சிவகங்கை சீமை மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்!
திருப்பத்தூர் டவுனிலே ஒரு நிலசிக்கலுக்கான களபணிக்கு சென்று இருந்தேன். அப்பொழுது பேருந்து நிறுத்தம் எதிரிலேயே மருது சகோதரர்கள் இருவரின தூக்கிலிடப்பட்ட நினைவு இடம் இருந்தது. தஞ்சை சரபோஜி, ஆற்காடு நவாபு, புதுகோட்டை சமஸ்தானம் போன்றவர்கள் போல வெள்ளையர்களிடம் சமரசம் செய்து கொண்டு இன்றுவரை அவரின் தலைமுறைகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம். ஆனால் வெள்ளையனிடம் அடங்க மறுத்து இருக்கின்றனர். போதாக்குறைக்கு ஊமைதுரைக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கின்றனர். இந்த நடவடிக்கைகளால் வெள்ளையர்கள் தூக்கில் இட்டு இருக்கின்றனர். தாரளமாக வீரமரணத்திற்காக போற்றபட வேண்டியவர்கள். பெயர் பலகையில் மாமன்னர் என்பது மட்டுமே மிகை! மருது சகோதரர்கள் பாளையக்கார்கள் தான்! மாமன்னர்கள் என்றால் சாம்ராட் அசோகர் ,மாமன்னர் அக்பர், அவுரங்க சீப் , மாமன்னர் இராஜராஜ சோழன், மாமன்னர் கிருஷண தேவராயர் ஆகியோர் தான்.
இப்படிக்கு
சா,மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834
#paranjothipandian #land #problem #issue #writer #trainer #consulting #realestate #field #maruthu #avurangaksip #palayakkararkal #rajarajasholan #krishna_thevarayar #sivagangai


