Thursday, 25 February 2021

புத்தகம் வாங்க ஒதுக்கும் நிதி திட்டமிடுதலில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்திற்கும் சேர்த்து பணம் ஒதுக்கி வையுங்கள்!

 புத்தகம் வாங்க ஒதுக்கும் நிதி திட்டமிடுதலில்

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்திற்கும்
சேர்த்து பணம் ஒதுக்கி வையுங்கள்!


ஆண்டு தோறும் சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் பதிப்பாளர்கள் நடத்தும் புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டும் எனது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் முதல் பதிப்பு ஒரு ஸ்டாலில் காட்சி படுத்தி இருந்தேன்.
அருமையான
விற்பனை நடந்தது .நிறைய புத்தக விற்பனையாளர்கள் மிகவும் வியந்து பாராட்டினார்கள்
அதே போல் இந்த ஆண்டும் புத்தக கண்காட்சி நேற்று முதல் தொடங்கி இருக்கிறது.இந்த முறை நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் பாகம் 2 என்று இரண்டு புத்தகங்கள் தலா 550 பக்கங்கள் என்று 1100 பக்கங்கள் கொண்ட புத்தகங்களை கண்காட்சியில் காட்சி படுத்தியுள்ளேன்.
கண்காட்சிக்கு வருகின்ற ஒவ்வொருவரும் ரூ 2000 முதல் ரூ 5000 வரை நிதி ஒதுக்கி புத்தகம் வாங்க வருவார்கள்.அப்படி வரும் பொழுது நமது புத்தகத்திற்கும் பட்ஜெட் ஒதுக்கி வையுங்கள்.
நிலம் உங்கள் எதிர்காலம் எந்தவித junk ம் இல்லாத பலருக்கு நிலத்தை பற்றிய சரியான பார்வையை உருவாக்கிய புத்தகம்.எப்பொழுது வேண்டுமானாலும் referசெய்து கொள்கின்றபடி தனி தனி கட்டுரைகள்,நிலம் பற்றிய அடிப்படை தெரியாதவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் நிலத்தை பற்றி கரை கண்டவர்களுக்கும் தேவையான தகவல்களை தொகுத்து எழுதி இருக்கிறேன்
உங்களுடைய அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கியும் இந்த புத்தக கண்காட்சியில் best seller என்ற பட்டத்தையும் பெற்று தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

Wednesday, 10 February 2021

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்ட் 1 & 2 இப்பொழுது dial for book லும் உங்களுக்காக

  


நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்ட் 1 & 2 இப்பொழுது dial for book லும் உங்களுக்காக


Books Link
1. நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்-2 - https://dialforbooks.in/product/1000000031015_/

Tuesday, 9 February 2021

சின்னமனூர் தம்பி அருண் அவர்களுடன்!

  சின்னமனூர் தம்பி அருண் அவர்களுடன்!



தேனி மாவட்டத்தின் அழகான நகரமான இராணி மங்கம்மாளின் தளபதி சின்னம்ம நாயக்கர் உருவாக்கிய சின்னம்ம நாயக்கனூர் நான் இன்று சின்னமனூர் என்று சொல்கிறார்கள். அந்த ஊரில் இருந்து தம்பி அருண் அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக பூமிதான நில சிக்கல் சம்மந்தமாக தொடர்பில் இருக்கிறார். அவரின் நிலத்தை தவறாக பூமிதான நிலம் என்று யூடிஆரில் வகைபடுத்தி விட்டார்கள். அதனை தான் யுடிஆர் பூமிதானம் நிலம் இல்லை என்று திருத்தி இருக்கிறார். அதனை திருத்துவதற்கு என்னுடைய எழுத்துகளும் என்னுடைய வீடியோவும் நமது நிலம் உங்கள் எதிர்காலம் டெலகிராம் குழுவும் மிகவும் உதவிகாரமாக இருந்தது என்று சொல்லி என்னை அன்பின் நிமித்தமாக சந்தித்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் #field #consulting #trainer #writer #paranjothi_pandian #author #poomithanam #video #land #issue #problem #solve

Saturday, 6 February 2021

புத்தகம் செதுக்கிய நல்லோன் திரு.இறைவன்!!!

புத்தகம் செதுக்கிய நல்லோன் திரு.இறைவன்!!!


 

 
உண்மையில் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 இதன் புத்தக அச்சும் அமைப்பும் உண்மையில் இப்படி வரும் என்று நான் நினைத்தது இல்லை!
புத்தகத்தை பார்த்தவுடன் கொஞ்சம் மெய்மறந்தேன். நான் எவ்வளவு நேரம் எழுதினாலும் பிழை திருத்தினாலும் தொகுத்தாலும் அட்டவணைகள் இட்டு பிரித்து எழுதினாலும் அதனை உருவாக்கும் அச்சகமும் அதன் ஊழியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாத்து.
 
நான் இராபரட் கிரீன் எழுதிய புத்தகங்களை ஆன்லைனில் வாங்கினேன்.வந்த ஒரு சில நாட்களிலேயே அந்த அட்டையில் இருக்கின்ற வண்ணங்கள் என் நக கீறலால் வந்து விட்டது.இன்னும் சில புத்தகங்கள் என் பையில் வைத்து இருந்து லேசான மழையால் நனைத்தவுடன் அந்த புத்தகத்தின் பக்கங்கள் தனிதனியாக பிரிந்து விட்டது.
 
நம் நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகம் எப்பொழுது தேவைபட்டாலும் மக்கள் எடுத்து பார்க்கவேண்டிய புத்தகம். அதனுடைய பைண்டிங் மிகசிறப்பாக இருக்க வேண்டும். அட்டையின் அச்சு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிணேன்.
 
அவ்வண்ணமே செய்து கொடுத்த சிவகாசி சண்முகா பிரஸ்ஸின் தலைவர் திரு இறைவன் அவர்களுக்கு நேரடியாக சிவாகாசி சென்று நன்றி தெரிவித்தேன்
 
இப்படிக்கு
 
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
#paranjothipandian #book #nilamungalethirkalam #writer #trainer #consulting #author #shanmugapress #iraivan #binding #printing

Friday, 5 February 2021

மதுரை பாசகாரங்க ஊர்ப்பா!!

 மதுரை பாசகாரங்க ஊர்ப்பா!!



அண்ணன் சேகரன்!அண்ணன் அடோன் மதுரை மைந்தர்கள் !எனக்கு உறுதுணையாய் உற்ற தோழமையாய் என் பணி முடிக்க நான் மதுரை சுற்றிய நாள் முதல் உதவினார்கள்.
இன்னும் எனக்கு அன்பையும் பாசத்தையும்
தொடர்ந்து வழங்குமாறு வேண்டுகிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்

Thursday, 4 February 2021

அருப்புகோட்டையில் ஒரு மக்கள் வி.ஏ.ஓ!!!

 அருப்புகோட்டையில் ஒரு மக்கள் வி.ஏ.ஓ!!!



முன்னாள் இராணுவ சேவை, தற்பொழுது கிராம நிர்வாக சேவை! வருவாய் துறையில் இருக்கும் சந்தேகங்களை போக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு blogger .எங்களின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலத்தின் பயன் சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்திற்கு ஆதரவாளர. என்னுடைய ரியல் எஸ்டேட் களபணியின் பொழுது அருப்புகோட்டையில் அன்பு நிமித்தமாக சந்தித்தோம். நிறைய blog எழுத வேண்டும் தமிழில் நிலம் சம்மந்தபட்ட தகவல்கள் குறைவானவர்களே எழுதிகிறார்கள். எனவே விடாமல் எழுதுங்கள் அண்ணா என்று சொல்லி இருக்கிறேன்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
#aruppukkottai #vao #people #constulting #trainer #writer #blog #paranjothipandian #land #issue #problem #

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...