று தீர்மானித்தேன்.நிவாரண உதவிகள் பெரும்பாலும் பெருநகரம் -நகரம்-சிற்றூர்-கிராமம்-குக்கிராமம் என்று மேலிருந்து கீழ் படி நிலையாக செல்லும்ஆனால் நான் முதலில் குக்கிராமத்தில் தொடங்க முடிவெடுத்து கிளம்பிவிட்டேன்.

நான் சென்ற கிராமம்
பாதைகள் எல்லாம் அறுந்து தனிதீவாக இருந்தது.போக்குவரத்து இல்லாததால் மளிகை,அரிசி,காய்கறிகள் குழந்தைகளுக்கான பால் என எந்தவித பொருட்களும் அந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லாததால் கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் உள்ள அரிசி பருப்பு காய்கறி எல்லாம் எடுத்துவந்து பொதுவாக ஊருக்கே ஒரு அடுப்புமூட்டி உலை வைத்து பட்ட சோறு செய்து எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

அங்கு நான் சென்ற பிறகு அனைவரும் மிக மகிழ்ச்சி அடைந்தனர்.என்னிடம் இருந்த பால்பவுடர் அங்கு இருக்கின்ற பல குழந்தைகளுக்கு பசியாற உதவியது.இருக்கிற நிவாரண பொருட்கள் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டது.

அங்கு இருக்கிற இளைஞர்களை திரட்டி பக்கத்து கிராமங்ளுக்கு  உதவி செய்ய அழைத்து கொண்டேன். அக்கிராமத்திலேயே அன்று தங்கினேன்.எங்கும் தூங்க முடியவில்லை எங்கு பார்த்தாலும் ஈரம் .படுக்கும் இடத்தில் திரும்பி படுத்தால் தண்ணீரில்தான் படுக்க வேண்டிய நிலை.ஊமை மழையாக தூறி கொண்டே இருந்தது.

அங்கு இருக்கிற கூரை வீடுகள் எல்லாம் ஒழுகிகொண்டே இருந்தது.அதனை கண்ட எனக்கு இவர்களுக்கு தார்ப்பாலின் ஷீட் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உட்காரவும் படுக்கவும் வசதியாக இருக்கும் என்று தோணிற்று.

 என்னுடைய முகநூலில் கடலூர் நிலவரங்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு இருந்ததால் என் நண்பர்கள் பலர் உதவி செய்ய என்னை தொடர்பு கொண்டு இருந்தனர்.அவர்களிடம் தார்பாலின் ஷீட் வாங்கி பாண்டிசேரி அனுப்ப சொல்லி கேட்டு கொண்டேன்.பலர் தார்ப்பாலின் ஷீட் வாங்கி அனுப்பி இருந்தார்கள்.

ஜெனிசன் லேண்ட் புரோமோட்டர்ஸ் உரிமையாளர்கள் அண்ணன் சங்கர் அவர்களும் நினைவில் வாழும் இஸ்ரேல் அவர்களும் நிறைய தார்பாலினும் இரண்டு 407ன் நிறைய நிவாரண பொருட்களும் அனுப்பினர்.

நான்கு நாட்கள் களப்பணி என்று நினைத்த எனக்கு இரண்டு வாரங்கள் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஆயிற்று..எனது கோயம்புத்ததூர்,தென்காசி  அலுவலக குழுவினர்கள் எனக்கு பின்புல செயல்பாடுளிலேயே ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள்.

பல கிராமங்களுக்கு சென்று உதவிகள் ஆற்றியதால் னதிருப்தியுடன் வீடு திரும்பினேன். கடலூர்பகுதியில் சந்தித்த கிராமங்களின் நண்பர்கள் பலர் இன்றுவரை தொடர்பில் இருக்கின்றனர்.

அந்த கள அனுபவத்தில் உணர்ந்தது என்னவென்றால். பேரிடர் கால உதவிகள் முதல் வாரத்துக்குள்ளேயே மக்களிடம் சென்று சேர்ந்துவிட வேண்டும்.அதன்பிறகு அரசு எந்திரம் சென்றுவிடும்.அரசியல்வாதிகள் பிற தொண்டு நிறுவனங்கள் சென்றுவிடும்.

இயற்கை பேரிடர் தாண்டி மக்களை சந்திக்க அதிக துணிவுமிக்க நபர்களால்தான் களஉதவி செய்ய முடியும்.எந்த உதவியும் கிடைகாத நேரத்தில் கிடைப்பது "உடுக்கை இழந்தவன் கைபோல" உதவி ஆகும்.

நான் கடலூரில் இருந்து திரும்பும்போது ஸ்டிக்கர் கலாச்சாரம் அரசியல் ஸ்டண்டுகள் நிவாரணஉதவிகள் பெயரில் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

எதற்கு இதனை பகிர்கிறேன் என்றால் தற்போது கேரள மாநிலத்தில் இருந்து வரும் பெருவெள்ள இயற்கை பேரிடர் செய்திகள் மனதை ரணமாக்குகின்றன.

உடனடியாக கேரளா சென்றுவிடலாம் என்று நினைத்தாலும் மலபார் மற்றும் இடுக்கி பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் இப்போது நீங்கள் வர சரியான நேரமல்ல.இது தமிழ்நாடு போல நில அமைப்பு உடையது அல்ல என்று தவிர்க்க சொல்லுகின்றனர்.

ஆம் கடலூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் சம்மந்தமாக பல முறை சுற்றி இருப்பதால் சாலைகளையும் அதன் தன்மையும் அறிந்து இருக்க முடிந்தது.கேரளா மாநிலம் ஒரே ஒரு முறை பைக்கில் தென்காசி-செங்கோட்டை-திருவனந்தபுரம்-கொச்சி-குருவாயூர் -மலபார் வரை சென்று பிறகு பாலக்காடு வழியாக கோவை வந்து சேர்ந்தேன்.அப்பொழுதே உணர்ந்தேன் நில அமைப்பில் கேரளா தமிழ்நாடு போல அல்ல என்று..

இருந்தாலும் சீக்கிரம் கேரளா கிளம்ப விருக்கிறேன்.நிவாரணபொருட்களை எடுத்து கொண்டு..
எனவே கேரள சகோதரரர்களுக்கு உதவ எண்ணம் கொண்டோர்.நிவாரண பொருட்களை எங்களுடைய சென்னை,மும்பை,பெங்களூர்,கோவை,தென்காசி,மதுராந்தகம் அலுவலத்தில் ஒப்படைக்கலாம்.

சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

Monday, 13 August 2018

மதுராந்தகம்-சென்னையின் புதிய நுழைவாயில்


மதுராந்தகம் இன்னும் 10 ஆண்டுகளில் சென்னையின் தெற்கு நுழைவாயிலாக ஆகிவிடுவதற்கான அனைத்து +Infrastructure) கட்டமைப்பு பணிகளும் மேம்பட்டு வருகிறது.

தாம்பரம்-செங்கல்பட்டு சாலை அடர்த்தியும் நெருக்கடியும் அதிகமாகி விட்டதனால் சென்னையில் இருந்து சேலம்,கோவை,கேரளா செல்லும் வாகனங்கள் வண்டலூரில் பிரிந்து ஒரகடம்-காஞ்சிபுரம்-திருவண்ணாமலை வழியாகசெல்ல 8வழி சாலை அமைகக்கபடவிருக்கிறது.
ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர்.பகுதிகளில் இருப்பவர்கள் சென்னையை விட்டு வெளியேறி தமிழகத்தின் பிற மாவட்டங்களை அடைய இதுவரை தாம்பரம் -செங்கல்பட்டு சாலையை இதுவரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் புதியதாக அமைத்து கொண்டு இருக்கிற திருப்போருர்-மானம்மதி-திருகழுகுன்றம்-பூதூர்-கக்கலபேட்டை-மதுராந்தகம் ஆறுவழிபாதை மதுராந்தகத்தை சென்னையின் புதிய நுழைவாயிலாக உருவாக்கும்.
மாமல்லபுரம் -பாண்டிசேரி ECR சாலை 4 வழிபாதையாக மாற்றம் அடைவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றனர்.ECR கூவத்தூரில் இருந்து மதுராந்தகத்திற்கான பாதையையும் விரிவுபடுத்த முன்னெடுப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

சென்னை ஏர்போர்ட் இல் இருந்து மதுராந்தகம் வரும் நேரமும் பாண்டிசேரி ஏர்போர்ட்டில் இருந்து

மதுராந்தகம் வரும் நேரமும் ஒன்றாகிவிட்டது.சித்தாமூர்,செய்யூர்,மேல்மருவத்தூர்,மதுராந்தகம் பகுதிகளில் உள்ள கிராமங்களின் நிலங்களை ஒருங்கிணைத்து புதிய கீரீன் பீல்டு ஏர்போர்ட் வருவதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் சுற்றி வருகின்றன.நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளது.
மிக பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோயில் வையாவூர் திருமலை திருகோயில் ,மேல்மருவத்தூர் சக்திபீடம்,ஓணம்பாக்கம் சமணர்கோயில்,அச்சிறுபாக்கம் மலைமாதாகோயில் போன்ற கோயில்களால் மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆன்மீக யாத்ரிகர்கள் விரும்புகின்ற பகுதியாக மாறுகிறது.

கற்பக விநாயக மருத்துவ கல்லூரி, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, செங்கல்பட்டு சட்ட கல்லூரிஎன பெரிய கல்லூரிகள் மற்றும் சிறிய கல்லூரிகள் பல மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளது.
செங்கல்பட்டு வரை சென்னைபெருநகர் ஆகிவிடும் என்ற நிலையில் மதுராந்தகம் வளர்ந்துவரும் புற நகராக உருவாகி கொண்டு இருப்பது உண்மை.

மதுராந்தகம் பகுதியில் கடந்த 5ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் கள பணியாற்றி கொண்டு இருப்பதால் ஒவ்வொரு கிராமத்தையும் பார்த்து கொண்டு இருப்பதால் 5ஆண்டுகளில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை உணர்ந்து இருக்கிறேன்.ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பவர்கள்,மனைகள்,பண்ணைகள்,சிறுதோட்டங்கள்

வாங்கிபோடலாம்.இப்பகுதிகளில் சொத்து வைத்து இருப்பவர்கள் தங்கள் சொத்துக்களை கவனிக்காமல் இருந்தாலோ பட்டா,சர்வே வேலைகளை செய்யாமல் இருந்தாலோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)



Friday, 3 August 2018

உயர்நீதிமன்றத்தில் ஒரு உயர்வான வழக்கறிஞர்!


2001 களில் இருந்து அவர் எனக்கு அறிமுகம்.தீவிர மக்கள்பணி,இயக்கபணிகள் நான் வந்த காலத்திலும்,ரியல்எஸ்டேட் தொழிலில் முழுமையாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்ற காலத்திலும் ஏன் இன்றுவரை
நிலசிக்கல்கள்,குடும்ப பிரச்சனைகள் என நான் சந்திக்கும் நடுத்தர வசதி கொண்ட மக்கள் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள்.
அவர்களுக்கு எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு மேலதிக விவரங்களுக்கு அவரின் தொலைபேசி எண்ணை நான் கொடுத்து தொடர்பு கொள்ள சொல்வேன்.அவரும் அவர்களுக்கு வேண்டிய விஷயங்களை செய்து கொடுத்திருப்பார்.அவரிடம் சென்று வந்த என் நண்பர்கள் அனைவருமே ஒரு நல்ல வழக்கறிஞரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி என்று என்னிடம் கூறி இருக்கிறார்கள்.!!
பெரும்பாலும் நடுத்தர மக்கள் வழக்கறிஞர்களை பற்றி உயர்வான எண்ணம் கொண்டவராக இருப்பதில்லை.
1.தேவைக்கு அதிகமாக கட்டணம் வாங்கபடுகிறது என்ற எண்ணம்.
2.மறைமுகமாக கட்டணம் வசூலிக்க வசூலிக்கபடுகிறது.
3.வாய்தாவுக்கு போனாலே வக்கீல் பீஸ் கேட்டு நச்சரிப்பார் என்று பயந்து கொண்டே நீதிமன்றம் போகாமல் இருப்பது
4.பிறகு அந்த வழக்கில் சிக்கல்கள் எழும்பினால் மீண்டும் வழக்கறிஞர்களிடம் நடையாய் நடப்பது
5.சில இடங்களில் வழக்கறிஞரை பின் தொடர்தல் இல்லை என்றால் அவ்வழக்கும்அப்படியே தேங்கி நிற்கும்
6.எதிர்தரப்புக்கு வழக்கறிஞர் சாதகமாகி விடுவது
7.வழக்கை தாமதபடுத்துகிறார்,இழுக்கிறார்
இப்படி பல எண்ணஓட்டங்கள் வழக்கறிஞர் பற்றி நடுத்தர மக்களிடையே நிலவுகிறது.இதுபோன்ற எந்த எண்ண ஓட்டங்களும் எந்தவித அச்சமும் இந்த வழக்கறிஞரிடம் நிச்சயம் இருக்காது.
பல இளம்வழக்கறிஞர்களை உருவாக்கி இருக்கிறார்.பல வழக்கறிஞர்கள் இவருடைய தளத்தை பயன்படுத்தி வளர்ந்துள்ளனர்.பல வழக்கறிஞர் நண்பர்களை தமிழகம் முழுதும் நான் பெற்று இருந்தாலும் பல நேரங்களில் மனதிற்குள் ஒப்புமைபடுத்தி பார்க்கும் போது எனக்கு இவர் மேலானவராக தெரிவார்.
பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பிரச்சினைகளை உள்வாங்குவது ஆகட்டும்,Draft போடுவது ஆகட்டும்,அர்ப்பணிப்புடன் வழக்கு நடத்துவது ஆகட்டும் எல்லாவற்றிலும் ஒரு உயிரோட்டமும் நேர்மறைசிந்தனையும் உண்மையும் இவ்வழக்கறிஞரிடம் இருக்கும்.
வழக்கறிஞர்கள் விளம்பர தம்பட்டங்கள் செய்யகூடாது என்பதை உணர்ந்தவர்,அரசியல் கட்சியோ மதசார்போ அற்றவர்.பொது பிரச்சினைகளை எடுத்து பேசி ஊடங்களில் விளம்பரம் தேடாதவர்.
அதனால் நல்ல வழக்கறிஞர் சேவை தேவைபடுபவர்களுக்கு கொஞ்சம் தெரியாமல் இருக்கிறார்.அவருக்கும் நான் இப்படி வலைபூவில்(BLOG) எழுதுவேன் என்று தெரியாது.ஆனால் நிறைய இளையதலைமுறையினருக்கு நல்ல வழக்கறிஞர் யார் என்று பரிந்துரைப்பது அவசியம் ஆகிறது.கிட்டதட்ட 18 ஆண்டுகாலமாக அந்த வழக்கறிஞரின் சேவையை நான் பெறுவதாலும்,உயர்நீதிமன்றத்தில் உயர்வான வழக்கறிஞர் என்று நான் உணர்வதாலும் இதனை படிக்கின்ற வாய்ப்பு இருக்கின்ற நண்பர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
இவ்வளவு சொல்லிவிட்டு ஆளையும் பேரையும் அட்ரஸையும் சொல்ல வில்லை என்றால் எப்படி?
கடந்த 20ஆண்டுகளாக கீழ்கண்ட முகவரியில் இருக்கிறார்.
வழக்கறிஞர்.திரு.V.சிவலிங்கம்,32/1,சடையப்பன் தெரு,
மந்தவெளி,சென்னை-28
போன்:9499921296
இ-மெயில்:ariyasiva1975@gmail.com

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...