Saturday, 27 April 2019

ஏப்ரல் மாதம் 2019 இல் வளர்தொழில் மாத இதழில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை “பதிவு செய்ய கட்டாயபற்ற ஆவணங்கள் ”!!!!


இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் “பதிவு செய்ய கட்டாயபற்ற ஆவணங்கள்” என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.
வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நான் தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

Monday, 8 April 2019

நில சிக்கல்களுக்கான இலவச ஆலோசனை முகாம்


        சமூக ஊடகங்களில் நிலம்சம்மந்தபட்ட சிக்கல்கள்,நிலம் சம்மந்தபட்ட பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதல்கள்,ஆலோசனைகள் கொடுப்பது சம்மந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறேன். அதன் மூலமாக நிறைய பேர் நிலம் சம்மந்தபட்ட சிக்கல்களுக்கு போன் மூலம் ஆலோசனை கேட்டனர்.அதன்பிறகு அதற்கென்று தனி செல் நம்பர் போட்டு அதற்கு தனியாக எங்களின் குழு உறுப்பினரை பொறுப்பாக்கி வருகின்ற அழைப்புகளுக்கு டோக்கன் நம்பர் கொடுத்து வரிசை முறைபடி தினமும் நானும் என் குழுவினரும் 50 அழைப்புகளுக்கு மேல் பேசி வருகிறோம்.ஆனால் தற்போது அழைப்புகள் அதிகம் ஆயிடுச்சி..அதற்கென்னு இருக்கின்ற நிர்வாகம் ஸதம்பிக்க ஆரம்பிச்சிடுச்சி..நிறைய அழைப்புகள் பேச முடியாமல் நிலுவையில் நிற்க ஆரம்பிச்சிடுச்சி..மக்களும் ஒரு வாரமாக காத்திருந்தும் பேசவில்லையே என்ற அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர்.மேலும் சில அழைப்புகள் சின்ன சின்ன விஷயங்களுக்காக ஆர்வ கோளாறு அன்பர்கள் ஓயாமல் போனில் அழைத்து எங்கள் குழுவினரை அயர்ச்சி அடைய வைக்கின்றனர்.
இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதுதான். இந்த இலவச ஆலோசனை முகாம் ஐடியா தோன்றியது.வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் தமிழகத்தின் ஏதாவது ஒரு நகரில் இந்த இலவச முகாமை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி 07.04.2019 அன்று கோயம்பத்தூரில் கணபதியில் உள்ள பிராப்தம் ரியல்டர்ஸ் அலுவலகத்தில் நில சிக்கல்களுக்கான இலவச ஆலோசனை முகாம் நடைபெற்றது.சமூக ஊடகங்களை பார்த்து மட்டுமே மக்கள் தேடி வருவது மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது.சொத்து வாங்குவோர்,சொத்து சிக்கல்களில் இருப்போர் தங்கள் ஆவணங்களை கொண்டுவந்து நேரடியாக ஆலோசனை பெற்று சென்றனர்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்-தொழில் முனைவர்
8110872672

பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி (பி) லிட்


                 பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி (பி) லிட் என்ற புதிய நிறுவனத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்மனதில் திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக செயல்திட்டங்களை உருவாக்கி அதனை அனைவருக்கும் சொல்லி கொடுத்து அதனை பயிற்சி பெற வைத்து நடைமுறை படுத்தி Test and Trial லில் ஈடுபட்டு சம்ருதி சேவைகள்,நில சிக்கல் ஆலோசனைகள்,புத்தகங்கள்,பயிற்சி வகுப்புகள் என்று மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய வியாபார பிராடகட்டுகளை உருவாக்கி சமூக ஊடகங்கள் மூலமே வலிமையான மாக்னெட்டிக் மார்க்கெட்டிங் உருவாக்கி affluence mode இல் பிஸினெஸை பழைய பிஸினஸில் இருந்து EVOLVE செய்து இருக்கிறேன்.இந்த புதிய கம்பெனியின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளை (Business Conscious )ஐ என்னுடைய நம்பகமான அன்பான தங்கை என் வியாபார பயணத்தில் அதிக சிரத்தை எடுக்கும் செல்வி.மங்களலட்சுமி யிடம் ஒப்படைக்கிறேன்.இந்த நிறுவனத்தில் Content எழுதுவது பேசுவது மட்டும் என் பணி.அதனுடைய Growth மங்கள் தலைமையிலான டீமையே சாரும். இந்த புதிய கம்பெனி எதிரகால திட்டமான Housing Society யை இந்த ஆண்டிலேயே evolve செய்யும் பழைய கம்பெனியின் காயங்களையும் Heal செய்யும் என்று நம்புகிறேன்.நாம் அனைவரும் மேடமை ஊக்கபடுத்தி சவால்களை சந்தித்து வெற்றி பெறுவோம்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிறுவனர்:பிராப்தம் ரியல்டர்ஸ்

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...