Tuesday, 24 August 2021

கள்ளக்குறிச்சி முதல் திருவள்ளூர் வரை களப்பணி

 சேலம் -ஓமலூர் பக்கம் சுற்றிகொண்டு இருக்கிறேன்.



பணி முடிந்ததும் அப்படியே கள்ளகுறிச்சி -திருக்கோவிலூர் -திருவண்ணாமலை-ஆரணி-சோளிங்கர் திருவள்ளுர்
என இந்த வாரம் திட்டமிடுகிறேன் ! புதிய நபர்களை புதிய நில சிக்கல்களை பார்க்க தயாராய் உள்ளேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834

Thursday, 19 August 2021

தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்!

  தங்கள் நில சிக்கலை கூட தொகுத்து சொல்ல முடியாத மக்கள் பலர் இருக்கிறார்கள்!



பெருமாள்-பெங்களூரில் கட்டிட தொழிலாளி , மாற்று திறனாளி கள்ள குறிச்சி பக்கம் ஒரு கிராமத்தில் தந்தை வாங்கிய ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் கூட்டு கிணறு பாத்யதை சிக்கல்கள் இருக்கிறது. அது அடிதடி போலிஸ் பஞ்சாய்த்து வரை போயிருக்கிறது. கடந்த மாதம் ரூ 1000 போட்டு வீடியோ கால் ஆலோசனை வந்து இருந்தார். அவரால் நில சிக்கலை சொல்லவே முடியவில்லை ! எதிர்மனுதாரர்களின் குணங்களையும் இப்படி சொல்றாங்க அப்படி சொல்றாங்க என்று பிரச்சனையை சுத்தி சுத்தி நடக்கிற விஷயங்களை சொல்கிறார் பிரச்சினையை சொல்ல தெரியவில்லை!
ஆவணங்கள் மெயிலில் அனுப்ப சொன்னேன் அனைத்தையும் ஒரு டிடிபி சென்டரில் இருந்து அனுப்பினார் .ஒரு இரவு முழுவதும் படித்து எனக்கு தோன்றுகின்ற எழு வினாக்களையும் போனில் கேட்டேன் அப்பொழுதும் சொல்ல தெரியவில்லை! ஆனால் அவர் ஐயா!ஐயா! என்று புலம்பதான் செய்கிறார்.கள்ள குறிச்சியில் கருத்தரங்கம் திட்டமிட்டவுடன் பெருமாள அண்ணனுக்கு போன் செய்து பெங்களூரில் இருந்து வாருங்கள் என்று சொல்லி நேரடியாக களத்திற்கு சென்றேன்.அந்த இடத்திற்கு சென்றவுடன் எதிர் மனுதார்ர்கள் வந்து என்னிடம் வந்து நீ யெல்லாம் ஒரு ஆளா என்பது போல பேச ஆரம்பிதனர்.நான் பத்திரங்களை ஏற்கனவே படித்துவிட்டதால் நான் சில தகவல்கள் நட்புணர்வோடு அவர்களை அணுகி கேட்டேன். பிறகு எதிர்மனுதாரர்களை போக சொல்லிவிட்டு வரப்பும் எல்லையும் மாலும் புலபடத்தின் அடிப்படையில் பார்த்து அவர்களுக்கு பிரச்சனையை புரிய வைத்து அதை எப்படி தீர்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் . அவர்கள் இரண்டு கிலோ ஆப்பள் பழம் அரை கிலோ இனிப்பு என்று ஒரு பையை எடுத்து என்னிடம் கொடுத்தார்கள். அதெல்லாம் வேண்டாம்ணே என்று மறுத்து நீங்க பணம் கொடுத்தீங்க நான் வந்து வேலை செய்யுறேன் .வேணும் என்றால் டீஒன்னு வாங்கி தாங்க குடிச்சிட்டு கிளம்புகிறேன் என்று சொல்லி கிளம்பி வந்தேன்.
அவர்களுக்கு என்ன சிக்கல் என்றால் இது போன்று தேவையானளவு பத்திரம் வாசிக்க முடியாத்தா் அந்த கிராமத்தில் நிலம் பற்றி விவரம் தெரிந்தவர்களிடம் சொல்லி இருக்கிறார் .அந்த நபர் அரைநாள் எல்லா பத்திரத்தையும் படித்து சர்வே எண்கள் எல்லாம் குறித்து எதிர் மனுதாரரிடம் சேர்த்து விட்டார் போல அதனால் ஊரில் யாரையும் நம்பாமல் மன அமைதியும் அடையாமல் அலைந்து என்னை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள்
அபயம் கேட்டு வந்தால் அவர்களுக்கு அபாயம் செய்து விடுகிறார்கள் சில நில அறிவு நண்பர்கள்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834
#land #field #problem #issue #solve #document #read #plots​​​​​ #realestate​​​​​ #realestateconsultant​​​​​ #realestateservices​​​​​ #realestatebooks​​​​​ #realestatecoach​​​​​ #Entrepreneur​​​​​ #author​​​​​ #property​​​​​ #propertylaw​​​​​ #cmda_plots​​​​​ #residential_plots​​​​​ #patta​​​​​ #chitta​​​​​ #plotsale​​​​​ #deed​​​​​ #Documentation​​​​​ #EC​​​​​ #survey​​​​​ #asset

Wednesday, 18 August 2021

உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ்:

 உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ்:



நாள் : 28-ஆகஸ்டு-2021
நேரம் : மாலை 6.00 to 8.00
இடம் : நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் டெலிகிராம் குரூப் - லைவ் சேட்
தலைமை : மேலூர் இர.முரளி
துணைத்தலைவர்
NUE TRUST
முன்னிலை :
1. திரு. பாரதி ரங்கநாதன்
2. திரு. பிரகாஷ்
3. திருமதி. நித்யா
NUE TRUST - நிர்வாக குழு உறுப்பினர்கள்
நிகழ்ச்சி நிரல் :
வரவேற்புரை : திரு. முத்து நயினார் அவர்கள்
அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர்
சிறப்புரை : திரு பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில் முனைவோர், ரியல் எஸ்டேட் பயிற்றுநர்.
நேரம் : மாலை 6.00 to 6.30
கற்றதும் பெற்றதும் : அறக்கட்டளையின் குழுவில் நெடுநாளாக பயணிக்கும் உறுப்பினர்கள் தங்களது அனுபவம் பகிர்தல்
நேரம் : மாலை 6.30 to 7.00
பேசப்படும் தலைப்புகள் :
1. புறம்போக்கு நிலங்களின் வகைகளும், மக்களின் பயன்பாடுகளும்
வழங்குபவர் : திரு. பாபநாசம் ஜெயக்குமார்
செயலாளர், NUE TRUST.
நேரம் : மாலை 7.00 to 7.30
2. மனுநீதி : மனு அளிக்க வேண்டிய முறைகளும், பின் தொடரலும்
வழங்குபவர் : மேலூர் இர.முரளி
துணைத் தலைவர், NUE TRUST
நேரம் : மாலை 7.30 to 8.00
நன்றியுரை : திரு. முத்து கதிர்வேல்
NUE மக்கள் நல அறக்கட்டளை நிர்வாகம் சார்பாக
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9962265834

Monday, 16 August 2021

நிலத்தின் நலம் அறிய ஆவல் என்ற கருத்தரங்கத்தை வெற்றி பெற வைத்ததற்கு அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி!

  Writer.Paranjothi Pandian:

நிலத்தின் நலம் அறிய ஆவல் என்ற கருத்தரங்கத்தை வெற்றி பெற வைத்ததற்கு அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி!

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பாக பெற்ற நிலத்தின் நலம் அறிய ஆவல் என்ற கருத்தரங்கத்திற்கு முதலில் தேதி வைத்த பிறகு அனைவரும் கள்ளக்குறிச்சியில் இருக்கின்ற கிராமத்திற்கு வருவார்களா ?மாட்டாங்களா ?என்ற சிறு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது அடுத்ததாக 199 ரூபாய் நுழைவு கட்டணத்தை செலுத்தி நமக்குப் போதுமான 50 நபர்கள் வருவார்களா என்ற குழப்பமும் இருந்தது.மேலும் நிகழ்ச்சிக்கு தேவையான செலவினங்களை ஈடுகட்டுவதற்கு நன்கொடை திரட்டப்பட முடியுமா என்ற சலனமும் இருந்தது!
இப்படிப்பட்ட நிலையில் எல்லா மனதடைகளையும் உடைத்து வெற்றிகரமாக நேற்று(14.08.2021)நிகழச்சி முடிந்துள்ளது உண்மையில் கூட்டம்எதிர்பார்த்த 50 நபர்களுக்கு மேலேயே இருந்தது திருச்சியிலிருந்தும் கிருஷ்ணகிரியில் இருந்தும் நாமக்கல்லில் இருந்து கோவையில் இருந்தும் என்று சில மாவட்டங்களை தாண்டி கள்ளக்குறிச்சிக்கு நண்பர்கள் வந்திருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் சேலத்தில் இருந்தும் வந்து இருந்தார்கள்.மேலும் கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரத்தினரும் வந்து இருந்தார்கள்.
வந்திருந்த அனைவரும் சிறந்த முறையில் கலந்துரையாடி வகுப்பில் பங்கு பெற்றனர். வகுப்பு முடிந்ததும் கொடுக்கபட்ட வினா விடை தாளையும் எழுதி கொடுத்தனர். அடுத்து இரவு 8 மணிவரை இலவச ஆரோசனை தனிதனியாக அனைத்து நபர்களுக்கும. வழங்கபட்டது.மொத்த நிகழ்ச்சியும் வெற்றிகரமாக உழைத்த நிலம் உங்கள் எதிர்காலம் அறகட்டளையின் துணைதலைவர் மேலூர்.இர.முரளி செயலாளர் .பாபநாசம் .ஜெயகுமார் மற்றும் அறகட்டளை உறுப்பினர் முத்து கதிர்வேல் அவர்களுக்கு அன்பும் நன்றியும்!
கள்ளகுறிச்சியில் இந்நிகழவை ஒருங்கிணைத்த கள பணியாற்றிய அண்ணன் அறகட்டளை உறுப்பினர் முத்து நயினார் அண்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்
நிகழ்ச்சிக்கு நன்கொடை அளித்த அன்புள்ளங்கள் பலருக்கு நன்றிகள் பல!நன்கொடையாளர்களின் பெயர் www.paranjothipandian.in இணையதளத்தில் வெளியிடபடும்
அடுத்தமாதமசெப்டம்பர்18 இல்இராணிபேட்டை மாவட்டத்தில் சோழிங்கர் நகரத்தில் 2வது நிலத்தின் நலமறிய ஆவல் கருத்தரங்கம் நடத்த திட்டமிடபட்டுள்ளது அதற்கான முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியிட படும்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9962265834

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...