Thursday, 15 May 2025

ஆலய தரிசனம் மன பலம் கொடுத்து இருக்கிறது!!

 


 தமிழக முழுவதும் நில சிக்கல்கள்  சம்பந்தமாக பயணப்படுகிறேன் அடித்தட்டு மக்களில் இருந்து எலைட் மக்கள் வரை சந்தித்துக் கொண்டிருக்கின்றேன். 


அரசின் கொள்கை முடிவுகள் பாலிசிகள் சட்டங்கள் கடைசி மனிதனை எங்கு? எப்படி? பாதிக்கிறது என்று புரிந்து வைத்திருக்கிறேன். நில சிக்கல்களில் இருக்கின்ற மர்ம முடிச்சுகளை ஆழமாக புரிந்து கொண்டிருக்கின்றேன்!


இந்த நிலையில் நில சிக்கல்களுக்கும் ஆன்மீக காரணங்களுக்கு சம்பந்தம் இருப்பதாக களப்பணிகளில் பார்க்கும் பொழுது சில விஷயங்கள் உணர்வு ரீதியாக உணரப்படுகிறது.


திருச்சி அருகில் மணச்சநல்லூர் என்ற சிறிய நகரில் நிலசிக்களுக்கான களப்பணி சென்ற பொழுது அங்கு இருக்கின்ற புவனேஸ்வரர்   கோவிலுக்கு நண்பர் கஜேந்திரன் அவர்கள் அழைத்துச் சென்றார்.


அங்கு 1)வீடு கட்டும் யோகம் 2) வீட்டு எண்யோகம் 3 )வீடு மனை நிலம் விற்கும் யோகம் 4) பூமி தோஷம் 5) பில்லி 6) சூனியம் 7) ஏவல் 8) எந்திரம்,தந்திரம்,மந்திரம் தோஷம் 9) தென் மூலை உயரம் 10) வடமூலை உயரமும் 11) சொத்து பாக பிரச்சன 12) ஜென்ம பாப சாவத தோஷம் 13)வாஸ்து தோஷம் 14) வீடு மனை நிலம் வாங்கும யோகம் 15) பழையதை புதுப்பிக்கும் யோகம் 16) வீடு கண் திருஷ்டி தோஷம் 16 வகையான சிக்கல்களும் தீர்வதற்கு பிரார்த்தித்து  கொண்டால் அவர்களுடைய சிக்கல் தீர்வதற்கு வழி வகிக்கிறது  என்று சாமானியர்கள் நம்புகிறார்கள்.


நானும் கோவிலுக்கு சென்று அங்கு இருந்த மணிகண்டன் பூசாரியிடம்  நான் நில சிக்கல் தீர்வதற்காக தமிழக முழுவதும் பயணித்து சாமானியர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறேன் எனவே கடவுளின் ஆசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பூஜை செய்யும்படி வேண்டினேன். 


அவரும்  நீங்கள் செல்கின்ற இடங்களில் நீங்கள் சொல்கின்ற வாக்கு சித்தியாகும் என்று ஆசீர்வாதம் செய்தும் பிரார்த்தித்தும் 

அனுப்பினர். நானும் நம் கண் முன்னால நில சிக்கலால் அவதி படுகிறவர்களுக்காகவும் பிரார்த்தித்து கொண்டேன். ஆலய தரிசனம் மன பலம் கொடுத்து இருக்கிறது. அழைத்துச் சென்ற மணச்சநல்லூர் கஜேந்திரன் நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றி


இப்படிக்கு

சா.மு பரஞ்சோதி பாண்டியன் 

நிறுவநர்- தினம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...