Thursday, 30 September 2021

INVESTIGATOR ஈரோடு கதிரேசன்!இப்பொழுது Boys Realtors Camp கதிரேசன்!!

 INVESTIGATOR ஈரோடு கதிரேசன்!இப்பொழுது Boys Realtors Camp கதிரேசன்!!



தனியார் நிறுவனங்கள் ,நீதிமன்ற வழக்குகள், ஆகியவற்றுக்கு களத்தில் உண்மை நிலவரத்தை ஊரஜித படுத்தி கொடுக்க களத்தில் செயல்வீர்களாக செயல்பட்டு ஆய்வு செய்துஅறிக்கை அளிக்கும் தனியார் இன்வெஸடிகேட்டராக இருந்து வருகிறார்
சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகம்,அதன்பிறகு தொடர்முகமாயிற்று ஆழ்ந்த வினளைந்த சிந்தனையாளர்! நில மோசடி பத்திர மோசடிகளில் எப்படி மக்களை காக்க விழிப்பணரவு செய்யலாம் என்று இருவரும் நிறைய பேசி இருக்கிறோம்
பழம் நழவி பாலில் விழுவது போல பேச்சுநடையாளர்! சாட்சி ஆதாரங்களை உங்களிடம் பேசிகொண்டே உருவாக்கிவிடும் வித்தகர்
அடுத்து பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமியின் சார்பாக 13 முதல் 16 வயதின்ற்கு சனி ஞாயிறு இரண்டு நாள் எங்களுடன் தங்கி மாணவர்களுக்கான நடையில் பட்டா,பத்திரம்.நிலம்.களம்.அரசின் செயலபாடுகள் ஆகியவற்றை போதித்து வளர் இளம் பருவத்திலேயே நிலத்தை பற்றிய்விழிப்புணர்வு கொடுப்பதன் மூலம் தன்னுடைய பணம் சம்பாதிக்கும் 25 வது வயதிலேயே சூதானாமக நடந்து கொள்ளும் பக்குவம் வந்துவிடும்! இளைஞனாக ஆகும்போதே என் பால பாடம் அவர்கள் ஆழ்மனதில் ஏறிவிடும்.அந்த BOYS REALTORS CAMP என்ற முகாம் தமிழகம் முழுதும் தொடர்ந்து நடத்தலாம் அதற்கு எனக்கு உறுதுணையாக 2nd line தலைவராக இருக்க கேட்டு கொண்டேன்! கதுரேசன் அண்ணன் எந்த வித ஈகோ இல்லாமல் ஒத்து கொண்டார்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் -தொழில் முனைவர்
9841665836/9962265834

Tuesday, 28 September 2021

சோளிங்கர் நகரத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் -2 வெற்றிகரமாக நடந்தது!

  சோளிங்கர் நகரத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் -2 வெற்றிகரமாக நடந்தது!

            

அடுத்த மாதம் விழுப்புரத்தில்சோளிங்கர் நகரத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் -2  வெற்றிகரமாக நடந்தது! அடுத்த மாதம் விழுப்புரத்தில் நிலம் உங்கள் எதிர்கால அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் ஆர். கே. பேட்டை J .மோகன் அவர்களின் முன்முயற்சியில் சோளிங்கர் நகரில் 25.09.2021 தேதி வழி காட்டுதல் முகாம் மற்றும் கருத்தரங்கம் நடத்த கடந்த ஆகஸ்டு மாதமே நான் நேரடியாக சோளிங்கர் வந்து அரங்கம், பயனாளிகள் வந்து சேருவதற்கான பயண வசதி  எப்படி இருக்கின்றது, போன்ற அனைத்தையும் சோதித்து விட்டு நிகழ்ச்சி தேதியை உறுதி செய்தேன்.
அதன்பிறகு நிகழ்ச்சி நிரலை மற்றும் அறிவிப்பை சமூக ஊடகங்கள் மூலம் தெரியபடுத்தி வெளியிட்டு முன்பதிவை ஆரம்பித்தோம்! நிறைய அழைப்புகள்! நாங்கள் வருகிறோம் என்று வந்த வண்ணம் இருந்ததால் நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு பலமான ஆதரவு தளம் உருவாகிவிட்டதை உணர ஆரம்பித்து விட்டேன். இனி அது மாதம் தோறும் தமிழகத்தின் பல இரண்டாம் மூன்றாம் நகரங்களில் தொடர்ந்து பயணித்து விடும் என்ற நல்நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்து விட்டது.

 
நிகழ்ச்சிக்கு தேவையான முன்னேற்பாடுகளை முன் கூட்டியே செய்து விட ஆரம்பித்து விட்டேன் !வருகின்ற பயனாளிகளுக்கு கொடுக்கும் சிறு புத்தகம், ஏற்கனவே சிறிய சிறிய எழுத்து பிழைகள் இருந்தன! அதனை எல்லாம் திருத்தி தர அன்பு அண்ணன் பாநாசம் ஜெயகுமார் அவர்களை வேண்டினேன்! அண்ணனும் அதனையெல்லாம் பாபநாசத்தில் இருந்தே திருத்தி அனுப்பினார் நிகழ்ச்சிக்கு தேவையான நினைவு பரிசுகள் பிளக்ஸ்,பேனர்கள் என்று எல்லாமே தயார் செய்து முன்கூட்டியே பார்சலில் சோளிங்கருக்கு அனுப்பி விட்டேன். அதே நேரத்தில் 57 பேர் வருவதாக உறுதி அளித்து 51 பேர் வந்தார்கள்!

 
வந்தவர்களில் எழுபது சதவீதம் நில பிரச்சினைக்கான ஆலோசனைக்காக வந்து இருக்கிறார்கள்! 30 சதவீதம் கற்றுகொள்ளுதல் மனநிலையில் வந்து இருக்கிறார்கள் என்பதை நிகழ்ச்சி ஆரம்பித்த  காலை 10 மணிக்கே உணர்ந்து விட்டேன்.
அதனால் தன்னார்வலர்களான என் தம்பிகளை அனுப்பி வந்த ஒவ்வொரவரிடமும் அவர்கள் பெயர் முகவரி, சொத்து சிக்கலில் இருக்கும் சொத்து விவரம், எதிர் மனுதாரிரன் மீது வைக்கும் குற்றசாட்டு, உங்களுக்கு என்ன பரிகாரம் தேவை என்று அவர்களிடம் நேரடியாக ஒன் டூ ஒன் பேசி அதனை ஒரு தாளில் விரிவாக எழுத சொல்லியிருந்தேன். காலை 11.30 மணிக்குள் அனைவர் சிக்கலும் தனி தனி தாளில் மொத்தமாக எனக்கு வந்து சேர்நது விட்டது, அதனை எல்லாம் யுடிஆர் சிக்கல் எது ? மோசடி பத்திரம் எது? பாகபிரிவினை சிக்கல் எது? பத்திரத்தில் பொய் சேர்க்கை எது?ஹக்கு பிரச்சினை எது என உடனடியாக தரம்பிரித்து விட்டேன்

 
அதன்பிறகு வெகுதூரத்தில் இருந்து வருகின்றவர்கள் யார்? சோளிங்கர் சுற்றி இருப்பவர்கள் யார்?என்று பார்த்து சோளிங்கர் சுற்றி இருப்பவர்களுக்கு கடைசி டோக்கன்களும் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்கு முதல் டோக்கனும் போடபட்டு கோவை,தூத்துகுடி,உளுந்தூர் பேட்டை, திருநெல்வேலி, சென்னை போன்ற புகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு முதலிலும் வேலூர் , இராணிபேட்டை, ஒடுக்கத்தூர், அரக்கோணம், பள்ளிபட்டு, திருத்தணி பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு அடுத்ததாகவும் சோளிங்கர் மற்றும் ஆர் கே பேட்டை பகுதிகளில் இருப்பவர்கள் இறுதியாகவும் டோக்கன் வழங்கபட்டது.
மேற்படி டோக்கன் வழங்கபட்ட படி முதல் நாள் அரங்கத்தில் மதியம் சாப்பாட்டுக்கு முன்னே ஆரம்பித்து இரவு 9.30 மணிவரை தொடர்ந்தது அதன்பிறகு இரவு 2 மணிவரை நான் தங்கி இருந்த விடுதியின்  அறையில் தொடர்ந்தது! மறுநாள் ஞாயிற்று கிழமை காலை 8 மணி அளவில் இருந்து மாரை 7 மணி வரை கவுன்சிலிங் தொடர்ந்தது வந்திருந்த 51 நபர்களில் 31 நபர்களுக்கு விரிவான  கவுன்சிலிங் மற்றும் வழிகாட்டுதல் கொடுக்கபட்டது.

மீதி 20 நபர்கள் விஷயங்களை கற்று கொள்ளவும் ஆவண எழுத்தர் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்  விரும்புகின்றவரர்களும் வந்து இருந்தனர் அதனால் மதியம் உணவு. முடித்ததுவம் 1.30 மணிநேரம்  நிலசிக்கல்கள் சம்மந்தமாக ஒரு பாடம் எடுத்து இருந்தேன். அனைவருக்குமே புதிய தகவல்கள் ,புதிய பார்வைகளாக அமைந்து  இருந்தது.அனைவரின் கண்களிலும் புதிய வெளிச்சங்களை பார்த்தேன் வந்து இருந்த அனைத்து நண்பர்களும் கண்டுகொள்ளாமல் அலட்சியத்தோடு வீட்டில் இருக்கும் பத்திரங்களை பட்டாக்களை பிற ஆவணங்களை  பார்த்து இருப்பார்கள். நிலங்களை தனக்கு நிறைய தெரியும் என்று நினைத்து இருந்தவர்கள் கூட நிலத்தில் இவ்வளவு ஆழம் இருக்கிறதா? என்று உணர ஆரம்பித்து விட்டு இருந்தார்கள்! அனைவருமே என்னுடன் நேரிடையாக வந்து தங்களின்  கருத்துரைகளை கொடுத்து இருந்தனர். நன்றி சொல்லிவிட்டு சொல்லி இருந்தனர்
வழிகாட்டுதல் பெற்ற பலரின் எழுத்துபூர்வமான குறிப்புகளை வரிசை எண் இட்டு அனைத்தையும் ஒளி வருடல் செய்ய பட்டு அவை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான வேலைகளை ஆர் .கே .பேட்டை J.மோகன் அவர்ரகள் செய்து முடித்து இருந்தார்கள்
என்னுடன் அமர்ந்து நான் மனுதாரர்களின் ஆவணங்களை வாசித்துவிட்டு சொல்ல கைவலிக்க வலிக்க எழுதி கொடுத்த சேலம் ஓமலூரை சேர்ந்த என் தம்பி தமிழும்,தரும்புரியை போச்சம்பள்ளியை சேர்ந்த அருள் வேடியும் மிகவும் பாராட்ட பட வேண்டியவர்கள்
வந்திருந்த மக்களுக்கு அவர்களின் முதல்கட்ட சிக்கலை ஆவணபடுத்திய திரு.பாலகிருஷணன்,வழக்கறிஞர் வினோத், திமிரி சண்முக பிரியன், திருப்பூர இரவிசந்திரன், திரு.சத்தியராஜன், பள்ளிபட்டை சேர்ந்த வழக்கறிஞர் நண்பர்கள் திரு.ஹரி மற்றும் திரு.மணி அவர்கள் அனைவரும் பாராட்டபட வேண்டியவர்கள்.

 
தூக்குதல்,இறக்குதல், கொண்டுவருதல் ,பேனர்கள் கட்டுதல் ,ஒட்டுதல் என்று சுற்றி சுற்றி கள பணி ஆற்றிய மதுராந்தகம் சுரேஷ் அவர்களின உழைப்பு மிகவலுவான உறுதுணையாக நிகழ்சசிக்கு இருந்தது.அதேபோல் அனைத்த நிகழ்வுகளையும் தன்னுடைய காமிராவால் படங்களாக வீடியோக்களாக படம்பிடித்து பாதுகாத்து வைத்த சிவகங்கை -இராமநாதன் அவர்களின் உழைப்பும் என்றும் என் நன்றிகளுக்கு உரியது
மேலே சொன்னதெல்லாம் களத்தில் அரும்பாடுபட்டவர்கள் உழைத்தவர்கள் உறுதுணையானவர்கள், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு வரை பிரச்சார காலத்தில் அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்த நிகழ்வு பற்றிய அறிவிப்புகளை தொடர்ந்து பிரசாரபடுத்திய  என் சகோதரி தென்காசி .திருமதி.மீனா இசக்கிராஜா அவர்களுக்கும், நிலம் உங்கள் எதிர்காலம் டெலிகிராம் குழுவில் இந்நிகழ்வை பிரசாரபடுத்தி இந்நிகழவுக்கான நிதி உதவிகளை பெறுவதற்கும் அதனை ஒருங்கிணைத்த அண்ணன் மேலூர் முரளி மற்றும் பாபாநாசம் ஜெயகுமார் அவர்களுக்கும் பி அறகட்டளை உறுப்புனர்களானா திரு,முத்து நயினார்,திரு.முத்து கதிர்வேல் திரு.பிரகாஷ் பாண்டிசேரி. கோவை இங்க நாதன் அவர்களுக்கும்  நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆவர் 

 
இதற்கு பண உதவியாகவும் பொருளுதவியாகவும் டெலகிராமில் பயணிக்கின்ற பல நண்பர்கள் டெலகிராம் குழுவில் இல்லாத சோளிங்கர் சுற்றுவட்டார புகுதிகளில் இருக்கும் நண்பர்களும் செய்து இருந்தார்கள் !இது அவர்களின் சமூக கடமை என்று கருதுகிறேன், அன்னாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!அதனுடைய விவரம் பின்வருமாறு!
பொருளாக வந்த நன்கொடை
1)திரு.சத்தியராஜன் -சென்னை 50 நோட்புக் 50 பேனா
2)சண்முக பிரியன்(திமிரி)-புத்தர் படம் அன்பளிப்பு
3)திரு.பாலாஜி -கொண்டாபுரம் ஆர்.கே.பேட்டை                -லஞ்ச் டேபிள் ,டேபிள் ஜமுக்காளங்கள் அதனுடை வாடகை
4)திரு.சண்முகபிரியன் -5 நபருக்கு காலை இடலி டிபன் நன்கொடை
5)வேலூர் மாவட்ட இளைஞரணி பாட்டாளி மக்கள் 5மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கறி
6)விருந்தினர் 8 சால்வைகள் -வழக்கிறஞர் வினோத் ஆர் கே பேட்டை
10)Q T Associates நிகழ்ச்சிக்கு மதிய உணவு செலவு (மொத்த செலவு -4500 இல Q.T associates ரூ .3000)
11)லா பார்ட்யூன் ரியல்டி நன்கொடை ஹால் வாடகை ரூ .5000 
12)பிராப்தம் அகடமி பயிற்சி  வகுப்பு கையேடுகள் -ரூ 3000
13)திருமதி.பொம்மி (பா.ஜ.க) ஶ்ரீகாளிகாபுரம் நன்கொடை -சானிடைசர் மாஸ்க் 

நேரடியாக  வந்து என்னிடம் கொடுத்த  நன்கொடை 
1)MRK இராமகிருஷ்ணா -1000
2)அருண்குமரன் அணைகட்டு-1650

டிரஸ்ட் கணக்கில் நேரடியாக விழுந்த நன்கொடை
1) ராபின்சன் -500

சாமி.ஜி – 500

செந்தில்வேல் – 500

வெங்கடேஷ் – 1000

அறிவழகன் .T – 2000

பொன்செல்வன் – 500

திருமுருகன் – 500

பெரியசாமி – 500

தேவா (திருச்சி) -500

இராமகிருஷ்ண வேணுகோபால் -ரூ 500


அதேபோல் அன்று நடந்த மேடை நிகழ்ச்சியில் வாழ்த்துரை கொடுத்த அண்ணன் S .சண்முகம் ,மற்றும திருமதி .கிருஷ்ணவேணி  மற்றும் தனிவட்டாட்சியர் தேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கி பாராட்ட வழக்கறிஞர் வினோத் முன்னிலையிலும் J.மோகன் அவர்கள் வரவேற்புரையும் திமிரி சண்முகபிரியன் அவர்கள் நன்றியுரையும் சொல்ல நான் நிகழ்சி எப்படி நடக்க போகிறது என்ற செய்தியினை தெரிவித்து அனைவருக்கும் பொன்னாடை மொமென்டோ கொடுத்து இதன் முன் முயற்சியாளர்களை பாராட்டினேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களும் எனக்கு அழகான புத்தர் படத்தினை அன்பளிப்பாக அளித்து பாராட்டினார்கள்
இந்த சோளிங்கர் நிகழ்ச்சி வெற்றியை இதனை முன்முயற்சி எடுத்து ஒருங்கிணைத்த J.மோகன் , வழக்கறிஞர் வினோத், திமிறி சண்முகபிரியன், வீர பிரம்ம ஆச்சாரி ஆகியோருக்கு அர்பணிக்கிறேன்.
மேலும் கள்ளகுறிச்சி மற்றும்  சோளிங்கர் நிகழ்ச்சியில் தேடி வருகின்ற மக்களின் முக்கிய தேவை கருத்தரங்கத்தை விட தங்கள் நில சிக்கலிக்கான வழிகாட்டுதலாக தான் இருக்கிறது. எனவே அடுத்து வர விருக்கும் நிகழ்வுகளை முழுவதுமாக வழிகாட்டுதல் முகாமா வைத்து விட்டு மதிய உணவுக்குபிறகு சற்று இளைப்பாறும நேரம் கருத்தரங்கம் நிகழ்ச்சி ஒருவ்கிணைப்பளர்களுக்கான பாராட்டுதல் நன்றி பகிர்நல் நிகழ்ச்சிகளை செய்யலாம. என்று இருக்கிறேன்
அடுத்த நிலத்தின் நலமறிய ஆவல் -3 வழிகாட்டுதல் முகாம் அக்கோடபர் மாத இறுதியில் விழுப்பரத்தில் நடத்தலாம் என்று இருக்கிறேன். விழுப்புரம் தம்பி ரியல் எஸ்டேட் களபணியாளர் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடன் பாசத்துடன் இருக்கும் திரு.ஜெயமூர்த்தி ஒரு அரங்கத்தை பார்த்து அதனை போட்டோ எடுத்தும் போட்டு இங்கே நடத்துங்கள் என்று போன வாரமே எனக்கு தனது கோரிக்கையை வைத்து இருந்தார். அன்னாரின் முன்முயற்சியை மகிழ்வோடு ஏற்றுகொண்டு அடுத்த மாதம் அக்டோபரில் நிலத்தின் நலமறிய ஆவல்-3 விழுப்புரத்தில் நடக்கும் அதனுடைய தேதி மற்றும் பிற விவரங்கள் பிறகு அறிவிக்கிறேன்.


இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில் முனைவர்

9841665836/9962265834

#paranjothipandian #author #trainer #writer #consulting #trust #nilam_ungal_ethirkalam #donation #nilaththin_nam_ariya_aaval #training #seminar #associates #sholingar #viluppuram 

Monday, 27 September 2021

நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 2 பற்றி நல் விமர்சனம் கொடுத்த சென்னை பதிப்பகம் தின மலருக்கு நன்றி!!!

  நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 2 பற்றி நல் விமர்சனம் கொடுத்த சென்னை பதிப்பகம் தின மலருக்கு நன்றி!!!



இப்படிக்கு

சா.மு. பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர் தொழில் முனைவர்9841665836/9962265834#dinamalar#author#trainer#consulting#paranjothipandian#book#nilam_ungal_ethirkalam#land#problem#publishing

Thursday, 16 September 2021

ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.

  ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.

பொன்னான எதிர்காலத்தை அனைத்து தரப்பு மக்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் நூலின் அட்டை பக்க தலைப்பெழுத்தின் பொன்னெழுத்துக்களில் வெளிப்படுவதாய் உணர்கிறேன். தலைப்பும், அதன் எழுத்தின் வடிவமும், வண்ணமும், தாளின் தரமும் சிறப்பு!

மேலும், இந்த நூலினை அப்படியே தங்களின் ஆசிரியருக்காக அர்ப்பணித்தது இன்னும் போற்றுதலுக்குரியது. ஒரு சொத்தை வாங்கவோ, விற்கவோ அல்லது அதன் ஆவணங்களை முறைப்படுத்திடவோ இக்காலகட்டத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு தெளிவுபடுத்தியதோடல்லாமல் அதனை களைந்திட சீர்மிகு தீர்வுகளையும், சிறந்த நெறிமுறைகளையும், மிக நேர்த்தியுடன் வழங்கியுள்ளீர்கள்.
இன்னும் ஒருபடி மேலே போய் மேற்படி பிரச்சனைகளின் தொடக்கத்தை பல கோணங்களில் கூராய்வு செய்து அதனை மக்கள் மற்றும் அரசு என இரு தரப்பிலும் சீரமைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை தொகுத்ததன் மூலம் தங்களின் அனுபவம் ஆழ்ந்தகன்றது என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளீர்கள்.
இந்நூலின் மூலம் நிலத்தின் / சொத்தின் பயனை அடையும் மக்களுக்கு, நம்மிடம் உள்ள சொத்தில் என்ன இருக்கிறது? எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும்? யாரை, எப்படி அணுகுவது? போன்ற பல கேள்விகளுக்கான தீர்வுகளையும் மிகவும் நேர்த்தியாகவும், எளிமையாகவும் விளக்கியுள்ள விதம் மிகவும் சிறப்பு. மொத்தத்தில் நிலம் / சொத்து தொடர்பான எளிதில் விடைதெரியாத புதிர் போன்ற பல கேள்விகளுக்கு பாமரனிலிருந்து, படித்தவர் வரை தெளிவு பெறும் வகையில் அற்புதமான நூலாய் அமைந்துள்ளது.
புத்தகம் பற்றிய விமர்சனம்
தொகுதி 1, 2 மற்றும் 3ல் அன்றாடம் மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளையும், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
குறிப்பாக, சொத்துக்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய செய்திகளையும், பல்வேறு துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் விளக்கியவிதம் அருமை. பத்திரத்தில் வரக்கூடிய பிரச்சனைகள், பட்டாவில் வரக்கூடிய பிரச்சனைகள், சார்பதிவகங்களில் வரக்கூடிய பிரச்சனைகள், பெண்களுக்கான சொத்துரிமை குறித்த விளக்கங்கள், பஞ்சமி நிலம் குறித்த விரிவான அலசல்கள், பூமிதான இயக்கம் பற்றிய செய்திகள், நில ஆக்கிரமிப்பு மற்றும் வேலித்தகராறு போன்ற நடைமுறைச் சிக்கல்கள், மனைப்பிரிவு வாங்கும்போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்திகள், அரசு இடங்களைப் பற்றிய விளக்கமான தொகுப்புரைகள், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஆலோசனைகள், அடுக்குமாடி குடியிருப்போருக்கான பயனுள்ள செய்திகள், நிலமே இல்லாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், மேற்கண்ட விரச்சனைகள் இருந்தால் அதை தீர்க்க வேண்டி சிறந்த மனுக்களின் மூலம் அரசு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய விதங்கள் போன்றவை விரிவாக எடுத்துரைத்திருப்பது சிறப்பு.
மேலும் புரமோட்டர்களிடம தெளிவான பேச்சுவார்த்தை இல்லையெனில் பிறகு "காவடி எடுக்க வேண்டும்" என்பதிலும், "அரசாங்க அலுவலர்களுக்கு முத்திரைத்தாளும், காந்திபடம் போட்ட தாளும்தான்" கணக்கு என்பதிலும், மனைப்பிரிவு உரிமையாளருக்கு "காசு! பணம்! துட்டு! மணி!" என்ற பாடல் ரீங்காரமிடும் என்ற வரிகளிலும் மற்றும் "விக்கிரமாதித்தனின் கதையில்" வரும் சோதனை போன்றவற்றிலிருந்து தங்களின் பொதுமக்கள் மீதான அக்கறையும், எதார்த்தமான மனதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
தொகுதி 4ல் அரசால் ஏற்படுகின்ற ஒவ்வொரு விதமான பிரச்சனைகளையும், அவற்றை மக்கள் எப்படி பக்குவமாக கையாள வேண்டும்? என்கிற பல துறைகளுக்கான (வருவாய்த்துறை, பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உட்பட) படிவங்களையும் இணைத்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு துறைக்கான மனுக்களின் மாதிரிகளை சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள். கிராம நத்தம், நில உச்சவரம்பு பற்றிய விளக்கங்கள் மிகுந்த பயனளிப்பவை. அவற்றின் மேலதிகமாய் அரசு இயந்திரம் செவிசாய்க்க மறுக்கிறது எனில் அதை தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்னும் ஆயுதத்தால் முடிக்க முடியும் என்பதையும் சிறப்பாக விவரித்துள்ளீர்கள். மேலும் போர்ஜரி மற்றும் இரட்டை ஆவண குளறுபடிகளை தடுப்பதற்கான வழிமுறைகள் பயனுள்ளவை (பலர் மன எழுத தெரியாமல், அரசு அலுவலக வாசல்களில் ஒரு மனுவினை எழுத்தித்தர பெற ரூபாய் 75 முதல் 100 வரை செலவிட்டு கொண்டிருக்கிறார்கள்) நீங்கள் ஒரு களஞ்சியமாக பல்வேறு வகையான மனுக்களை வழங்கியுள்ளது சிறப்பு.
தொகுதி 5ல் உளவியல் தொடர்பான தங்களது கட்டுரை மிகச் சிறந்த ஒரு நீண்டதொரு ஆராய்ச்சியின் வடிவமாக தெரிகிறது. என்னதான் சட்ட திட்டங்களால் பிரச்சனைகளை தீர்க்க அரசு முயன்றாலும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க இயலாது என்பதை தங்களது உளவியல் கட்டுரை பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறது. "யார் என்ன சொன்னாலும், நீங்கள் தீர ஆராய்ந்து சரி என பட்டால் மட்டுமே முடிவெடுக்க வேண்டும்" என்றும்; தாங்கள் "திரிசங்கு சொர்க்கத்தை" பார்த்த கதையையும், "எவ்வளவு பெரிய அறிவாற்றல் உடைய நபர்களும், மிகப் பெரிய ஆளுமைகளும் உணர்ச்சிவசப்பட்டால் சமநிலையை இழக்கும்போது முடிவுகள் தவறாகும்" என்பன போன்ற தத்துவ வரிகள் இன்றைய உலகின் யதார்த்தமான நிகழ்வுகளை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.
மேலும் வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு இங்குள்ள பிரச்சனைகளை மிக விரிவாகவும், தெளிவாகவும் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல்; குடும்பங்களில் அம்பானியின் தாய்போல் குணமான நல்ல தாய் இருந்தால் பல பிரச்சனைகள் குறையும் என்பதும், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் உறவுகளை கையாள வேண்டிய விதம் பற்றி விளக்கியது, அயல்நாடு வாழ் இந்தியர்கள் மீதான தங்களுக்குள்ள அக்கறையை காட்டுகிறது. மேலும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் "சம்பாதிப்பது ஒரு இடம், சேமிப்பது மற்றொரு இடம்" என்று வெளியே தெரியாமல் இருப்பது அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கும் என்ற கருத்தியல் உயிரோட்டமான வரிகள்.
ஆவணங்களை முறைப்படுத்தாத சொத்துக்களை உடையவர்கள் அரசின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படும்போது அல்லது அரசின் பலன்களை அடைய வேண்டும் என்கிறபோது "கால்களில் வெந்நீர் ஊற்றிக்கொண்டு ஆவணங்களை சீர்படுத்த அரசுடன் சண்டையிடுவது" போன்ற சம்மட்டியடியான நிகழ்வுகளையும்; அப்போது ஏற்படும் வலியை போக்க அவர்கள் கொடுக்கின்ற விலை "சுண்டைக்காய் சுமைக்கூலி" பழமொழியின் மூலம் விவரித்தவிதம் மிகவும் அருமை,

தொகுதி 5 இல் தாங்கள் ஒரு சிறந்த உளவியல் மருத்துவராக மாறி சொத்துக்களை பிரச்சனை இல்லாமல் கையாளுவதற்காக தாங்கள் கூறியுள்ள சொற்பதங்கள் அனைத்தும் அனுமருந்தாக மனதில் நல்ல மாற்றங்களை உருவாக்குபவை என்றால் அது மிகையல்ல குறிப்பாக அன்பு என்பது கட்டுப்படுத்துவது அல்ல சுதந்திரமளிப்பது ஒவ்வொரு மனிதரின் கடந்த கால எதிர்மறை / நல்ல எண்ணங்கள் & அனுபவங்களின் தாக்கம் நிகழ்காலத்தில் பிரதிபலிக்கும் என்பதற்கான தத்துவம் முத்தான வரிகள் மேலும் அனுப்பு வட்டம் தொழல் வட்டம் சமூக வட்டம் இவற்றையெல்லாம் தாண்டி இறுதியில் உலக மக்கள் நலம் என்ற ஒற்றை வார்த்தை தாங்கள் இவ்வுலகத்தை நேசிக்கும் நேர்வாக நிமிர்ந்தெழுகிறது தொகுதி 6 ல் சில பிரச்சனைகள் தனி மனித வரம்புக்கு உட்பட்டவை அவைகளை பாதிக்கப்பட்ட நபர் என்ற அடிப்படையில் சரி செய்து கொள்ள இயலுமென்று சில குறிப்பிட்ட பிரச்சனைகளை அரசின் கொள்கை முடிவுகளால் மட்டுமே தீர்க்க இயலும் என்றும் அவற்றிகாக நாம் அமைப்பு சார்ந்த போராட்டங்களினால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மிக அற்புதமாக விளக்கியுள்ளார் (தங்கள் செய்யாததை சங்கம் செய்யும் என்பவை அழுத்தமான வரிகள்)

தனிப்பட்ட எனது சொந்த கருத்துக்கள்:

  1. பஞ்சமி நிலம் பற்றிய கட்டுரைகள் சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கும் வேறொரு நீதி எனில் அது சரித்திரம் அன்று சதியென்று கண்டோம்,சாதிகள் இல்லையடி பாப்பா, வெள்ளை நிறத்தொரு பூனை என்ற கவிதைகள் மூலம் சாதி முறையை மிகக் கடுமையாக எதிர்த்த பாரதியை வஞ்சப் புகழ்ச்சியாக விமர்சித்தது ஏன் எனத் தெரியவில்லை
  2. அயோத்திதாச பண்டிதர் 1892 ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கோரிக்கைக்கான பஞ்சமி நிலம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றியதை குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது
  3. இறப்பு சான்று தொடர்பாக தாங்கள் கூறிய கருத்துக்களில் தொகுதி 6(2)ல் ஒருவர் இறந்தால் உடனடியாக பதியும் தேர்வுகளில் (கிராமங்களில்) விஏஒ ஒரு பிறப்பு இறப்பு பதிவாளர் என்ற அடிப்படையில் அவர் கையொப்பமிட்ட இறப்புச் சான்று ஆன்லைனில் கிடைக்கிறது RI தாசிதார் போன்றோர்களுக்கான முன்னெடுப்பும் விசாரணையும் தேவையில்லை
  4. நமது தமிழகத்தின் நிலச்சீர்திருத்த வரலாறு ஆண்டு வாரியாக மிகச் சிறப்பான முறையில் கூறிய தங்கள் தொகுதி 3ல் 14/11/1980 அன்று கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டு கிராம முன்சீப் & கர்ணம் பதவி ஒழிக்கப்பட்டு act (3/81) 1981 யை 1985 என்று குறிப்பிட்டது ஏன்? எனத் தெரியவில்லை

சம்பல் பள்ளத்தாக்கில் காணமல்போன பிரச்சனையில் இந்திய சாட்சிய சட்டம் 108 ன் படி ஒருவர் காணமல் போனால் அவர் காணமல் போன தேதியில் போலீஸ் FIR பதிவு இருந்து ஏழு ஆண்டுகள் கழித்து மேற்படி நபர் சொத்துக்களை காணமல் போனார் என்று சான்றின் அடிப்படையில் சொத்து பரிமாற்றம் செய்யலாம் என தாங்களும் 530 பக்கம் (எண் 13ல்) தெரிவித்துள்ளீர்கள் இருந்த போதிலும் மேற்படி பிரச்சனை ஏன் கிடப்பிலேயே இருக்கிறது என நீங்கள் தெரிவித்துள்ளீர்கள்

இவற்றோடு மேலதிகமாக எனக்குத் தெரிந்தவரை நமது புத்தகத்தில் செய்ய வேண்டிய மாறுதல்களை (இன்னும் மெருகேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் சுட்டிக்காட்டும் குட்டிக் குறைகள் கொட்டிக் கொடுக்கும் கோடி நன்மைகள் என்ற கொள்கையின்படியும் சிறிய தவறுகள் திருத்தப்படாவிட்டால் பெரிய இலக்குகளை அடைய முடியாது என்ற கருத்தலின் படியும்) அச்சுப் பிழை சொற்பிழை மற்றும் பொருட்பிழை ஆகியவற்றை அட்டவணைப்படுத்தியுள்ளேன் இவற்றுள் ஏற்றதை ஆற்றுக

மொத்தத்தில் இந்த புத்தகம் அனைவரிடம் இருக்க வேண்டிய புத்தகம் என்பது புலனாகிறது ஏனெனில் இந்த புத்தகம் இருக்கும் போது அதன் மூலம் அவர்கள் பெரும் விழிப்புணர்ச்சியின் அடிப்படையில் தான் திருந்த உலகம் தானே திருந்தும் என்ற தத்துவத்தின்படி தங்களது உன்னதமான நோக்கமான நிலத்தின் பயன் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை

தங்களை பாவெல் என உருவப்படுத்தி கொண்டுள்ளதை அறிந்தேன் (அந்த காவியம் நான் படிக்கவில்லை) அதனால் என்னைப் பொறுத்தவரை தாங்கள் தனிப்போரளி தஸ்ரத் மாஞ்சி என்று உணர்கிறேன்

இப்படிக்கு நிலத்தை நேசிக்கும்

மணிவேல்

#paranjothipandian #nilam_ungal_ethirkalam #book #order #author #trainer #writer #consulting #review

Monday, 13 September 2021

பிராப்தம் ரியல்டர்ஸ் தவணைதிட்ட மனை விற்பனை அலுவலகம் கோவையில் திறக்கபட்டது!

 பிராப்தம் ரியல்டர்ஸ் தவணைதிட்ட மனை விற்பனை அலுவலகம் கோவையில் திறக்கபட்டது!

12.09.2021 அன்று கோயம்புத்தூர் மாநகரில் கணபதி 3 நம்பர் பஷ் ஸடாப் எதிரில் இருக்கும் சின்னு காம்பளக்ஸ் இரண்டாவது மாடியில் மாத தவணை முறையில் மனைகள் உருவாக்கி கொடுக்கும் என்னுடைய பிராப்தம் ரியல்டர்ஸ் நிறுவனம் திறக்கபட்டுள்ளது

2012 இல் இருந்து 2019 வரை ஏற்கனவே அலுவலகம் கோவையில் இதே கணபதியில் வேறொரு காம்ளக்ஸில் இயங்கி வந்தது. நீதிமன்றத்தின் பத்திர பதிவு தடையும் மந்தமான பொருளாதார நிலையும் கொரானா நெருக்கடியும் சேர்ந்து கோவை அலுவலகத்தை தற்காலிகமாக மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இப்படியே போனால் தொழில் இயல்பு நிலைக்கு வராது என்பதால்

இப்போழுது இந்த புதிய அலுவலகம் திறக்கபட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் தவணைதிட்ட வாடிக்கையாளருக்கும் கோவையில் நில சிக்கல் சம்மந்தமாக வருகின்ற வாடிக்கையாளருக்கும் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வேண்டி வருவோருக்கும் கோவையில் பயிற்சி நடந்தால் அதனை ஒருங்கிணைக்கவும் தொடர்புக்கான ஒரு அலுவலகமாக இந்த அலுவலகம் இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் -தொழில் முனைவர்

97896 81033

#realestate #paranjothipandian #author #trainer #writer #consulting #business #corona #office #open #new #agent #complex #coordinator #Emi #scheme

Monday, 6 September 2021

முறையான நில நிர்வாகமே தமிழ் நாடு அரசின் கடன் மீட்பு 

  

முறையான நில நிர்வாகமே தமிழ் நாடு அரசின் கடன் மீட்பு
 
                                        
 
ஆகஸ்டு மாதம் 2021 தொழில் நண்பன் மாத இதழில் ‘முறையான நில நிர்வாகம் தமிழ்நாடு அரசின் கடன் மீட்பு ‘என்ற மூன்று பக்க அளவிலான கட்டுரையை பிரசுரித்து இருக்கிறார்கள். தொழில் நண்பன் பத்திரிக்கை குழுவினருக்கு என்னுடைய அன்பும் நன்றியும்!
தொழில் நண்பன் பத்திரிக்கை தமிழகம் முழுதும் உள்ள கடைகளிலும் தமிழக அரசின் நூலகங்களிலும் கிடைக்கிறது. வாய்ப்பு இருக்கிறவர்கள் வாசியுங்கள் !விமர்சியுங்கள்! பரிமாற்றம் செய்யுங்கள்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9962265834

Thursday, 2 September 2021

திருவண்ணாமலை மாவட்ட நல் நூலகர் திரு.வெங்கடேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

  திருவண்ணாமலை மாவட்ட நல் நூலகர் திரு.வெங்கடேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!



திரு.வெங்கடேசன் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நூலகத்தின் நூலகர்!
 
பழகுதற்கு இனியவர். வா கண்ணு போ கண்ணு வா ராஜா போ ராஜா என்று அழைத்து தன்னை சுற்றி இருக்கின்ற உதவியாளர் பணியாளர்களை அழைத்து நூலக காரியங்களை நகர்த்தி விடுகிறார். என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தமிழக அரசின் நூலக துறை தேர்வு செய்து அவரின் மாவட்ட நூலகத்திற்கு அனுப்பி வைத்தது. அதனை எடுத்து அடுக்கி வைக்கும் பொழுது படித்து பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பாராட்டு மழை பொழுந்தார். நகை எல்லாம் அடமானம் வைத்து சேமிப்பு எல்லாம் சேர்த்து வைத்து சொத்து வாங்குகிறோம். நிலம் வாங்கும் பொழுது இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அறியாமலேயே இருக்கிறோம். மக்களுக்கு தேவையானதை எழுதி இருக்கிறீர்கள் என்று உளமார பாராட்டினார்
சில நாட்கள் கழித்து நான் எழுதி கொண்டு இருக்கும் புத்தகத்திற்கு எனக்கு தேவையான reference புத்தகம் ஆன்லைனிலும் சென்னை பாண்டிசேரி நூலகங்களிலும் கிடைக்கவில்லை. தேடி பார்த்து தேடி பார்த்து கொஞ்சம் அலுத்து விட்டேன். அதன் பிறுகு அண்ணனுக்கு ஒரு வாட்ஸ்அப் தகவல் அனுப்பினேன். இந்த புத்தகம் வேண்டும் என்று இரண்டு நாள் கழித்து எனக்கு pdf புத்தகமாக வாட்ஸ்அப்பில் வந்தது
உண்மையிலே மிக மகிழ்ச்சி அடைந்தேன்.தற்பொழுது திருவண்ணாமலை கள பணிக்கு வந்த பொழுது அவரை சந்தித்து நன்றி தெரிவித்து விட வேண்டும். அவரை சந்தித்தேன் நூலகத்தையும் பார்வையிட்டேன்
அதிக புரவலரை தேடி அவர்கள் வீடுகளுக்கு சென்று காத்துருந்து நூல்கள் வைப்பதற்கான ரேக்குகள் சேர்கள் நாற்காலிகள் பெற்றுள்ளார்.எம்பி எம்எல்ஏக்களை சந்தித்து போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனி அறை புத்தகங்கள் என்று உருவாக்கி வைத்து இருக்கிறார்.சிறந்த ஆசிரியருக்கு எப்படி தமிழக அரசு நல்லாசிரியர் என்று விருது கொடுக்கிறதோ அதேபோல் நல் நூலகர் என்று நூலகர்களுக்கு வழங்குகிறார்கள். அந்த நல்நூலகர் என்ற விருதினையும் பெற்று இருக்கிறார். மூன் சிட்டி என்ற ரோட்டரி கிளப்பிலும் இணைத்து கொண்டு அதன் மூலமும் கிராமபுற பெண்களுக்கு தையல் பழதல் கைத்தொழில் பழகுதல் என்று உழன்று கொண்டு இருக்கிறார்
கொரானா நெருக்கடி முடிந்த பிறகு நூலக வாசகர் வாசகர் வட்டத்தில் நிலம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறேன் என்றும் என்னை ஊக்கபடுத்தி இருக்கிறார். திருவண்ணாமலை சுற்று வட்டார மாணவர்கள் மாணவிகள் போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் இந்த நூலகத்தையும் இந்த நல் நூலகரையும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834

Wednesday, 1 September 2021

சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன்

  சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன்



தமிழசெல்வன் -பொறியியல் பட்டதாரி படித்து முடித்துவிட்டு சென்னையில் ஐடி உத்தியோகம் பார்த்துவிட்டு சென்னை வாழ்க்கை ஒத்துவராமல் மீண்டும் ஓமலூருக்கு வந்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தபொழுது அவரின் மாமா.R.மணி,செல்லப்பன் போன்றவர்கள் ரியல் எஸ்டேட்டில் ஓமலூரில் சிறந்து விளங்குவதால் ரியல்எஸ்டேட் செய்யலாம் என்று முடிவு எடுத்து கற்று கொள்ள முடிவு செய்து யூடியூப் பார்க்கும் பொழுது நமது வீடியோக்கள் அனைத்தும் பார்த்து கற்றுக் கொண்டு சேலம் ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தையும் வாங்கி படித்துவிட்டு முழு நேர ரியல்எஸ்டேட் மற்றும் ஆவண எழுத்தராக மாறிவிட்டார்.
நாம் தயாரிக்கும் பத்திரங்கள் செல்லுமோ செல்லாதோ என்ற குழப்பங்கள் அனுபவம் இல்லாதவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.அந்த தடையுடன் தான் தமிழ் தொழில் செய்து கொண்டு இருந்தார்அந்த மன தடைகளை எல்லாம் நான் என்னுடைய பேச்சின் கலந்துரையாடல் மூலம் உடைத்துவிட்டேன்
வேண்டுமென்றால் என் பெயரை பயன்படுத்திகொண்டு முன்னேற பாருங்கள் என்று அங்கீகரித்தேன்.இப்பொழுது ஓமலூர் சுற்றி நில சிக்கல் என்று வருபவர்களுக்கு நிறைய தகவல்களை சொல்லி கொடுக்கிறார்
வெற்றிகரமான ரியல்எஸ்டேட் தொழில் முனைவோருக்கு உதவி செய்து இருக்கிறேன் என்ற மனநிறைவும் இருக்கிறது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்\
9841665836/9962265834

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...