Monday, 16 August 2021

நிலத்தின் நலம் அறிய ஆவல் என்ற கருத்தரங்கத்தை வெற்றி பெற வைத்ததற்கு அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி!

  Writer.Paranjothi Pandian:

நிலத்தின் நலம் அறிய ஆவல் என்ற கருத்தரங்கத்தை வெற்றி பெற வைத்ததற்கு அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி!

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பாக பெற்ற நிலத்தின் நலம் அறிய ஆவல் என்ற கருத்தரங்கத்திற்கு முதலில் தேதி வைத்த பிறகு அனைவரும் கள்ளக்குறிச்சியில் இருக்கின்ற கிராமத்திற்கு வருவார்களா ?மாட்டாங்களா ?என்ற சிறு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது அடுத்ததாக 199 ரூபாய் நுழைவு கட்டணத்தை செலுத்தி நமக்குப் போதுமான 50 நபர்கள் வருவார்களா என்ற குழப்பமும் இருந்தது.மேலும் நிகழ்ச்சிக்கு தேவையான செலவினங்களை ஈடுகட்டுவதற்கு நன்கொடை திரட்டப்பட முடியுமா என்ற சலனமும் இருந்தது!
இப்படிப்பட்ட நிலையில் எல்லா மனதடைகளையும் உடைத்து வெற்றிகரமாக நேற்று(14.08.2021)நிகழச்சி முடிந்துள்ளது உண்மையில் கூட்டம்எதிர்பார்த்த 50 நபர்களுக்கு மேலேயே இருந்தது திருச்சியிலிருந்தும் கிருஷ்ணகிரியில் இருந்தும் நாமக்கல்லில் இருந்து கோவையில் இருந்தும் என்று சில மாவட்டங்களை தாண்டி கள்ளக்குறிச்சிக்கு நண்பர்கள் வந்திருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் சேலத்தில் இருந்தும் வந்து இருந்தார்கள்.மேலும் கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரத்தினரும் வந்து இருந்தார்கள்.
வந்திருந்த அனைவரும் சிறந்த முறையில் கலந்துரையாடி வகுப்பில் பங்கு பெற்றனர். வகுப்பு முடிந்ததும் கொடுக்கபட்ட வினா விடை தாளையும் எழுதி கொடுத்தனர். அடுத்து இரவு 8 மணிவரை இலவச ஆரோசனை தனிதனியாக அனைத்து நபர்களுக்கும. வழங்கபட்டது.மொத்த நிகழ்ச்சியும் வெற்றிகரமாக உழைத்த நிலம் உங்கள் எதிர்காலம் அறகட்டளையின் துணைதலைவர் மேலூர்.இர.முரளி செயலாளர் .பாபநாசம் .ஜெயகுமார் மற்றும் அறகட்டளை உறுப்பினர் முத்து கதிர்வேல் அவர்களுக்கு அன்பும் நன்றியும்!
கள்ளகுறிச்சியில் இந்நிகழவை ஒருங்கிணைத்த கள பணியாற்றிய அண்ணன் அறகட்டளை உறுப்பினர் முத்து நயினார் அண்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்
நிகழ்ச்சிக்கு நன்கொடை அளித்த அன்புள்ளங்கள் பலருக்கு நன்றிகள் பல!நன்கொடையாளர்களின் பெயர் www.paranjothipandian.in இணையதளத்தில் வெளியிடபடும்
அடுத்தமாதமசெப்டம்பர்18 இல்இராணிபேட்டை மாவட்டத்தில் சோழிங்கர் நகரத்தில் 2வது நிலத்தின் நலமறிய ஆவல் கருத்தரங்கம் நடத்த திட்டமிடபட்டுள்ளது அதற்கான முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியிட படும்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9962265834

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...