Tuesday, 3 June 2025

முன்பிருந்த முக வாட்டம் தற்பொழுது இல்லை!

 


 விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் பானை செய்கின்ற தொழிலாளி தன் வீட்டின் நான்கு சென்ட் நிலத்தில் ஒரு சென்ட் வீடு 3 சென்ட் செய்த பானைகளை அடுக்கி வைப்பார், ஆனால் தனக்கு நாலு சென்ட் மனை நத்தம் பட்டாவில்  இருக்கிறது என்ற விவரம் தெரிந்து வைத்திருக்கவில்லை.  கிராம பஞ்சாயத்து அவரின் நிலத்தில் ஒரு சென்டும் புறம்போக்கு நிலத்தில் ஒரு சென்டும் சேர்த்து ரெண்டு சென்ட் கிராமத்திற்கான கக்கூஸ் பாத்ரூமில் கட்டி இருக்கிறார்கள். ஐயா கெஞ்சி இருக்கிறார். தெரிந்த இடத்தில் எல்லாம் மனு கொடுத்திருக்கிறார். எதுவும் நடக்கவில்லை. என்னை வந்து பார்த்தார். ஊராட்சி நிர்வாகத்தில் ஒரே நெருக்கடி என்று சொன்னார். அதனால் இலவச சட்ட உதவி மூலம் சட்டப் பணிகளை நடத்திக் கொடுத்தேன். அவரிடத்தை மீட்கின்ற காலம் விரைவில் வந்துவிடும். முன்பிருந்த முக வாட்டம் முதல் கட்டமான சென்ற பிறகு தற்பொழுது இல்லை. கொஞ்சம் தெம்பாக இருக்கிறார்.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Villupuram #Kandachipuram #village #fieldwork #freelegal #freelegalservice

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...