புத்தகம் வாங்க ஒதுக்கும் நிதி திட்டமிடுதலில்
ஆண்டு தோறும் சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் பதிப்பாளர்கள் நடத்தும் புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டும் எனது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் முதல் பதிப்பு ஒரு ஸ்டாலில் காட்சி படுத்தி இருந்தேன்.
அருமையான
விற்பனை நடந்தது .நிறைய புத்தக விற்பனையாளர்கள் மிகவும் வியந்து பாராட்டினார்கள்அதே போல் இந்த ஆண்டும் புத்தக கண்காட்சி நேற்று முதல் தொடங்கி இருக்கிறது.இந்த முறை நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் பாகம் 2 என்று இரண்டு புத்தகங்கள் தலா 550 பக்கங்கள் என்று 1100 பக்கங்கள் கொண்ட புத்தகங்களை கண்காட்சியில் காட்சி படுத்தியுள்ளேன்.
கண்காட்சிக்கு வருகின்ற ஒவ்வொருவரும் ரூ 2000 முதல் ரூ 5000 வரை நிதி ஒதுக்கி புத்தகம் வாங்க வருவார்கள்.அப்படி வரும் பொழுது நமது புத்தகத்திற்கும் பட்ஜெட் ஒதுக்கி வையுங்கள்.
நிலம் உங்கள் எதிர்காலம் எந்தவித junk ம் இல்லாத பலருக்கு நிலத்தை பற்றிய சரியான பார்வையை உருவாக்கிய புத்தகம்.எப்பொழுது வேண்டுமானாலும் referசெய்து கொள்கின்றபடி தனி தனி கட்டுரைகள்,நிலம் பற்றிய அடிப்படை தெரியாதவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் நிலத்தை பற்றி கரை கண்டவர்களுக்கும் தேவையான தகவல்களை தொகுத்து எழுதி இருக்கிறேன்
உங்களுடைய அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கியும் இந்த புத்தக கண்காட்சியில் best seller என்ற பட்டத்தையும் பெற்று தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

No comments:
Post a Comment