Sunday, 31 March 2019

Conscious Real-estate Movement

         
         அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கான வீட்டு மனை தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கு காலம் காலமாக அல்லல்படுகின்றனர். அரசு இலவச வீட்டு மனைகளையோ அல்லது தமிழ்நாடு அரசு குடிசைமாற்று வீடுகளையோ அல்லது புறம்போக்கு மற்றும் மானிய நிலங்களின் குடியிருப்புகளை பயன்படுத்தி வாழ்கின்றனர். இவைகளெல்லாம் ஒரு தொழில் செய்ய வேண்டி வங்கி கடனுக்கு போனால் இந்த சொத்துகளை ஈடாக வைக்க முடியாத நிலையில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்காமல் முன்னேற முடியாத பொருளாதார தடையை அந்த இடங்களும், அதனை சுற்றியுள்ள வாழிடங்களும் ஏற்படுத்துகின்றன.
           மேற்படி மக்கள் உழைத்து, சம்பாதித்து எங்காவது அங்கீகாரம் உள்ள நல்ல வீட்டு மனையை வாங்கவேண்டுமென்றால் அவர்கள் கையில் இருக்கும் பணத்திற்கு நகரத்தை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் மனைகள்தான் அவர்களுக்கு கிடைக்கிறது. நகரத்திற்கு பக்கத்திலோ அல்லது வளரும் புறநகர்களிலோ இடங்கள் வாங்கவேண்டுமென்றால் அதனுடைய அதிகபட்ச விலை ஏற்றத்தினால் அவர்களுக்கு எட்டா கனியாகவே அமைகிறது.
            மேலும் பெரு நகர்க்குள்ளே தங்களுடைய உழைப்பை எல்லாம் வாடகை கொடுத்தே அழித்துவிட்ட மக்களும், வாடகை வீட்டில் இருக்கிறோம் என்ற தாழ்வுமனப்பன்மையினாலே தங்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத மக்களாகவே இருக்கிறார்கள். வாடகை வீட்டில் இருக்கும்போது தங்களுடைய குடும்பத்தில் யாருக்காவது இறப்பு நடந்துவிட்டால் அந்த வீட்டில் பிணத்தை நல்லடக்கம் செய்யமுடியாத நிலையில் அவதிப்படுகின்ற பல மக்களை சந்தித்திருக்கிறேன். இப்படிப்பட்ட நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உடனடியாக குடியேறக்கூடிய சூழ்நிலையில் எந்தவிதமான வீட்டுமனைகளையும் யாரும் உருவாக்கி சந்தைபடுத்தவில்லை.சந்தைபடுத்தவும் வாய்ப்பு இல்லை.
            தமிழ்நாடு ரியல் எஸ்டேட் கள நிலவரத்தை பொறுத்தவரையில் அது ஒரு வரையறுக்கப்பட்ட துறை அல்ல, ஒழுங்கற்ற, வெளிப்டையற்ற, பல்வேறு சட்ட சிக்கல்களுடைய சமுதாய பிரச்சனைகளுடைய குழப்பங்கள் பல உள்ள நிலங்கள், நில ஆவணங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதுதான் ரியல் எஸ்டேட் துறை.
அதில் தெளிவாக ஆராய்ந்து மிகச் சரியான ஆவணங்களை கண்டுபிடித்து அதற்க்கு ஏற்றவாறு வீட்டு மனைகளை தேடி அமைத்துக்கொள்ளும் திறமை மேற் சொல்லும் மக்களுக்கு இன்னும் வந்தபாடில்லை.
இப்படியிருக்கின்ற மக்களுக்கு என்னுடைய 15 ஆண்டு கால கள அனுபவங்களை என்னுடன் இருக்கும் Team ஐ பயன்படுத்தி மேற்படி மக்களை ஒருங்கிணைத்து நிலங்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ஏற்றவாறு வீட்டு மனைகளை உருவாக்கி எளிய தவணை முறையில் நகரத்திற்கு வெளியே உடனடியாக குடியேறக்கூடியவாறு நல்ல தரமான DTCP அங்கீகார மனைகளை அரசுடன் இணைந்து CO-OPERATIVE வீட்டு மனை வசதி சங்கங்கள் மூலம் உருவாக்கி கொடுக்ககூடிய பணியினை செய்ய உறுதியெடுத்திருக்கிறேன்.
             பிற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வீட்டு மனைகளை உருவாக்க முதலீடுக்காக வட்டிக்கு கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டிய நிலைமை, அதற்கு அதிக இலாபம் வைக்கவேண்டிய நிலைமை, இதனால் பொருளுக்கு அதிக விலை வைக்கவேண்டிய நிலைமை, சந்தைபடுத்த வேண்டிய செலவு, முகவர்களுக்கு கொடுக்கவேண்டிய கமிஷன் என்று மேலும் மேலும் அந்த இடத்தின் விலை அதிகமாகிறது. ஆனால் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து வீட்டு மனை அமைக்கும்போது இந்த செலவுகள் இல்லாததால் அணைத்து வாடிக்கையாளர்களும் இணைந்து நிலத்தை வாங்கி அதனை சீர் செய்து அங்கீகாரம் வாங்கி பங்கிட்டு கொள்ளலாம். (உதாரணமாஉ ஒரு இடத்தின் ச.அடி ரூ.3000/-போகிறது என்றால் SOCIETY மூலம் ரூ.1000/-க்கு வீட்டு மனை உருவாக்கலாம்).
மேற்படி வீட்டு மனை வசதி CO-OPERATIVE சங்கங்கள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் குறைந்தது 100மனைபிரிவுகளை வருகின்ற 10ஆண்டுக்குள் உருவாக்கி கொடுத்து இந்த ரியல் எஸ்டேட் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தகூடிய ஒரு ரியல் எஸ்டேட் AGENT ஆக ரியல் எஸ்டேட் பயனை அணைத்து தர மக்களுக்கும் கொண்டு சேர்க்கின்ற ஒரு இயக்கத்தை அமைக்கின்ற ஒரு முன்னோடி தலைவராகவும் இருக்க ஆசைப்படுகிறேன், அதற்கு தயாராகவும் இருக்கிறேன்.
            மேற்கண்ட மக்கள் எல்லாம் பெரும்பாலும் தங்களுடைய real estate investing மனநிலையில் பயத்தின் அடிப்படையில் (FEAR BASED), பாதுகாப்பின் அடிப்படையில் (INSECURITY BASED),ஏமாற்றப்படுவோமோ என்ற எதிர்மறை எண்ண அடிப்படையில் யோசித்துகொண்டே இருப்பதால் கையில் இருக்கும் பணத்தை SURVIVAL MIND SET MODE இல் இருந்து முதலீடு செய்வதால் Real Estate Big Trends கண்ணுக்கு தெரியாமல் போய் பல ரியல் எஸ்டேட் முதலீடுகளில் தோற்று போகின்றன.
            மேலும் யாரையும் எளிதில் நம்பக்கூடிய மன நிலையில் இல்லாமல் தெரிந்தவர், நட்பு வட்டாரம், உறவினர், சொந்த பந்தம் போன்ற நபர்களை மட்டும் நம்பியே தவறான இடங்களை வாங்கிவடுகின்றனர்.
ரியல் எஸ்டேட் முதலீடுகள் மற்றும் வீட்டு மனைகள் வாங்குவது என்பது ஒரு CREATION மனநிலை அதற்கு மேலே சொன்ன SURVIVAL MIND பயன்படாது. ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற EGO இல்லாத பிரிவினை இல்லாமல் மக்கள் இணைந்து நின்றால் அருமையான வீட்டு மனைகளை நல்ல இடங்களில் உருவாக்கிகொள்ள முடியும். அதற்காக அகவிழிப்புணர்வை கடந்த 3 ஆண்டுகளாக சந்திக்கின்ற மக்களிடமும், சமூக ஊடகங்களில் எழுதியும், பேசியும் வருகின்றேன். அதன் அடிப்படையில் ஒரு Conscious Real-estate Movement என்ற இயக்கத்தை நடுத்தர மக்களிடம் கட்டியெழுப்பி அதன் மூலம் தங்களுடைய வீட்டு மனை தேவைகளை தாங்களே குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் எற்படுதிக்ககூடிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம்.
            இதற்க்கு ஒரு நம்பகமான விவரம் தெரிந்த பொறுப்பான தன்னை அர்பணிக்ககூடிய ஒரு ஒருங்கிணைப்பாளர் தேவை, அப்படிப்பட்ட ஒருங்கிணைப்பாளராக என்னை முழுமையாக தயார்படுத்தியிருக்கிறேன்.
இந்த இயக்கத்தில் இணைந்து கூட்டுறவு சங்கம் மூலம் வீட்டு மனைகளை பெற்று பயனடைய விரும்புவர்கள் கீழ்க்கண்ட GOOGLE படிவத்தில் தங்களுடைய பெயர், மற்றும் முகவரியை குறிப்பிடவும்.
https://forms.gle/4gaJVW12tvcjCdhV8


Wednesday, 13 March 2019

மார்ச் மாதம் 2019 இல் வளர்தொழில் மாத இதழில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை “பத்திரங்களை உங்களுக்கென உருவாக்குகள்”!!!!




இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் பத்திரங்களை உங்களுக்கென உருவாக்குகள்” என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நான் தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...