Monday, 8 April 2019

நில சிக்கல்களுக்கான இலவச ஆலோசனை முகாம்


        சமூக ஊடகங்களில் நிலம்சம்மந்தபட்ட சிக்கல்கள்,நிலம் சம்மந்தபட்ட பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதல்கள்,ஆலோசனைகள் கொடுப்பது சம்மந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறேன். அதன் மூலமாக நிறைய பேர் நிலம் சம்மந்தபட்ட சிக்கல்களுக்கு போன் மூலம் ஆலோசனை கேட்டனர்.அதன்பிறகு அதற்கென்று தனி செல் நம்பர் போட்டு அதற்கு தனியாக எங்களின் குழு உறுப்பினரை பொறுப்பாக்கி வருகின்ற அழைப்புகளுக்கு டோக்கன் நம்பர் கொடுத்து வரிசை முறைபடி தினமும் நானும் என் குழுவினரும் 50 அழைப்புகளுக்கு மேல் பேசி வருகிறோம்.ஆனால் தற்போது அழைப்புகள் அதிகம் ஆயிடுச்சி..அதற்கென்னு இருக்கின்ற நிர்வாகம் ஸதம்பிக்க ஆரம்பிச்சிடுச்சி..நிறைய அழைப்புகள் பேச முடியாமல் நிலுவையில் நிற்க ஆரம்பிச்சிடுச்சி..மக்களும் ஒரு வாரமாக காத்திருந்தும் பேசவில்லையே என்ற அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர்.மேலும் சில அழைப்புகள் சின்ன சின்ன விஷயங்களுக்காக ஆர்வ கோளாறு அன்பர்கள் ஓயாமல் போனில் அழைத்து எங்கள் குழுவினரை அயர்ச்சி அடைய வைக்கின்றனர்.
இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதுதான். இந்த இலவச ஆலோசனை முகாம் ஐடியா தோன்றியது.வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் தமிழகத்தின் ஏதாவது ஒரு நகரில் இந்த இலவச முகாமை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி 07.04.2019 அன்று கோயம்பத்தூரில் கணபதியில் உள்ள பிராப்தம் ரியல்டர்ஸ் அலுவலகத்தில் நில சிக்கல்களுக்கான இலவச ஆலோசனை முகாம் நடைபெற்றது.சமூக ஊடகங்களை பார்த்து மட்டுமே மக்கள் தேடி வருவது மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது.சொத்து வாங்குவோர்,சொத்து சிக்கல்களில் இருப்போர் தங்கள் ஆவணங்களை கொண்டுவந்து நேரடியாக ஆலோசனை பெற்று சென்றனர்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்-தொழில் முனைவர்
8110872672

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...